இவங்க எல்லாரும் டிவி ஸ்டார்களா! வச்சிருக்க கார பாத்தா அப்படி யாருமே சொல்ல மாட்டங்க! இவ்ளோ விலை உயர்ந்த கார்களா

இந்தியாவில் சொகுசு கார்கள் மிக அதிகமாக விற்பனையாவதற்கு காரணமே திரைப்பட நடிகர்கள்தான் என கூறலாம். அந்த அளவிற்கே ஒரு சில நடிகர்கள் ஆடம்பர வகை கார்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, பாலிவுட் திரை உலகைச் சேர்ந்த உச்ச நட்சத்திரங்கள் சிலர் மாதத்திற்கு ஒன்று என ஆடம்பர வகை கார்களை வாங்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பாலிவுட் திரை உலகைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, பாலிவுட் டிவி ஸ்டார்கள் சிலரும் மிகப் பெரிய கார் விரும்பிகளாக இருக்கின்றனர்.

இதற்கு சான்றாக இருக்கும் டாப் 5 டிவி ஸ்டார்களையும், அவர்கள் பயன்படுத்தி வரும் கார் மாடல்களைப் பற்றியுமே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, அந்த காரின் சிறப்புகள் மற்றும் விலை விபரங்களையுமே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Luxury cars of indian tv celebrities

அஷ்னூர் கவுர்: மிகவும் குறைவான வயதுடைய பாலிவுட் டிவி ஸ்டாராக இவர் காட்சியளிக்கின்றார். முன்னணி நடிகைகளுக்கு இணையான நபராக இவர் டிவி உலகில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு சான்றாகவே அவர் பயன்படுத்தி வரும் சொகுசு கார் மாடல் இருக்கின்றது.

அஷ்னூர் கவுர் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சொகுசு கார் மாடல்களில் ஒன்றான எக்ஸ்3-யையே பயன்படுத்தி வருகின்றார். அதன் ஆரம்ப விலையே ரூ. 61.90 லட்சம் ஆகும். இதன் அதிகபட்ச விலை ரூ. 67.90 லட்சம் ஆகும். இது ஓர் சொகுசு வசதிகள் நிரம்பிய செடான் வகை கார் மாடல் ஆகும்.

சொகுசு வசதியில் மட்டுமல்ல எஞ்சின் திறனிலும் இந்த கார் மிக சிறந்த தயாரிப்பாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், 2.0 லிட்டர், 4 சிலிண்டர், டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 252 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் ஆற்றலை வெளிப்படுத்தும்.

இத்தகைய சூப்பரான திறனை வெளியேற்றும் காரையே அஷ்னூர் கவுர் பயன்படுத்தி வருகின்றார். முக்கிய டிவி ஷோ-க்களான யெஹ் ரிஷ்தா கியா கெஹ்லதா மற்றும் ஜான்சி கி ராணி ஆகியவற்றில் காண முடியும். இதுதவிர, சில பாலிவுட் படங்களிலும் இவர் தோன்றியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. சஞ்சு மற்றும் மன்மர்சியன் ஆகிய படங்களிலேயே இவர் நடித்திருக்கின்றார்.

அவ்நீத் கவுர்: பாலிவுட் டிவி உலகின் மற்றுமொரு இளம் வயது நடிகையாக அவ்நீத் கவுர் இருக்கின்றார். இவர் ரேஞ்ஜ் ரோவர் வெலார் சொகுசு கார் மாடலையே பயன்படுத்தி வருகின்றார். இந்த கார் மாடலின் ஒரே யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 87 லட்சம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இது பிரீமியம் மற்றும் சொகுசு அம்சங்கள் நிரம்பிய கார் மாடல் ஆகும். பிவி ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஏர் சஸ்பென்ஷன், கேபின் ஏர் ஐயோனைசேஷன், மெரிடியன் சவுண்டு சிஸ்டம் என ஏகப்பட்ட அம்சங்களையே இந்த கார் தாங்கியிருக்கின்றது.

இத்தகைய ஓர் ஆடம்பர அம்சங்களைக் கொண்ட சொகுசு காரையே அவ்னீத் கவுர் தன் வசம் வைத்திருக்கின்றார். இவர் முன்னணி டிவி ஷோக்களான மெரி மா மற்றும் அலாவுதின் - நாம் தோ சுனா ஹோகா ஆகிய ஷோக்களிலேயே இவர் தோன்றியிருக்கின்றார். இதுதவிர டிகு வெட்ஸ் ஷெரு எனும் படத்திலும் இவர் நடித்திருக்கின்றார்.

