காரில் வித்தை காட்டிய பிரபல தமிழ் பட நடிகை! அவங்களா இது! விட்டா அஜீத்தையே தூக்கி சாப்பிட்றுவாங்கலாட்ட இருக்கு!
இந்தியாவை பொறுத்தவரை நடிகைகள் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் பயணம் செய்வது என்பது வழக்கமான ஒரு விஷயம்தான். ஆனால் டிரைவர் இருக்கையில் அவர்களை காண்பது என்பது அரிதான ஒரு விஷயமாகவே இருக்கிறது. இந்திய நடிகைகள் பெரும்பாலும் கார்களை ஓட்டுவதில்லை. டிரைவர்கள் மூலமாகவே அவர்கள் பயணம் செய்கின்றனர். அப்படி இருக்கும்போது, அரிதிலும் அரிதாக பிரபல நடிகை ஒருவர் தற்போது கார் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் கார் சாகசத்தில் ஈடுபட்ட வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது பிரபல நடிகையான திஷா படானி (Disha Patani) ஆவார். இவர் சமீபத்தில் வெளியான கங்குவா (Kanguva) திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்த நிலையில், திஷா படானி தற்போது கார் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வைரல் வீடியோ திஷா படானியின் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் கார் சாகச நிகழ்வுகளை நடத்துவதற்கு என்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இடம் போல் தெரிகிறது. அனேகமாக எதாவது ரேஸ் டிராக்காக இருக்கலாம்.
உண்மையில் இது போன்ற இடங்களில்தான் கார் சாகசங்களை செய்ய வேண்டும். பொது சாலைகளில் செய்ய கூடாது. ஆனால் இதை புரிந்து கொள்ளாமல், ஒரு சிலர் பொது சாலைகளில் மிகவும் அபாயரகமான கார் சாகசங்களை செய்து வருகின்றனர். இது சாலையை பயன்படுத்தும் மற்றவர்களுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

சரி, விஷயத்திற்கு வருவோம். கார் சாகசத்தில் ஈடுபடுவதற்கு திஷா படானி பயன்படுத்தியது டபிள்யூ203 மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் (W203 Mercedes Benz C-Class) கார் ஆகும். இது செடான் ரகத்தை சேர்ந்தது. இது சாகசங்களை செய்வதற்கு ஏற்ற வகையில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட கார் ஆகும்.
இந்த காரில் திஷா படானி டிரைவர் இருக்கையில் இருக்க, முன் பக்க பயணியின் இருக்கையில் மற்றொருவர் அமர்ந்துள்ளார். அனேகமாக அவர் கார் சாகச பயிற்சியாளராக இருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம். திஷா படானியின் வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், இந்த கார் சாகசத்திற்காக ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நடிகை திஷா படானி மிகவும் தீவிரமான கார் காதலர் ஆவார். அவரிடம் உள்ள மிகவும் விலை உயர்ந்த கார்களே இதற்கு சாட்சி. நடிகை திஷா படானியின் கார் கலெக்ஸன் (Car Collection) உண்மையிலேயே மிகவும் பெரியதாக உள்ளது.
இதில், பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் (BMW 7-Series), ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport), ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Range Rover Autobiography) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்450 (Mercedes Benz S450) போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். அத்துடன் முந்தைய காலங்களில் செவர்லே க்ரூஸ் (Chevrolet Cruze) மற்றும் ஹோண்டா சிவிக் (Honda Civic) போன்ற கார்களையும் அவர் வைத்திருந்தார்.


Click it and Unblock the Notifications








