பாவம்யா... ஓவர்ஸ்பீடில் வந்த கார் மோதி 3 பேர் பலி... யாரோட கார்னு தெரிஞ்சா கோவத்தோட உச்சிக்கே போயிருவீங்க

இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு (Road Accidents) அதிவேகத்தில் பயணம் செய்வது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கூட, அதிவேகம் காரணமாக நடைபெறும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை இன்னும் பெரிய அளவில் குறைக்க முடியவில்லை.

இந்த வரிசையில் இன்று (நவம்பர் 21) காலை நடைபெற்றுள்ள ஒரு சாலை விபத்து, நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீஹார் (Bihar) மாநிலம் மதுபானி (Madhubani) மாவட்டத்தின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 57-ல் (National Highway 57) இந்த கோர விபத்து நடைபெற்றுள்ளது.

District Magistrate Car Accident

அதிவேகமாக வந்த டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) கார் மோதியதில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு பெண், அவரது குழந்தை மற்றும் சம்பவ இடத்தில் சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்த ஒரு தொழிலாளர் என 3 பேரின் உயிரை இந்த கோர விபத்து காவு வாங்கியுள்ளது.

இதுதவிர இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் 2 பேரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தற்போது தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்தில் மற்றொரு அதிர்ச்சிகரமான தகவலும் உள்ளது.

DM Car Accident

விபத்துக்கு காரணமான கார், பீஹார் மாநிலம் மாதேபுரா (Madhepura) மாவட்ட மாஜிஸ்திரேட் (District Magistrate) விஜய் பிரகாஷ் மீனாவுடையது (Vijay Prakash Meena) என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சாலை விபத்து நிகழ்ந்தபோது, அவர் காருக்குள் இருந்தாரா? இல்லையா? என்பது உறுதியாக தெரியவில்லை.

எனினும் உள்ளூர் மக்கள் மத்தியில் இந்த சாலை விபத்து கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலை விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உள்ளூர் மக்கள் சம்பவ இடத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர். சாலை விபத்தும், அதை தொடர்ந்து நடைபெற்ற போராட்டமும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பீஹார் மாநிலத்தில் இன்று காலை நடைபெற்ற சாலை விபத்தை பற்றிய முழுமையான தகவல்கள் எதுவும் நமக்கு இன்னும் தெரியவரவில்லை. எனினும் தற்போதைய நிலையில் அதிவேகம்தான் இந்த சாலை விபத்திற்கு மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. நாங்கள் ஏற்கனவே கூறியபடி, இந்தியாவில் நிறைய சாலை விபத்துக்களுக்கு அதிவேகம் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

எனவே எக்காரணத்தை கொண்டும் வாகனங்களில் அதிவேகத்தில் பயணம் செய்ய வேண்டாம். வேக வரம்புகளை பின்பற்றி வாகனங்களை ஓட்டுங்கள். சாலை விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்றால், வேக வரம்புகளை பின்பற்றுவது அவசியம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். எங்கு செல்வதாக இருந்தாலும் முன் கூட்டியே புறப்படுவதன் மூலம் அதிவேகத்தில் பயணம் செய்வதை தவிர்க்கலாம்.

நேரமின்மையே அதிவேக பயணங்களுக்கு காரணமாக இருக்கிறது. எனவே எங்கு செல்வதாக இருந்தாலும், கொஞ்சம் முன் கூட்டியே கிளம்புவதன் மூலம், அவசரம் இல்லாமல் நிதானமாக பயணம் செய்ய முடியும். இந்த சிறிய விஷயம், சாலை விபத்துக்களில் மனித உயிர்கள் பலியாவதை தடுக்கும் என்பதை எப்போதும் மனதில் வைத்து கொண்டு செயல்படுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 21, 2023, 14:40 [IST]
English summary
District magistrate car accident 3 killed 2 injured all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+