புது மாப்பிள்ளை, மணப்பெண்ணிடம் இத்தனை கார்களா!.. இந்தியாவையே மிரள வச்சுட்டாங்க இந்த புது ஜோடி!

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாக முகேஷ் அம்பானி குடும்பம் அறியப்படுகின்றது. இந்த குடும்பத்தினரிடத்தில் இல்லாத காரே இல்லை என கூறிவிடலாம். அந்த அளவிற்கு மிக மிக அதிக எண்ணிக்கையில் அவர்களிடத்தில் கார்கள் பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக, இந்தியாவில் விற்பனையில் உள்ள மிகவும் உயரிய விலைக் கொண்ட மற்றும் அதி-நவீன சொகுசு கார்களை இந்த குடும்பத்தினர் தங்கள் வசம் வைத்திருக்கின்றனர். இதேபோல், முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சன்ட் ஆகியோரும் மிகப் பெரிய கார் காதலர்களாக இருக்கின்றனர்.

இதை உறுதிப்படுத்தும் விதமாக ஏகப்பட்ட விலை உயர்ந்த மற்றும் அரிய வகை கார் மாடல்கள் இந்த ஜோடியிடம் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றின் லிஸ்ட்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். கார் மாடலையும், அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Ambani and merchant s opulent cars

பென்ட்லீ கான்டினென்டல் ஜிடிசி (Bentley Continental GTC): பென்ட்லீ கான்டினென்டல் ஜிடிசி இது சாதாரண கார் மாடல் அல்ல. இது ஓர் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த, அதிக செயல் திறன்மிக்க கார் மாடலும் ஆகும். மேலும், இந்த கன்வெர்ட்டிபிள் கார் மாடலில் பல்வேறு அம்சங்கள் மிக தாராளமான மனதுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த காரை முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஆகியோரே புதுமுன தம்பதிகளுக்கு பரிசாக வழங்கி இருக்கின்றனர். சமீபத்தில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் இருவரின் நிச்சயதார்த்தத்தின்போதே இந்த கார் பரிசாக வழங்கப்பட்டது. இதன் விலை ரூ. 3.71 கோடிக்கும் அதிகம் ஆகும்.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆஃப்-ரோடு திறன்களுக்கு பெயர் பெற்ற இந்த காரில் 4.0 லிட்டர் வி8 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 577 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் ஆற்றலையும் உருவாக்கும் திறன் கொண்டது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி (Mercedes-Benz G63 AMG): பென்ஸ் நிறுவனத்தின் மிக சிறப்பான தயாரிப்புகளில் ஒன்றாக இந்த கார் மாடல் இருக்கின்றது. இந்த கார் மாடலின் கணிசமான யூனிட்டுகளை அம்பானி குடும்பத்தினர் வைத்திருக்கின்றனர். ஒன்றிற்கும் மேற்பட்ட யூனிட்டுகளையே அவர் வைத்திருக்கின்றார்.

இது ஓர் மிக சிறந்த ஹார்ட்கோர் ஆஃப்-ரோடர் கார் மாடல் ஆகும். இதன் வலுவான கட்டமைப்பு மற்றும் சக்திவாய்ந்த எஞ்சின் உள்ளிட்டவற்றின் காரணத்தினாலேயே பலரின் மனம் கவர்ந்த காராக இதை மாற்றி இருக்கின்றது. இதனால் இந்த கார் மாடலின் பல யூனிட்டுகளை அம்பானி குடும்பத்தினர் தங்கள் வசம் வைத்திருக்கின்றனர்.

மேலும், கான்வாயிலும் அதிக எண்ணிக்கையில் இந்த கார் மாடல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 4.0 லிட்டர் வி8 மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 577 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் விலை ரூ. 4 கோடிக்கும் அதிகம் ஆகும்.

ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue): திரைப் பிரபலங்கள் பலரின் பிரியமான கார் மாடலாக இது இருக்கின்றது. இந்த கார் மாடலுக்கு தொழிலதிபர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாக பலரை கூறலாம். அவர்களில் ஒருவராகவே ஆனந்த் அம்பானி இருக்கின்றார்.

இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலையே ரூ. 2.38 கோடி ஆகும். இத்தகைய மிக மிக விலை உயர்ந்த சொகுசு காரையே ஒன்றிற்கு மேற்பட்ட யூனிட்டுகளை அம்பானி குடும்பத்தினர் வைத்திருக்கின்றனர். எந்த மாதிரியான நிலப்பரப்பையும் இந்த கார் மாடல் சமாளித்துவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமாதிரியான காரணத்தினாலேயே இந்த காரை தொழிலதிபர்களும், திரைப்பிரபலங்கள் அதிகளவில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். பெட்ரோல் டீசல் ஆகிய ஆப்ஷன்களில் இந்த கார் விற்பனைக்கு கிடைக்கின்றது.

மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் (Mercedes-Benz S-Class): இந்திய பணக்காரர்களின் பிரியமான சொகுசு கார் மாடல் இதுவாகும். இதன் டபிள்யூ221 (W221) மாடலையே ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சன்ட் ஜோடிகள் வைத்திருக்கின்றனர். இந்த சொகுசு அவர்களின் கார் சேகரிப்பில் உள்ள மிக முக்கியமான வாகனமாகும். இதன் பெட்ரோல் வெர்ஷன் 362பிஎச்பி பவரையும், டீசல் வெர்ஷன் 282பிஎச்பி பவரையும் உற்பத்தி செய்யும். இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ.1.76கோடி ஆகும்.

பிஎம்டபிள்யூ ஐ8 (BMW i8): ஆனந்த் அம்பானியிடம் இருக்கும் மற்றுமொரு மிக முக்கியமான சொகுசு மற்றும் சூப்பர் கார் மாடலாக இந்த வாகனம் இருக்கின்றது. அவர்கள் வைத்திருப்பது ப்ரோடோனிக் ரெட் எடிஷன் ஆகும். ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடனேயே உலக சந்தையில் இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதுதவிர இன்னும் பல அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதனால்தான் இந்திய பணக்கார குடும்பத்தினரின் சேகரிப்பில் இந்த கார் மாடலும் இடம் பிடித்திருக்கின்றது. இந்த காரில் அதீத திறனை வெளியேற்றும் வசதிக் கொண்டு 3 சிலிண்டர் 1.5 லிட்டர் எஞ்சின் வழங்கப்பட்டு உள்ளது. இது அதிகபட்சமாக 228 பிஎச்பி பவைரயும், 320 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டிடம் உள்ள கார்கள் சொகுசு வசதியிலும், செயல்திறனை வெளியற்றுவதிலும் கை தேர்ந்த வாகனங்களாக இருக்கின்றன. இதை பிரதிபலிக்கும் வகையிலேயே பென்ட்லீ கான்டினென்டல் ஜிடிசி மற்றும் பிஎம்டபிள்யூ ஐ8 (BMW i8) ஆகிய கார் மாடல்கள் உள்ளன. இதுமட்டுமில்லைங்க, இதுபோன்று இன்னும் பல கார்கள் அவர்களிடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, July 13, 2024, 15:00 [IST]
English summary
Discover the opulent car collection of anant ambani and radhika merchant
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+