செதுக்கி வெச்ச சிலை மாதிரி இருக்காங்க! 2 கோடி ரூபாய் காரில் வந்தது அவங்களா! தூக்கத்தை தொலைத்த இளசுகள்!
இந்திய திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் (BMW 7-Series). இது சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். நடிகர் (Actors), நடிகைகள் (Actresses) பலரும் பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரை அடுத்தடுத்து வாங்கி வருகின்றனர்.
இந்த வரிசையில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருக்கும் திஷா படானி (Disha Patani), தற்போது பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரை வாங்கியுள்ளார். இவர் 'எம்எஸ் டோனி தி அன்டோல்டு ஸ்டோரி' உள்ளிட்ட திரைப்படங்களில் (Movies) நடித்ததன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக மாறியவர் ஆவார்.

தனது புத்தம் புதிய பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரை திஷா படானி பயன்படுத்தும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. திஷா படானி வாங்கியிருப்பது பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரின் 740ஐ எம் ஸ்போர்ட் (740i M Sport) வேரியண்ட் ஆகும்.
இந்த வேரியண்ட்டின் எக்ஸ் ஷோரூம் விலையே (Ex-Showroom Price) 1.78 கோடி ரூபாய் வருகிறது. ஆன் ரோடு விலை தோராயமாக 2.05 கோடி ரூபாய் வரும். இதன் மூலம் திஷா படானியின் கார் கலெக்ஸனில் (Car Collection) மிகவும் விலை உயர்ந்த கார்களில் ஒன்றாக பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரை கூற முடியும்.

திஷா படானி வாங்கியுள்ள புதிய பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரில், 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 375 பிஹெச்பி பவர் மற்றும் 520 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. உருவத்தில் பெரியதாக இருந்தாலும் கூட, பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5.4 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறனை இந்த கார் பெற்றுள்ளது. இந்த காரில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் (Mild Hybrid System) வழங்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இதுதவிர சொகுசு கார் என்பதற்கு ஏற்ப, 14.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பனரோமிக் சன்ரூஃப், ஆம்பியண்ட் லைட்டிங் மற்றும் மசாஜ் செய்து கொள்ள கூடிய வகையிலான இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளும் (Features) பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport) மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்450 (Mercedes-Benz S450) ஆகிய கார்கள் எல்லாம் ஏற்கனவே திஷா படானியிடம் இருக்கின்றன. இந்த வரிசையில் தற்போது அவரது கார் கலெக்ஸனில் இணைந்துள்ள பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் கார், திஷா படானிக்கு சொகுசான பயணத்தை வழங்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








