ஒன்னே கால் கோடி போட்டு கார் வாங்கனது அவரா... சொல்லி வெச்ச மாதிரி எல்லாரும் இந்த காரையே வாங்கறாங்க...
பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் விஷால் பரத்வாஜ் (Vishal Bhardwaj). இவர் பல தேசிய விருதுகள் மற்றும் ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளார். விஷால் பரத்வாஜ் தற்போது புத்தம் புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ (Mercedes-Benz GLE) ஆகும்.
இந்த கார், சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்தது. மும்பையில் உள்ள ஒரு மெர்சிடிஸ்-பென்ஸ் ஷோரூமில், மனைவி ரேகா பரத்வாஜ் (Rekha Bhardwaj) உடன் சென்று தனது புதிய காரை விஷால் பரத்வாஜ் டெலிவரி எடுத்துள்ளார். விஷால் பரத்வாஜ் வாங்கியிருப்பது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ காரின் 300டி 4மேட்டிக் (300d 4MATIC) வேரியண்ட் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) 96.65 லட்ச ரூபாயாக உள்ளது. ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 1.20 கோடி ரூபாய் வரும். இந்த வேரியண்ட்டின் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 265 பிஹெச்பி பவர் மற்றும் 550 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, காரின் 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது.
பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 6.9 வினாடிகளில் எட்டி விடும். அதே நேரத்தில் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 230 கிலோ மீட்டர்களாக உள்ளது. லேட்டஸ்ட் MBUX UI உடனான இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்றவை இந்த காரின் முக்கியமான வசதிகள் ஆகும்.

இவை தவிர, 4 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், ஆம்பியண்ட் லைட்டிங், எலெக்ட்ரிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் மற்றும் பின் பக்க இருக்கைகள், முன் இருக்கைகளில் மசாஜ் மற்றும் வென்டிலேஷன் வசதி, 360 டிகிரி கேமரா மற்றும் பனரோமிக் சன்ரூஃப் ஆகிய வசதிகளும், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ காரில் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது. இந்த காரில், 450டி 4மேட்டிக் (450d 4Matic) என்ற மற்றொரு வேரியண்ட்டும் விற்பனை செய்யப்படுகிறது. அதில் 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
ஆனால் அந்த வேரியண்ட்டை விஷால் பரத்வாஜ் தேர்வு செய்யவில்லை. இந்த காரில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது என்பதும், பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இருந்தாலும் பிரபல மனிதர்கள் மத்தியில் பிரபலமான காராக இது திகழ்கிறது.
முன்னதாக பாலிவுட் இயக்குனர் பால்கி (Balki), நடிகை சாய் தம்னேகர் (Sai Tamhankar) போன்ற பிரபலங்களும் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ காரை வாங்கியுள்ளனர். இயக்குனர் விஷால் பரத்வாஜை போன்று பால்கி மற்றும் சாய் தம்னேகர் ஆகியோரும் வெகு சமீபத்தில்தான் இந்த காரை வாங்கினர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி கார், பயணிகளுக்கு சௌகரியமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்குகிறது. எனவேதான் நடிகைகள் மற்றும் இயக்குனர் போன்ற பிரபலங்கள் பலரும் தொடர்ச்சியாக மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி காரை வாங்கி வருகின்றனர் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








