தள்ளாடியபடியே கார் கதவை திறந்த பிரபல நடிகை! சூர்யாவின் கங்குவா படம் ஊத்திகிட்டதால இப்படி ஆயிட்டாங்களா?

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series). குறிப்பாக திரையுலக பிரபலங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் பலரிடமும், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் இருக்கிறது. தற்போதைய நிலையில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் ஆரம்ப விலையே 1.81 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 1.84 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை புது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 14.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் என பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரில் ஏராளமான அதிநவீன மற்றும் சொகுசு வசதிகள் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன.

Disha Patani Struggles To Open The BMW 7 Series Car Door

செயல்திறனை பொறுத்தவரையில், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரில், 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. இதில், பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 375 பிஎஸ் மற்றும் 520 என்எம் டார்க் ஆக இருக்கிறது.

அதே நேரத்தில் டீசல் இன்ஜினின் பவர் அவுட்புட் 286 பிஎஸ் மற்றும் 650 என்எம் டார்க் ஆக உள்ளது. இந்த 2 இன்ஜின்களுடனும், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்தான் இணைக்கப்பட்டுள்ளது. ஆடி ஏ8எல் (Audi A8L) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-Class) ஆகிய கார்களுக்கு எல்லாம் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது.

Disha Patani

இந்த விலை உயர்ந்த சொகுசு காரில் பிரபல நடிகை ஒருவர் பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது பிரபல நடிகையான திஷா படானி (Disha Patani) ஆவார்.

இவர் பல்வேறு மொழி ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறார். சூர்யா (Suriya) நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா (Kanguva) மற்றும் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான எம்.எஸ்.டோனி: தி அன்டோல்டு ஸ்டோரி (M.S. Dhoni: The Untold Story) உள்ளிட்ட திரைப்படங்களில் எல்லாம் திஷா படானி நடித்துள்ளார்.

தற்போது நாம் பார்க்கும் வைரல் வீடியோவில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் கதவை திறப்பதற்கு திஷா படானி தடுமாறுவதை நம்மால் பார்க்க முடிகிறது. சிறிய தடுமாற்றத்திற்கு பிறகுதான், அவர் காரின் பின் இருக்கையில் அமர்கிறார். ஆனால் இந்த தடுமாற்றத்திற்கான காரணம் என்ன? என்பது சரியாக தெரியவில்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மும்பை (Mumbai) நகரின் பந்த்ரா (Bandra) பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக யூடியூப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பார்ட்டிகளுக்கு பெயர் பெற்ற இடம் ஆகும். எனவே பாலிவுட் நடிகர், நடிகைகள் பலரை இங்கு அடிக்கடி காண முடியும். இதன் காரணமாக திஷா படானி மது அருந்தியிருக்கலாம் என பலரும் சந்தேகித்து வருகின்றனர்.

இன்னும் ஒரு சிலரோ கங்குவா தோல்வியால் ஏற்பட்ட சோகத்தில் திஷா படானி மது அருந்தியிருக்கலாம் எனவும், இதனால்தான் அவர் கார் கதவை திறக்க தடுமாறினார் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் கடந்த காலங்களில் பேட்டிகளின்போது, தனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என திஷா படானி கூறியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே வேறு ஏதேனும் ஒரு காரணத்தால்தான், அவர் கார் கதவை திறக்க தடுமாறியிருப்பார் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 21, 2024, 20:06 [IST]
English summary
Disha patani struggles to open the bmw 7 series car door viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+