ராயல் என்பீல்டு பைக்கில் சர்வ சாதாரணமா ரோட்டில் வந்தது அவரா! யார்னு தெரிஞ்சதும் பெரிய கூட்டமே கூடிருச்சு!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350). இந்த பைக்கில் 349 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஹெச்பி பவர் மற்றும் 27 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 2.03 லட்ச ரூபாயில் இருந்து 2.26 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் (Price) ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

Divyanka Tripathi Spotted Riding A Royal Enfield Meteor 350

சாதாரண வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, திரைத்துறையை சேர்ந்த பலரும் கூட, ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கை வாங்கி வருகின்றனர். இதில், திவ்யங்கா திரிபாதி (Divyanka Tripathi) மிகவும் முக்கியமானவர். இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் ஆவார்.

நடப்பு 2023ம் ஆண்டு ஜனவரி மாதம்தான், திவ்யங்கா திரிபாதி ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கை வாங்கினார். இந்த சூழலில் பொது வெளியில் அவர் இந்த பைக்கை ஓட்டி வரும் புதிய வீடியோ (Video) ஒன்று, யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Divyanka Tripathi Spotted Riding Meteor 350

மும்பை நகரில் உள்ள ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) ஷோரூமுக்கு, திவ்யங்கா திரிபாதி ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கில் வந்ததாக கூறப்படுகிறது. இது அப்போது எடுக்கப்பட்ட வீடியோ என தகவல்கள் தெரிவிக்கின்றன. திவ்யங்கா திரிபாதி ஹெல்மெட் (Helmet) அணிந்து பைக்கை பாதுகாப்பான முறையில் ஓட்டி வந்தது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

திவ்யங்கா திரிபாதி ஷோரூம் வளாகத்திற்குள் நுழைந்த உடனேயே அங்கு கூடியிருந்த பலர் அவரிடம் பேச தொடங்கினர். திவ்யங்கா திரிபாதியும் பைக்கை நிறுத்தி விட்டு, அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அத்துடன் பைக் ஓட்டுவது என்றால் தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் திவ்யங்கா திரிபாதி குறிப்பிட்டார்.

ஆனால் மும்பையில் பைக் ஓட்டுவது மிகவும் சவாலான விஷயம் எனவும் அவர் கூறினார். சாலைகள் பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக இருப்பதுதான் இதற்கு காரணம் என அவர் தெரிவித்தார். இந்த உரையாடலின்போது பைக்கில் லடாக் (Ladakh) சுற்றுப்பயணம் செல்வீர்களா? என திவ்யங்கா திரிபாதியிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு லடாக் சுற்றுப்பயணம் செல்ல வேண்டும் என்ற ஆசை இருப்பதாக திவ்யங்கா திரிபாதி தெரிவித்தார். ஆனால் நிறைய வேலை இருக்கும் காரணத்தால் அதை செய்ய முடியவில்லை எனவும் அவர் கூறினார். உண்மையில் பைக்கில் லடாக் ட்ரிப் செல்ல வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கவே செய்கிறது. ஆனால் பணிச்சூழல் காரணமாக, ஒரு சிலரால் மட்டுமே அந்த ஆசையை நிறைவேற்றி கொள்ள முடிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகை திவ்யங்கா திரிபாதி விரைவில் லடாக் பயணம் செய்ய வாழ்த்துக்கள். உண்மையில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் லடாக் பயணம் மேற்கொள்வதற்கு ஏற்றதுதான். பைக் காதலர்கள் பலர் கடந்த காலங்களில், ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் மூலம் லடாக் சென்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 தவிர, ராயல் என்பீல்டு ஹிமாலயன் (Royal Enfield Himalayan) மற்றும் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 (Royal Enfield Interceptor 650) ஆகிய பைக்குகளும் கூட, லடாக் சுற்றுப்பயணத்திற்கு ஏற்றவைதான். நீங்கள் லடாக் செல்வதாக இருந்தால், அதற்கு இந்த பைக்குகளையும் பரிசீலனை செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, July 14, 2023, 16:49 [IST]
English summary
Divyanka tripathi spotted riding a royal enfield meteor 350 video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+