கார்ல பெரிய டயர்களை மாட்டி ஓட்டினால் இவ்ளோ பிரச்னைகள் வருமா! பந்தா காட்ட நெனச்சா பொழப்பு சிரிச்சிரும்!

இந்தியாவில் கார்களை மாடிஃபிகேஷன் (Modification) செய்து பயன்படுத்துவதை பலரும் விரும்புகின்றனர். குறிப்பாக பெரிய டயர்களை பொருத்தி கார் ஓட்டுவதில் பலருக்கும் அதிக ஆர்வம் இருக்கிறது. கார் உற்பத்தி நிறுவனங்கள் வழங்கும் டயர்களை அகற்றி விட்டு, அதற்கு பதிலாக பெரிய டயர்களை பொருத்தி கொள்வது அவ்வளவு நல்ல விஷயம் கிடையாது. ஏனெனில் பெரிய டயர்களை கார்களில் பொருத்துவதன் காரணமாக, ஏராளமான பிரச்னைகளை நீங்கள் சந்திக்க வேண்டியது வரும். அந்த பிரச்னைகள் என்னென்ன? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

மைலேஜ் குறையும்: பெரிய டயர்களை பொருத்தினால், பெரிய ரிம்கள் தேவைப்படும். ரிம்களின் எடை மிகவும் அதிகம். எனவே காரின் ஒட்டுமொத்த எடை அதிகரிக்கும். எனவே கார் ஓடும்போது, அதிக எரிபொருளை நுகரும். இதன் காரணமாக உங்கள் காரின் மைலேஜ் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Car Tyre Upsizing

காரை கட்டுப்படுத்துவது கடினம்: பெரிய டயர்கள் பொருத்தப்பட்ட கார்களை கண்ட்ரோல் செய்வது கடினமானது. குறிப்பாக ஸ்டியரிங்கை திருப்பும்போது, நீங்கள் பிரச்னைகளை சந்திக்கும் சூழல் உருவாகலாம். காரை கண்ட்ரோல் செய்வது கடினமாக இருந்தால், அது சாலை விபத்துக்களுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தவறான ஸ்பீடோமீட்டர் ரீடிங்: கார் உற்பத்தி நிறுவனங்கள் அவர்கள் வழங்கும் டயர் அளவுகளின் அடிப்படையில்தான், ஸ்பீடோமீட்டர் ரீடிங்குகளை டிசைன் செய்திருப்பார்கள். ஒரு வேளை அந்த டயர்களை அகற்றி விட்டு நீங்கள் பெரிய டயர்களை பொருத்தினால், இந்த அளவீடுகளில் எதிர்மறையான பாதிப்புகள் ஏற்படும்.

Tyre Upsizing

எனவே ஸ்பீடோமீட்டர் உங்களுக்கு தவறான ரீடிங்குகளை காட்ட தொடங்கி விடும். அதாவது நீங்கள் என்ன வேகத்தில் செல்கிறீர்களோ, அந்த வேகத்தை துல்லியமாக உங்களுக்கு காட்டாது. நீங்கள் சென்று கொண்டுள்ள வேகத்தை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ காட்டும். ரீடிங்குகள் தவறாக இருந்தால், காரை பாதுகாப்பாக இயக்குவதில் பிரச்னைகள் உருவாகலாம்.

விரைவில் சேதமடையும்: பெரிய டயர்கள் விரைவாகவே சேதமடைந்து விடும் பண்புகளை கொண்டுள்ளன. எனவே பெரிய டயர்களை பொருத்தி நீங்கள் காரை ஓட்டினால், டயர்களை மாற்றுவதற்கு அடிக்கடி பெரிய தொகையை செலவு செய்து கொண்டே இருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.

எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் வேலை செய்யாது: பெரிய டயர்களை பொருத்தினால், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் சரியாக வேலை செய்யாமல் போகலாம். ஏனெனில் க்ரிப் மற்றும் வேகம் ஆகிய அம்சங்களில், பெரிய டயர்கள் வித்தியாசமானதாக இருக்கும். இது எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் துல்லியமாக வேலை செய்வதில் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெரிய டயர்களை பொருத்தினால், உங்கள் கார் கம்பீரமாக தெரியலாம். ஆனால் நாங்கள் மேலே கூறியுள்ள பிரச்னைகளை எல்லாம் நீங்கள் சந்திக்க வேண்டியது வரும். எனவே கார்களில் எந்தவொரு மாடிஃபிகேஷனையும் செய்வதற்கு முன்னால், யோசித்து செயல்படுவது நன்மை பயக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, December 16, 2024, 13:15 [IST]
English summary
Disadvantages of car tyre upsizing all you need to know
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+