22 கோடி ரூபா மதிப்புள்ள காரை ஒட்டி கொண்டிருக்கும் இந்தியர்.. இவர் அம்பானி இல்ல..
உங்களில் பலர் இந்தியாவின் மிக மிக விலை உயர்ந்த காரை அம்பானி அல்லது அவரது குடும்பத்தினரே வைத்திருப்பார்கள் என நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், அம்பானி மற்றும் அதானி இவர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மிக மிக விலை உயரிய ஆடம்பர கார்ளை பயன்படுத்தி வரும் இந்தியர்கள் நம் நாட்டிலேயே இருக்கின்றனர். அந்தவகையில், அம்பானி மற்றும் அதானி இவர்கள் இருவரையும் சாராத இந்தியாவின் நான்கு பெரும் பணக்காரர்கள் ஒட்டுமொத்த நாட்டையும் மிரள செய்கின்ற வகையில் மிகவும் காஸ்ட்லியான காரை பயன்படுத்தி வருகின்றனர்.
அவர்கள் யார்? அப்படி என்ன ஆடம்பர கார் மாடல்களை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்? அந்த சொகுசு கார்களின் மதிப்பு இந்திய மதிப்பு என்ன? என்பது போன்ற மிக சுவாரஷ்யமான விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் VIII இடபிள்யூபி (Rolls Royce Phantom VIII EWB): இந்தியாவின் மிக மிக விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் மாடல் இதுவே ஆகும். இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 22 கோடிக்கும் அதிகம் ஆகும். இவ்வளவு விலை உயர்ந்த காரை இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான யோஹன் பூனவல்லா-வே பயன்படுத்தி வருகின்றார்.
இவர் பற்றி அறியாத கார் காதலர்களே இருக்க முடியாது. ஏனெனில், இந்தியாவில் உள்ள மிகுந்த கார் ரசனைக் கொண்ட பணக்காரர் இவரே ஆவார். இதற்காக இவருக்கு வெளிநாடுகளில் விருதுகூட வழங்கப்பட்டு இருக்கின்றது. இவரிடத்தில் இந்த கார் மட்டுமல்ல இன்னும் பல அரிய வகை கார் மாடல்களும் பயன்பாட்டில் இருக்கின்றன.

பென்ட்லீ முஸ்லேன் இடபிள்யூபி சென்டனரி எடிசன் (Bentley Mulsanne EWB Centenary Edition): இந்த கார் மாடலின் ஒரே யூனிட்டின் மதிப்பு மட்டுமே ரூ. 14 கோடி ஆகும். பெங்களூருவைச் சேர்ந்த பிரிட்டிஷ் பயலாஜிக்கல் நிறுவனத்தின் சேர்மேன் விஎஸ் ரெட்டியே இந்த காரை இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றார்.
இந்த காரை இந்தியாவில் வாங்கிய முதல் நபரும் இவரே என கூறப்படுகின்றது. இந்த கார் ஓர் சிறப்புமிக்க கார் மாடல் ஆகும். தன்னுடைய நூற்றாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டே இந்த கார் மாடலை அது சிறப்பு பதிப்பாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இத்தகைய காரை ஓர் இந்தியர் பயன்படுத்தி வருகின்றார் என்பது ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான பெருமை ஆகும்.

ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் (Rolls Royce Ghost Black Badge): இந்த காரை இந்தியாவைச் சேர்ந்த ஓர் முன்னணி நடிகர் பயன்படுத்தி வருகின்றார். அவர் வேறு யாருமல்ல பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஸ்மி-தான் அவர் ஆவார். இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் மதிப்பு மட்டுமே ரூ.12.5கோடி ஆகும். இத்தகை மிக மிக விலை உயர்ந்த கார் மாடலை ஓர் நடிகர் வைத்திருக்கின்றார் ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே ஆச்சரியமான விஷயம் ஆகும்.
மெக்லாரன் 765 எல்டி ஸ்பைடர் (McLaren 765 LT Spider): இந்த காரை ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓர் பெரும் பணக்காரரே பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் மதிப்பே ரூ. 12 கோடி ஆகும்.
மெக்லாரன் 765 எல்டி ஸ்பைடர் ஓர் சூப்பர் கார் மாடல் ஆகும். இதை சாலையில் வைத்து மட்டுமல்ல ரேஸ் டிராக்கில் வைத்தும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. நசீர் கான் என்பவரே இந்த காரை இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றார். இந்த காரும் வேறு யாரிடத்திலும் இல்லை என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதை விட விலை உயர்ந்த காரை அம்பானி குடும்பத்தினர் பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 90 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடி ஏ9 கேமிலியோன் (Audi A9 Chameleon) எனும் கார் மாடலை அம்பானியின் மனைவி நீதா அம்பானி பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.


Click it and Unblock the Notifications









