21 வயசு கூட இன்னும் முழுசா முடியல!! கை தொழிலில் பெரிய பைக் கம்பெனியில் வேலை... கேரள இளம்பெண் அசத்தல்!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தில், வெறும் 21 வயதே ஆன இளம்பெண் ஒருவர் நிபுணத்துவம் வாய்ந்த மெக்கானிக்காக பணியமர்த்தப்பட்டு உள்ளார். யார் இந்த இளம்பெண்? எங்கே இருக்கிறார்? இவ்வளவு சிறிய வயதில் எவ்வாறு அவ்வளவு பெரிய ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் மெக்கானிக் வேலையை பெற்றுள்ளார்? வாருங்கள், இந்த கேள்விக்களுக்கான பதில்களை இனி பார்க்கலாம்.

தியா (Diya), கேரளாவின் கோட்டயத்தை சேர்ந்த 21 வயதான இளம்பெண். கோட்டயத்தில் உள்ள தந்தையின் மெக்கானிக் ஷாப்பில் சிறு வயதிலேயே ஆர்வமுடன் பைக்குகளை பழுது பார்க்க ஆரம்பித்த தியா தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இளம் தொழில்முறை மெக்கானிக்காக பணியமர்த்தப்பட்டு உள்ளார்.

youngest royal enfield professional mechanic

கோட்டயத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் 3ஆம் ஆண்டு மெக்கானிக்கல் படிப்பை படித்துக் கொண்டிருக்கும் தியா ராயல் என்ஃபீல்டில் வேலை கிடைத்திருப்பதை பற்றி கூறுகையில், "இது ஒரு பெரிய ஆச்சியமாக இருந்தது. இப்படி ஒரு அழைப்பை நான் எதிர்பார்க்கவே இல்லை. அவர்கள் இங்கு வந்து என்னை வைத்து வீடியோ எடுத்தார்கள்.

என் ஆசிரியர்கள் என்னை பற்றி பெருமிதம் கொள்வதாகக் கூறி, இதனை பற்றி வகுப்புகளில் பகிர்ந்து கொண்டனர். இது நான் அடையும் மிக மதிப்புமிக்க அங்கீகாரம்" என்றார். இந்தியா மட்டுமின்றி உலகளவில் வரவேற்பை பெற்றுவரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் அபிஷியல் மெக்கானிக்காக பணியாற்றுவது ஒன்றும் எளிதான காரியம் அல்ல. அதற்கு திறமை உடன் பொறுமை மற்றும் கடின உழைப்பும் தேவை.

youngest royal enfield professional mechanic

இவையாவையும் கொண்டுள்ள தியா இதுகுறித்து மேலும் அளித்துள்ள பேட்டியில், "பொதுவாக, ஒரு புல்லட் பைக்கை சர்வீஸ் செய்ய 2 முதல் 3 நாட்கள் ஆகும். பைக்கில் ஆயில் மற்றும் கேபிள்களை மாற்றுவது, சங்கிலிகள் மற்றும் மற்ற பாகங்களை கழற்றுவது மற்றும் ரீலோட் செய்வது போன்றவற்றில் நான் வழக்கமாக என் அப்பாவுக்கு உதவுவேன். பைக்கின் பாகங்கள், குறிப்பாக என்ஜின் சற்று கனமானது மற்றும் தனியாக கையாள்வது சவாலானது" என்றார்.

இவர் கூறுவதை போல, தியாவின் குடும்பத்தில் ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக் ஒன்று உள்ளது. அது பழுதடையும் சமயங்களில், தியா தனியாளாக பலமுறை சரி செய்துள்ளார். தனது 10 வயதில் இருந்தே தியா அவரது தந்தையின் மெக்கானிக் ஷாப்பில் பணியாற்ற ஆரம்பித்துவிட்டார். இதனால், இத்தனை வருடங்களில் கிடைத்த அனுபவத்தில், இப்போது ஒரு புல்லட் பைக்கை கொடுத்தால் மொத்தமாக கழற்றி மாட்டும் திறன் தியாவிடம் உள்ளது.

youngest royal enfield professional mechanic

தியாவின் தந்தை ஜோசப் பலமுறை தியாவின் திறன்களை சோதித்து பார்த்துள்ளார். இதுகுறித்து தியாவின் தந்தை கூறுகையில், "புதிய திறன்களை கற்றுக் கொள்வது எப்போதும் பயனுள்ளதாக இருக்கும். பட்டறையில் தியா உடன் இருப்பது மிகவும் ஜாலியாக இருக்கும். அவள் மிகுந்த நகைச்சுவை உணர்வை கொண்டிருக்கிறாள். அது பிஸியான நாட்களில் ஓய்வெடுக்க உதவுகிறது" என்றார்.

அத்துடன், புல்லட் பைக் ஒன்றின் என்ஜினை மாட்டும்போது தியாவுக்கு ஏற்பட்ட காயம் குறித்தும் ஜோசப் நினைவுக்கூர்ந்துள்ளார். வீட்டில் எப்போதெல்லாம் சும்மா இருக்கிறாரோ அப்போதெல்லாம் தந்தையின் மெக்கானிக் ஷாப்பிற்கு தியா ஓடிவந்து விடுவாராம். அதேநேரம், படிப்பிலும் தியா எந்தவொரு சமரசமும் செய்துக் கொண்டது கிடையாது. இவர் படித்த கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் இவர் ஒருவர் மட்டும்தான் பெண் ஆவார்.

youngest royal enfield professional mechanic

டிரைவ்ஸ்பார்க் கருத்து: என்ஜீனியரிங்கில் மெக்கானிக்கல் படிப்பு மட்டுமின்றி, மெக்கானிக் வேலையும் பெண்களுக்கானவை அல்ல என்கிற பார்வை நம் மக்களிடத்தில் உள்ளது. அதனை தியா போன்றவர்கள் தான் மாற்றிக் கொண்டு வருகின்றனர். திறமை உள்ளவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களை தேடி கண்டுப்பிடித்து வாய்ப்பு வழங்குவதை நோக்கமாக கொண்டிருப்பதை ராயல் என்ஃபீல்டு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 4, 2024, 11:51 [IST]
English summary
Diya 21 year old girl as youngest royal enfield professional mechanic check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X