தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வாங்கிய புதிய காரின் விலை ரூ.11 கோடி... மலைக்க வைக்கும் பின்னணி...

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ 11 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இனி பார்க்கலாம்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வாங்கிய புதிய காரின் விலை ரூ.11 கோடி... மலைக்க வைக்கும் பின்னணி...

எம்டிபி நாகராஜ் (MTB Nagaraj) என்ற அரசியல்வாதியை பற்றி நீங்கள் கேள்விபட்டுள்ளீர்களா? உங்களில் சிலருக்கு அவரை தெரிந்திருக்கலாம். சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம். கடந்த சில வாரங்களுக்கு முன் இவரது பெயர் செய்திகளில் பலமாக அடிபட்டது. கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் இவரும் ஒருவர்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வாங்கிய புதிய காரின் விலை ரூ.11 கோடி... மலைக்க வைக்கும் பின்னணி...

எம்டிபி நாகராஜ் கர்நாடக மாநிலம் ஒசக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வந்தார். இந்த சூழலில் கர்நாடக மாநில அரசியலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு கவிழ்ந்து, பாஜக ஆட்சியை பிடித்தது. எடியூரப்பா முதல் அமைச்சராக பதவியேற்றார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வாங்கிய புதிய காரின் விலை ரூ.11 கோடி... மலைக்க வைக்கும் பின்னணி...

அந்த சமயத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களில் எம்டிபி நாகராஜூம் ஒருவர். இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்டிபி நாகராஜின் பெயர் தற்போது செய்திகளில் மீண்டும் பலமாக அடிபட தொடங்கியுள்ளது. ஆனால் இம்முறை முற்றிலும் வேறொரு வித்தியாசமான காரணத்திற்காகதான் அவர் பெயர் செய்திகளில் அடிபட்டு வருகிறது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வாங்கிய புதிய காரின் விலை ரூ.11 கோடி... மலைக்க வைக்கும் பின்னணி...

எம்டிபி நாகராஜ் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். கார் வாங்கியதெல்லாம் பெரிய செய்தியா? என நீங்கள் நினைத்து விட வேண்டாம். எம்டிபி நாகராஜ் வாங்கியிருப்பது ஒன்றும் சாதாரண கார் கிடையாது. ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII (Rolls Royce Phantom VIII) காரைதான் எம்டிபி நாகராஜ் தற்போது சொந்தமாக்கியுள்ளார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வாங்கிய புதிய காரின் விலை ரூ.11 கோடி... மலைக்க வைக்கும் பின்னணி...

இதில் அப்படி என்ன சிறப்பு என கேட்கிறீர்களா? இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் கார்களில் இதுதான் மிகவும் விலை உயர்ந்த மாடல். இந்த செய்தி எப்படி வெளி உலகத்திற்கு வந்தது தெரியுமா? இந்த காருடன் எம்டிபி நாகராஜ் இருக்கும் புகைப்படத்தை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிவேதித் ஆல்வா டிவிட்டரில் வெளியிட்டார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வாங்கிய புதிய காரின் விலை ரூ.11 கோடி... மலைக்க வைக்கும் பின்னணி...

இதன் பின்புதான் வெளி உலகத்திற்கு இந்த செய்தி தெரியவந்து. இந்த காரை வாங்க வேண்டும் என்ற கனவு எம்டிபி நாகராஜூக்கு நீண்ட காலமாகவே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எப்படியோ தற்போது அந்த கனவை எம்டிபி நாகராஜ் நிறைவேற்றி கொண்டுள்ளார். ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க வேண்டும் என்ற கனவு நம்மில் பலருக்கும் இருக்கவே செய்கிறது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வாங்கிய புதிய காரின் விலை ரூ.11 கோடி... மலைக்க வைக்கும் பின்னணி...

ஆனால் எம்டிபி நாகராஜ் போன்ற ஒரு சிலரால் மட்டுமே அந்த கனவை நிறைவேற்ற முடிகிறது. இந்த காரை டெலிவரி எடுத்தவுடன் ஒசக்கோட்டையில் உள்ள கோயில் ஒன்றுக்கு எம்டிபி நாகராஜ் சென்றதாக தகவல் தெரிவிக்கின்றன. அதன்பின் கர்நாடக மாநில முதல் அமைச்சர் எடியூரப்பாவையும் அவர் இந்த காரில் சென்று சந்தித்துள்ளார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வாங்கிய புதிய காரின் விலை ரூ.11 கோடி... மலைக்க வைக்கும் பின்னணி...

