குடுத்து வெச்சவங்க! தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க

இந்தியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தீபாவளி பரிசாக வழங்கி அசத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

குடுத்து வெச்சவங்க! தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க

இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து கொண்டே வந்தது. ஆனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்தது. அத்துடன் ஒரு சில மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளன. இதன் காரணமாக தற்போது பெட்ரோல், டீசல் விலை ஓரளவிற்கு குறைந்துள்ளது.

குடுத்து வெச்சவங்க! தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க

எனவே வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையை சமாளிக்க கூடிய தீர்வாக பார்க்கப்படுகின்றன.

குடுத்து வெச்சவங்க! தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகம் என்பதால், அனைவராலும் அவற்றை எளிதில் வாங்க முடிவதில்லை. இப்படிப்பட்ட சூழலில் குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த நிறுவனம் ஒன்று, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பரிசாக வழங்கி அசத்தியுள்ளது.

குடுத்து வெச்சவங்க! தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க

அலையன்ஸ் குரூப் (Alliance Group) என்ற நிறுவனம்தான் இந்த சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது எம்ப்ராய்டரி மெஷின்களை தயாரித்து வரும் நிறுவனம் ஆகும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அலையன்ஸ் குரூப் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பரிசாக வழங்கியதற்கு இரண்டு காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குடுத்து வெச்சவங்க! தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவைதான் அந்த இரண்டு காரணங்கள். இதன்படி நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நேரத்தில் அலையன்ஸ் குரூப் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இதில், அலையன்ஸ் குரூப் நிறுவனத்தின் 35 ஊழியர்களுக்கு ஒகினவா ப்ரைஸ் ப்ரோ (Okinawa Praise Pro) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்பட்டது.

குடுத்து வெச்சவங்க! தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க

ஒகினவா ப்ரைஸ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோரூம் விலை 76,848 ரூபாய் ஆகும். தீபாவளிக்கு போனஸ், பட்டாசு மற்றும் இனிப்புகள் கிடைத்து விட்டாலே மனம் கொண்டாட்ட மனநிலைக்கு சென்று விடும். அப்படி இருக்கும்போது இவ்வளவு ரூபாய் மதிப்புடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பரிசாக கிடைத்ததால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குடுத்து வெச்சவங்க! தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க

இதுகுறித்து அலையன்ஸ் குரூப் நிறுவனத்தின் இயக்குனர் சுபாஷ் தாவர் (Subhash Dawar) கூறுகையில், ''எரிபொருள் விலை உயர்வாலும், மேலும் சில காரணிகளாலும் எங்களது ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பரிசாக வழங்க முடிவு செய்தோம். இதன் மூலம் எரிபொருள் செலவு குறைவதுடன், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் எங்கள் நிறுவனத்தால் இயன்ற பங்களிப்பையும் செய்ய முடியும்'' என்றார்.

குடுத்து வெச்சவங்க! தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க

மேலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு சாத்தியமுள்ள ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில் தனக்கு ஆர்வம் அதிகம் எனவும் சுபாஷ் தாவர் தெரிவித்துள்ளார். ஒகினவா ப்ரைஸ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2 kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 88 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும்.

குடுத்து வெச்சவங்க! தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க

அதே நேரத்தில் ஒகினவா ப்ரைஸ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 58 கிலோ மீட்டர்கள் ஆகும். இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீபாவளி பரிசாக கிடைத்திருப்பது அலையன்ஸ் குரூப் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு நிச்சயமாக மனநிறைவை அளித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

குடுத்து வெச்சவங்க! தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க

இந்தியாவில் தற்போது ஏராளமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகமாகி வருகின்றன. பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ-க்யூப், ஏத்தர் 450எக்ஸ், ஓலா எஸ்1 என நிறைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. வரும் காலங்களில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

குடுத்து வெச்சவங்க! தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க

பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதே இதற்கு காரணம். அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு அரசும் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. எனவே வரும் காலங்களில் அனைவரது வீடுகளிலும் எலெக்ட்ரிக் வாகனங்களை நம்மால் பார்க்க முடியும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Diwali gift gujarat based company offered okinawa praise pro electric scooters to employees
Story first published: Friday, November 5, 2021, 12:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X