இந்தியாவில் முதல் முதலில் பென்ஸ் காரை வாங்கியவர் யார் தெரியுமா? கட்டாயம் நீங்க எதிர்பார்க்கும் பணக்காரர் இல்ல!

மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனத்தின் சொகுசு கார் (Luxury Car)-ஐ ஒரு காலத்தில் முக்கிய நகரங்களின் சாலைகளில் பார்ப்பதே மிகவும் அரிய ஒன்றாகக் காணப்பட்டது. ஒரே ஒரு யூனிட்டைப் பார்ப்பதும் குதிரை கொம்பாகவே கருதப்பட்டது. ஆனால், இன்றோ அதே மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஆடம்பர கார்கள் தெருவுக்கு ஒன்று என வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய கார் மாடலை இந்தியாவில் முதன் முதலில் வாங்கியது யார் என உங்களுக்கு தெரியுமா? இதுகுறித்த விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

ஆடம்ப அம்சங்களுக்கு பெயர் போனவையாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார் மாடல்கள் உள்ளன. இன்று சர்வ சாதாரணமானதாக காணப்படும் அதிக சொகுசான இருக்கை, வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை போன்றவை எல்லாம் பென்ஸ் கார்களிலேயே பெரிய அளவில் காணப்பட்டன. இதுமட்டுமில்லைங்க, மிக முக்கியமான பாதுகாப்பு அம்சங்களையும் இந்த காரிலேயே மிக அதிகளவில் பார்க்க முடியும் என்கிற சூழல் நிலவிக் கொண்டிருக்கின்றது.

First indian mercedes-benz owner

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. அந்தவகையில், ஏர் பேக்குகள், பிளைண்டு ஸ்பாட் அசிஸ்ட் மற்றும் அடாப்டீப் ஹெட்லைட் போன்ற உயிர் காக்கும் வசதிகளை எல்லாம் இந்த கார் உற்பத்தி நிறுவனம் மிகவும் அசால்டாக தன்னுடைய தயாரிப்புகளில் வழங்கி வந்தது. இதனால்தான் உலக அளவில் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக அமோகமான வரவேற்பு கிடைத்தது.

இத்தகைய ஓர் கார் மாடலை இந்தியாவில் முதல் முதலில் யார் வாங்கியது என்கிற சந்தேகம் நம்மில் பலருக்கும் இருக்கும். இந்த பென்ஸ் காரை முதன்முதலில் வாங்கியது ரத்தன் டாடாவோ, பிர்லாவோ அல்லது அம்பானியோ கிடையாது. பிடி சிங், எனும் நபரே இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் காரை முதலில் வாங்கி தனி நபர் ஆவார்.

அவர் டபிள்யூ124 இ220 (W124 E220) எனும் கார் மாடலையே வாங்கினார். அதேவேளையில், மெர்சிடிஸ் கார் இந்தியாவிற்கு வர டாடா மோட்டார்ஸே காரணம் ஆகும். இந்த இரு நிறுவனங்களும் கமர்சியல் வாகனங்களை உற்பத்தி செய்யும் பொருட்டு 1954 ஆம் ஆண்டில் இருந்து கூட்டணியில் இயங்கிக் கொண்டிருந்தன.

இதன் ஒரு பகுகியாகவே பென்ஸ் சொகுசு கார் டாடா வாயிலாக நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டது. 1994 ஆம் ஆண்டிலேயே இது அரங்கேற்றம் செய்யப்பட்டது. மேலும், ஆரம்பத்தில் பென்ஸ் சொகுசு கார்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளின் பயன்பாட்டிற்காகவே இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றது.

மறைந்த ரத்தன் டாடாவிற்குகூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பென்ஸ் காரே பயன்படுத்தப்பட்டன. ஆனால், இந்தியாவில் இந்த காரை முதல் தனி நபர் பிடி சிங்-கே ஆவார். இவர் டாடா மோட்டார்ஸின் அதிகாரிகளிடம் இருந்தே பென்ஸ் டபிள்யூ124 கார் மாடலை வாங்கியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்தே, இந்தியாவில் பென்ஸ் நிறுவனம் தன்னுடைய சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்தும் பணியில் களமிறங்கியது. டைம்லர் நிறுவனம் இதன் விரிவாக்கத்தை நாட்டில் மேற்கொண்டது. அது 1994 ஆம் ஆண்டில் இந்திய வர்த்தக பணிகளை விரிவாக்கம் செய்ய தொடங்கியது. இதன் அடிப்படையில் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் தன்னுடைய தலைமையகத்தைத் தொடங்கியது.

1995 ஆம் ஆண்டிலேயே நிறுவனம் அதன் முதல் மேட்-இன் இந்தியா சொகுசு காரை நாட்டில் அறிமுகப்படுத்தியது. இ-கிளாஸ், டபிள்யூ124 சீரிஸ் இ220 மாடலை இந்தியர்கள் சுலபமாக வாங்கிக் கொள்ளும் விதமாக களமிறக்கியது. கவர்ச்சி, சிறந்த ஏரோடைனமிக்ஸ் தோற்றம், அதிக உறுதியான உடல் கட்டுமானம் ஆகியவற்றிற்கு பெயர்போன கார் மாடலாக அது காட்சியளித்தது.

இதனால், இந்திய பணக்காரர்கள் பலரின் கவனத்தையும் அந்த கார் மாடல் ஈர்த்தது. இப்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சொகுசு கார் மாடல்களில் பென்ஸ் நிறுவனத்தின் கார்கள் முன்னணி இடங்களில் இருக்கின்றன. இந்த அளவிற்கே அசூர வளர்ச்சியை மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் நாட்டில் அடைந்திருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது அதிகம் விற்பனையாகும் சொகுசு கார் மாடல்களில் பென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பும் அடங்கும். இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பலரின் மிகவும் பிரியமான கார் மாடலாக பென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் உள்ளன. ரத்தன் டாடா, அம்பானி, அதானி என பலருடைய கராஜில் இந்த நிறுவனத்தின் கார்கள் இடம் பெற்றிருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Sunday, October 13, 2024, 19:00 [IST]
English summary
Discover the first indian to own a mercedes benz car pd singh here is more details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+