கோபி-சுதாகர் சொன்ன மாதிரியே ஆகிடுச்சே! தீபாவளிக்கு முடிஞ்சு திங்கள் கிழமை 3 கோடி பேர் ரயில்ல போயிருக்காங்க
தீபாவளி விடுமுறை முடித்து ஒரே நாளில் மூன்று கோடி பேர் இந்திய ரயில்வே நிர்வாகத்தின் ரயில்கள் மூலம் பயணம் செய்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் 4ம் தேதி தான் இருப்பதிலேயே அதிக எண்ணிக்கையிலான பயணிகளை இந்திய ரயில்வே நிர்வாகம் கையாண்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை ரயில்வே நிர்வாகம் வழியில் உள்ளது. இதை முழுமையாக காணலாம் வாருங்கள்.
பொதுவாக பண்டிகை காலங்களில் பலர் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாடிவிட்டு மீண்டும் பணிக்காக பெருநகரங்களுக்கு செல்வது வழக்கம். இப்படியாக பண்டிகை கால நேரங்களில் பொதுப் போக்குவரத்து அதிக கூட்டமாக காணப்படும் குறிப்பாக ரயில்கள் தான் நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றதாக இருக்கிறது. இதனால் ரயில்களில் முன்பதிவுகள் இந்த காலகட்டத்திற்கு மிக அதிகமாக இருக்கும். இதில் டிக்கெட் கிடைப்பதை மிக அரிதான விஷயமாக இருக்கும்.

இப்படியாக கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்டது அதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த நவம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் பலர் கொண்டாட்டங்களை முடிந்து மீண்டும் பணிக்காக திரும்புவதற்காக டிக்கெட்டுகளை புக் செய்து இருந்தார்கள். இதனால் அந்த காலகட்டத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அதிக போக்குவரத்து நெருக்கடி இருந்தது.
இந்நிலையில் இந்திய ரயில்வே நிர்வாகம் இந்த பண்டிகை காலகட்டத்தில் ரயில்களில் பயணம் செய்த பயணிகள் குறித்த சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இது ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்கிறது. கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை மொத்தம் 7.5 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் மொத்தம் 7600 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 65 லட்சம் பயணிகள் பயணித்துள்ளார்கள்.

கடந்த 2023ம் ஆண்டு இதே பண்டிகை காலகட்டத்தில் மொத்தம் 4500 சிறப்பு ரயில் மட்டுமே இயக்கப்பட்டது. அதை ஒப்பிடும்போது தற்போது 73 சதவீதம் அளவுக்கு சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஒரே நாளில் மூன்று கோடி பயணிகள் பயணித்தது கடந்த நவம்பர் 4ம் தேதி தான் எனவும் இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது புறநகர் ரயில்கள் மற்றும் புறநகர் அல்லாத ரயில்கள் என இரண்டு விதமான ரயில்களில் விற்பனையாளர் டிக்கெட்களை வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. இதில் புறநகர் அல்லாத ரயில்களில் மட்டும் மொத்தம் 1.20 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளார்கள். அதில் 19.43 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்தும் 1.01 கோடி பயணிகள் முன்பதிவு செய்யாமலும் பயணம் செய்துள்ளார்கள்.

இது போக புறநகர் ரயில்களில் 1.8 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளார்கள். புறநகர் ரயில்களில் முன்பதிவு வசதிகள் கிடையாது அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளாகவே விற்பனையாகி உள்ளன. இந்த பண்டிகை காலங்களில் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதை முன்கூட்டியே கணித்த ரயில்வே நிர்வாகம் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது.
கூட்டம் அதிகமாக இருக்கும் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டத்தை சமாளிப்பதற்காக கூடுதல் பணியாளர்களை பணியில் வைத்து பணியை சுலபமாக செய்துள்ளது. இது மட்டுமல்லாமல் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கூடுதல் பணியாளர்கள் பணியில் இருந்துள்ளார்கள். மேலும் ரயில் போக்குவரத்தில் எந்தவித தங்கு தடையும் இல்லாமல் செயல்படுவதற்காக முன்பே திட்டமிடப்பட்டு ரயில் இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தியாவின் நீண்ட தூர போக்குவதற்கு முதுகெலும்பாக ரயில்கள் தான் இருக்கும். நிலையில் ரயில்வே நிர்வாகம் இந்த பண்டிகை காலத்தை மிகச் சிறப்பாக கையாண்டுள்ளது. எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல் பயணிகள் பயணம் செய்துள்ளார்கள் கூட்டமா அதிகமாக இருக்கும் ரயில் நிலையங்களில் எல்லாம் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு பயணிகள் வசதிகள் சரியாக கையாளப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு போக்குவரத்து என்பது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் இந்த போக்குவரத்து மூலம் மக்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள் என்பதால் ரயில்வே நிர்வாகம் இந்த பணியை சரியாக திட்டமிட்டு மிகச் சிறப்பாக செய்துள்ளது பாராட்டுக்குரியது தான். பொதுமக்களும் ரயில்வே நிர்வாகத்தின் இந்த பணியை நிச்சயம் பாராட்ட வேண்டும்.


Click it and Unblock the Notifications