ஆனால் ஒரு நல்ல காரியத்திற்காகதான் அவர் எடியூரப்பாவை சந்தித்துள்ளார். கர்நாடக மாநிலம் தற்போது கன மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வட கர்நாடக பகுதிகள் மிகவும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. அங்கு மீட்பு பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. இதற்கு உதவும் வகையில் எம்டிபி நாகராஜ் 1 கோடி ரூபாய் நிதி உதவியை வழங்கியுள்ளார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வாங்கிய புதிய காரின் விலை ரூ.11 கோடி... மலைக்க வைக்கும் பின்னணி...

இதற்கான காசோலையை வழங்குவதற்காகதான் அவர் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்துள்ளார். எம்டிபி நாகராஜ் தற்போது வாங்கியுள்ள ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII கார் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதில், சொகுசு வசதிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பார்த்து பார்த்து வேலை செய்துள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வாங்கிய புதிய காரின் விலை ரூ.11 கோடி... மலைக்க வைக்கும் பின்னணி...

கார்தான் என்றாலும் கூட உல்லாச கப்பலில் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். இந்த கார் என்னதான் வேகமாக சென்றாலும் கூட கேபின் மிகவும் அமைதியாக இருக்கும். இதற்காக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் சிறப்பு கவனம் செலுத்தி இந்த காரை உருவாக்கியுள்ளது. இந்த காரில் 6.75 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வாங்கிய புதிய காரின் விலை ரூ.11 கோடி... மலைக்க வைக்கும் பின்னணி...

இந்த ட்வின்-டர்போ இன்ஜின் வி12 யூனிட் ஆகும். இது அதிகபட்சமாக 563 பிஎச்பி பவர் மற்றும் 900 என்எம் டார்க் திறனை வாரி வழங்கி சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்லும் வல்லமை வாய்ந்தது. பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 5.4 வினாடிகளில் எட்டி விடும்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வாங்கிய புதிய காரின் விலை ரூ.11 கோடி... மலைக்க வைக்கும் பின்னணி...

இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII லக்ஸரி காரின் விலை என்ன தெரியுமா? 9.5 கோடி ரூபாய். இதற்கே மலைத்து விடாதீர்கள். இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடு விலை கிட்டத்தட்ட 11 கோடி ரூபாய்க்கு நெருக்கமாக வரும்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வாங்கிய புதிய காரின் விலை ரூ.11 கோடி... மலைக்க வைக்கும் பின்னணி...

இதுதவிர ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பாந்தம் VIII காரில் பல்வேறு கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களையும் வழங்கி வருகிறது. இவற்றை நீங்கள் தேர்வு செய்தால், காரின் விலை இன்னும் அதிகரிக்கும். அதிகரிக்கும் என்றால், லட்சங்களில் அல்ல. கோடிகளில். ஆம், இன்னும் ஒரு சில கோடி ரூபாய் அதிகரிக்கலாம்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வாங்கிய புதிய காரின் விலை ரூ.11 கோடி... மலைக்க வைக்கும் பின்னணி...

எனினும் எம்டிபி நாகராஜ் ஏதேனும் ஹை-எண்ட் கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களை தேர்ந்து எடுத்துள்ளாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் இந்தியாவில் ஒரு அரசியல்வாதியுடம் உள்ள மிகவும் விலை உயர்ந்த கார் அனேகமாக இதுவாகதான் இருக்கும். எம்டிபி நாகராஜின் பின்னணி தெரிந்தால் நீங்கள் மலைத்து விடுவீர்கள்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வாங்கிய புதிய காரின் விலை ரூ.11 கோடி... மலைக்க வைக்கும் பின்னணி...

ஆம், எம்டிபி நாகராஜ் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர். அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 1,000 கோடி ரூபாய்க்கும் மேல். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு முன்னதாக எம்டிபி நாகராஜ் தனது சொத்துக்கள் குறித்து அறிவித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Article Published On: Saturday, August 17, 2019, 13:02 [IST]
English summary
Disqualified MLA MTB Nagaraj's New Rolls Royce Phantom. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+