தேஜஸ்வி பிரகாஷ்: பிக் பாஸ் 15 வின்னர் இவர் ஆவார். இவர், இந்திய பணக்காரர்களின் பிரியமான கார் மாடலான ஆடி க்யூ7 எஸ்யூவி காரையே பயன்படுத்தி வருகின்றார். இந்த காரின் ஆரம்ப விலையே ரூ. 82.49 லட்சம் ஆகும். இதன் அதிகபட்ச விலை ரூ. 90 லட்சம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மிகவும் கவர்ச்சியான தோற்றம் மற்றும் சொகுசு அம்சங்களை மிக தாராளமாகக் கொண்டிருக்கும் கார் மாடல் இது இருக்கின்றது. இத்தகைய ஓர் ஆடம்பர காரையே தேஜஸ்வி பிரகாஷ் பயன்படுத்தி வருகின்றார். பிக் பாஸ் 15 மட்டுமல்ல இவர் இன்னும் பல டிவி ஷோக்களில் பணியாற்றியிருக்கின்றார். அந்தவகையில், ஸ்வரகினி - ஜோடைன் ரிஸ்தான் கே சுர் மற்றும் ஃபியர் ஃபேக்டர்: கட்ரோன் கே கில்லாடி 10 ஆகியவற்றிலும் இவர் பணியாற்றியிருக்கின்றார்.

உர்ஃபி ஜாவத்: பரபரப்புக்கும், சர்ச்சைக்கும் பெயர்போன நபராக உர்ஃபி இருக்கின்றார். குறிப்பாக, இவர் அணியும் ஆடையே அவரை ஹாட் டாபிக்காக பலமுறை மாற்றியிருக்கின்றது. அந்த அளவிற்கே முற்றிலும் விநோதமான உடையை அணிந்து அவர் பொதுவெளியில் தோன்றி வருகின்றார். இவரிடத்தில் இருக்கும் மிக முக்கியமான கார் மாடல்களில் ஒன்றாக ஜீப் காம்பஸ் இருக்கின்றது.

10.1அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், எல்இடி பகல்நேர மின் விளக்கு மற்றும் அலாய் வீல் என ஏகப்பட்ட சிறப்பம்சங்களைத் தாங்கிய ஓர் ஆடம்பர கார் மாடலே ஜீப் காம்பஸ் ஆகும். உர்ஃபி பல முன்னணி டிவி ஷோக்களில் பணியாற்றியிருக்கின்றார். அந்தவகையில், மெரி துர்கா, பஞ்ச் பாத் சீசன்2 மற்றும் பாபன்னாஹ் ஆகிய ஷோக்களிலேயே இவர் பணியாற்றியிருக்கின்றார். இதுதவிர, பிக் பாஸ் ஓடிடி சீசன்1-லும் அவர் பங்கேற்றிருக்கின்றார்.

ஆர்தி சிங்: பாலிவுட் பிக்பாஸ் போட்டியாளர் இவர் ஆவார். இவர் மஹிந்திரா தார் கார் மாடலை பயன்படுத்தி வருகின்றார். இதன் மதிப்பு ரூ. 14.16 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடல்களில் ஒன்றாக தார் எஸ்யூவி விளங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் இந்த கார் மாடல் பன்முக எஞ்சின் தேர்வுகளுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், இது ஓர் மிக சிறந்த ஆஃப்-ரோடு வாகனமாகும். அதேவேளையில், தினசரி பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாகவும் தார் உள்ளது. இத்தகைய காரையே பிக்பாஸ் 13 போட்டியாளரான ஆர்தி சங் சமீபத்தில் வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த நடிகைகள் டிவி ஷோக்களை தொகுத்து வழங்குபவர்களாக இருந்தாலும், அவர்கள் வைத்திருக்கும் கார்கள் அவர்களை முன்னணி நட்சத்திர நடிகர்களுக்கு இணையாக தோன்ற செய்யும் வகையில் இருக்கின்றது. தங்களின் அந்தஸ்தை உயர்த்திக் காட்டும் பொருட்டே இவர்களில் பலர் விலை உயர்ந்த ஆடம்பர கார்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Sunday, August 25, 2024, 22:00 [IST]
English summary
Discover the luxury cars owned by indian tv stars including krushna karan kundrra and urfi javed
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+