எங்கயோ பாத்த மாரியே இருக்கே! அட அவங்களா இது! இனி வர்ற குழந்தைங்க எல்லாம் இவங்கள போல ஆகதான் ஆசைப்படுவாங்க!

கலெக்டர் ஆக வேண்டும், டாக்டர் ஆக வேண்டும், இன்ஜினியர் ஆக வேண்டும் என்ற வரிசையில் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் (Social Media Influencer) ஆக வேண்டும் என்று குழந்தைகள் சொல்லும் காலம் வந்து விட்டது. அந்த அளவிற்கு சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் சமூகத்தில் தற்போது ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளனர். இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்களில், தியா கிருஷ்ணாவும் (Diya Krishna) ஒருவர். கேரளாவை (Kerala) சேர்ந்த தியா கிருஷ்ணாவை, இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் மட்டும் சுமார் 11 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

இவர் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) கார் ஆகும். எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, இந்திய மக்களின் நம்பிக்கையை பெற்ற கார்களில் ஒன்றாகும்.

Diya Krishna Buys Toyota Innova Crysta

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 19.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 26.55 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில், 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 150 பிஎஸ் பவர் மற்றும் 343 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Toyota Innova Crysta

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில், 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் என 2 வகையான இருக்கை அமைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற கார்களில் ஒன்றாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா திகழ்ந்து வருகிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், பின் பகுதியிலும் ஏசி வெண்ட்கள் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் என ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்படுகின்றன. அத்துடன் இந்த காரில் பாதுகாப்பு வசதிகளுக்கும் (Safety Features) பஞ்சமில்லை.

பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரையில், 7 ஏர்பேக்குகள், வெய்கில் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், பிரேக் அஸிஸ்ட் ஆகியவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக கருதப்படுகின்றன. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை, தியா கிருஷ்ணா டெலிவரி எடுத்தபோது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video), சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உங்கள் குடும்பத்தில் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்றால், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை தேர்வு செய்யலாம். அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் என்பதால், கேப் நிறுவனங்களை நடத்தி வருபவர்கள் கூட, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை அதிகளவில் தேர்வு செய்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Monday, September 2, 2024, 17:00 [IST]
English summary
Diya krishna buys toyota innova crysta viral video
மேலும்... #india #celebrity cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+