இந்த விஷயங்களை பார்த்தா விமானத்துல பறக்குற ஆசையே போய்டும் போங்க

முதல்முறையாக விமானத்தில் பயணிப்பவர்களுக்கு பயம் கலந்த உற்சாகம் மனதில் இருக்கும். விமானங்கள் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும், பல்வேறு அபாயங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. அதுபோன்ற அபாயங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்த விஷயங்களை கேட்டா அப்புறம் விமானத்திலேயே போக மாட்டீங்க!

டேக் ஆஃப் ரிஸ்க்

பொதுவாக விமானம் தரை இறங்குவதுதான் பலருக்கு அச்சம் தரும் விஷயமாக இருக்கும். நல்லபடியாக தரை இறங்க வேண்டும் என்ற அச்சம் எழுவது சகஜம். ஆனால், தரை இறங்கும்போது எந்தளவு அபாயம் இருக்கிறதோ, அதே அளவுக்கு டேக் ஆஃப் செய்யும்போது இருப்பதாக விபத்து புள்ளிவிபரங்கள் மல்லுகட்டுகின்றன. மேலும், ரேடியோ சிக்னல்கள் தவறாக புரிந்து கொள்ளுதல், பரபரப்பான சமயங்களில் அதிக விபத்து அபாயங்கள் இருக்கின்றன.

இந்த விஷயங்களை கேட்டா அப்புறம் விமானத்திலேயே போக மாட்டீங்க!

அழுக்கு மூட்டை

விமான நிலையங்களும், விமானத்தில் பயணமும் உலகிலேயே மிகவும் பிரம்மாண்டத்தை கண் முன் நிறுத்துவதாகவும் மிகவும் சுகாதாரமான இடங்களாகவும் கருதுகிறோம். ஆனால், விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படும்போது, அதன் உட்புறத்தை உடனுக்குடன் சுத்தம் செய்வது இயலாத காரியம். சில சமயங்களில் மிக மோசமான சுகாதாரக் கேடு உள்ள இடமாகவும் இருக்கும். எனவே, கையில் கைகளை சுத்தம் செய்வதற்கான சானிட்டைசர் எடுத்துச் செல்வது உத்தமம்.

இந்த விஷயங்களை கேட்டா அப்புறம் விமானத்திலேயே போக மாட்டீங்க!

பைலட் அவசியமில்லை

விமானங்கள் தானியங்கி முறையில் பறக்கும் திறன் வாய்ந்தவை. விமானத்தில் இருக்கும் கணிணிகள் மிகவும் துல்லியமாக செயல்படக்கூடியவை. விமானத்தின் இயக்கத்தை சரியாக கண்காணிப்பதே, விமானிகளின் தலையாய பணியாக இருக்கிறது. அவசர சமயங்களில் மட்டும் விமானிகளின் உதவி அதிகளவில் தேவைப்படுகிறது.

இந்த விஷயங்களை கேட்டா அப்புறம் விமானத்திலேயே போக மாட்டீங்க!

கருப்புப் பெட்டி

விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கருப்புப் பெட்டிகள், தீ விபத்து மற்றும் சீதோஷ்ண நிலைகளால் பாதிக்கப்படாது என்ற கூற்று இருக்கிறது. ஆனால், சில வேளைகளில் அந்த கருப்புப் பெட்டிகளும் சேதமடைந்து, பயனற்று போகும் நிலை இருக்கிறது.

இந்த விஷயங்களை கேட்டா அப்புறம் விமானத்திலேயே போக மாட்டீங்க!

டர்புலென்ஸ் அபாயம்

வான் பரப்பில் வெற்றிட பகுதிகளை விமானம் கடக்கும்போது டர்புலென்ஸ் பிரச்னையில் சிக்கி தடுமாறுவதுண்டு. தற்போது இந்த காற்று இல்லாத வெற்றிடங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், விமானங்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும் அபாயங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. டர்புலென்ஸில் சிக்கி விமானங்களின் பறக்கும் உயரம் தடாலடியாக குறையும் வாய்ப்புள்ளது.

இந்த விஷயங்களை கேட்டா அப்புறம் விமானத்திலேயே போக மாட்டீங்க!

ஆளை கண்டு மயங்காதே...

விமானங்களின் இருக்கை அமைப்பு, சொகுசு ஆகியவற்றை பார்த்து மதிமயங்கி போகிறோம். ஆனால், தற்போது உலகின் இயக்கப்படும் விமானங்களில் பாதிக்கும் மேல் 20 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஷயங்களை கேட்டா அப்புறம் விமானத்திலேயே போக மாட்டீங்க!

பைலட்டுகள் தூக்கம்

விமானங்களை இயக்கும் பெரும்பாலான பைலட்டுகள் அயர்ந்து தூங்கி விடுகின்றனராம். நீண்ட நேர பணிச்சுமை மற்றும் பகல் இரவு நேர மாற்றங்களை அதிகமாக சந்திப்பதே காரணமாக கூறப்படுகிறது. சில சமயங்களில் விமானி, துணை விமானி என இருவருமே தூங்கிவிடுவதுண்டு. அதுதான் பிரச்னை.

இந்த விஷயங்களை கேட்டா அப்புறம் விமானத்திலேயே போக மாட்டீங்க!

ஆபத்து அறியாத பயணம்

விமான எஞ்சினில் பிரச்னை ஏற்பட்டாலோ அல்லது வேறு தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டாலோ, பயணிகளிடம் உடனடியாக பைலட்டுகள் தெரிவிப்பதில்லை. எதுவுமே செய்ய முடியாத பட்சத்தில், விமானம் நிச்சயமாக விபத்தில் சிக்கப்போகிறது என்று தெரிந்தாலும், சில நிமிடங்களுக்கு முன்னர்தான் பயணிகளுக்கு தகவல் கொடுக்கப்படும்.

Most Read Articles
Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Disturbing Facts About Air Travel.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X