கணவர் ரொம்ப பெரிய பணக்காரரு ஆனாலும் இந்த நடிகை சிக்கனமா 2காரைதான் வச்சிருக்காங்க! ரெண்டுமே உலக தரம் வாய்ந்தவை!
புகழ்பெற்ற இந்திய நடிகைகளில் ஒருவராக கஜோல் காட்சியளிக்கின்றார். 1992முதல் இந்திய சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக இவர் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். மேலும் 1999இல் அஜய் தேவ்கனை மணந்தார். திரைப்படத் துறையில் அவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ மற்றும் 6ஃபிலிம்பேர் விருதுகளையும் அவர் வென்றிருக்கின்றார். இத்தகைய ஜாம்பவான் நடிகையான கஜோல் சமீபத்தில் (ஆகஸ்டு 5) தன்னுடைய 50ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த நிலையிலேயே, அவரின் பிறந்த நாள் சிறப்பாக அவரிடத்தில் இருக்கும் ஈர்க்கக் கூடிய கார் கலெக்சன் பற்றிய தகவலை இங்கே பார்க்க இருக்கின்றோம்.
கஜோல், திரையுலகைச் சேர்ந்த மற்ற நடிகர்களைப் போல அல்ல. இவரிடத்தில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே ஆடம்பர கார் இருக்கின்றன. கணவர் அஜய் தேவ்கனைக் காட்டிலும் குறைவான ஆடம்பர கார்களையே இவர் கையாண்டு வருகின்றார். அதேவேளையில், அவரிடத்தில் குறுகிய எண்ணிக்கையில் கார்கள் இருந்தாலும், அவை அனைத்தும் தரமான வாகனங்களாகக் காட்சியளிக்கின்றன. அப்படி என்ன கார்களை அவர் பயன்படுத்தி வருகின்றார் என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்கவுள்ளோம். வாங்க பதிவிற்குள் போகலாம்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எம் ஸ்போர்ட் (BMW X7 M Sport): நடிகை கஜோலிடம் இருக்கும் சொகுசு கார் மாடல்களில் மிக முக்கியமான ஒன்றாக இந்த கார் மாடல் காட்சியளிக்கின்றது. திறனை வெளிப்படுத்துவது மற்றும் சொகுசு வசதிகளை வாரி வழங்குவது என அனைத்திலும் பெஸ்ட்டான கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது.
இந்த கார் மாடலில் பிஎம்டபிள்யூ நிறுவனம் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினையே வழங்கி இருக்கின்றது. இத்துடன் ஹைபிரிட் தொழில்நுட்பத்தையும் அது வழங்கி இருக்கின்றது. இவை இரண்டும் சேர்ந்து அதிகபட்சமாக 375 எச்பி பவரையும், 520 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.
தொடர்ந்து, இந்த சொகுசு கார் வெறும் 5.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100கிமீ வேகத்தை எட்டிவிடும். இத்தகைய அதீத திறனைக் கொண்ட ஆடம்பர காரே எக்ஸ்7 எம் ஸ்போர்ட் ஆகும். லுக், தொழில்நுட்பம் மற்றும் சொகுசு என அனைத்திலும் மிக சிறந்த காராக இது இருக்கின்ற காரணத்தினாலேயே கஜோலின் பிரியமான கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது. இந்த காரின் விலை ரூ. 1.30 கோடிக்கும் அதிகம் என்பது கவனிக்கத்தகுந்தது.
பிஎம்டபிள்யூ ஐ7 (BMW i7): இது ஓர் செடான் வகை கார் மாடல் ஆகும். இதன் கூடுதல் சிறப்பு என்ன என்றால் ஐ7 ஓர் மின்சாரத்தில் இயங்கும் வாகனம் ஆகும். இந்த காரை கஜோல் குடும்பத்தினர் சமீபத்திலேயே வாங்கியிருக்கின்றனர். மேலும், கஜோல் மற்றும் அவரது கணவரான அஜய் தேவ்கன் ஆகியோர் இந்த காரில் பயணிக்கும் வீடியோ சமீபத்தில் வெளியாகியது.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மிக சிறந்த தயாரிப்பு என ஐ7 மாடலைக் கூறலாம். இது ஓர் முழு சார்ஜில் 591 கிமீ தொடங்கி 625 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக பிஎம்டபிள்யூ நிறுவனம் 101.7 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கையே வழங்கி இருக்கின்றது.
மேலும், இந்த காரின் இயக்கத்திற்காக இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இவை 544 எச்பி மற்றும் 745 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 2.03 கோடிக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகம்.
கஜோல் இடத்தில் இருக்கும் சொகுசு கார்களிலேயே இந்த இரண்டுதான் மிக முக்கியமானவை ஆகும். அதேவேளையில், அவருடைய கணவரான அஜய் தேவ்கன் இதுபோன்று ஏகப்பட்ட தரமான கார்களை வைத்திருக்கின்றார். அந்தவகையில் அவரிடத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்450 (Mercedes-Benz S450), மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 (Mercedes Maybach GLS600) ஆகிய கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.
இதுதவிர, ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) போன்ற அல்ட்ரா லக்சூரி வசதிகள் கொண்ட காரையும் அஜய் தேவ்கன் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகின்றது. மேலும், இன்னும் சில அரிய மற்றும் ஆடம்பர வகை கார் மாடல்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அஜய் தேவ்கனைக் காட்டிலும் கொஞ்சம் ஆடம்பரமற்ற நபராகவே கஜோல் அறியப்படுகின்றார். அவர் நடிப்பைத் தாண்டி விதவைகள் மற்றும் ஏழைக் குழந்தைகளுக்காக சமூக நல பணியாற்றி வருகின்றார். இதனால்தான் பாலிவுட் திரையுலகில் இவருக்கு தனி இடமும், ஃபேன்ஸ் பட்டாளமும் உண்டு.


Click it and Unblock the Notifications








