திமுக, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் கார்கள்!

திமுக.,வின் மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி மீண்டும் அப்பதவிக்கு போட்டியிடுகிறார். திமுக., சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் அவர் தனது வேட்புமனுவில் சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளார். மொத்தம் 26.67 கோடி மதிப்புடைய சொத்துக்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த முறையை விட தற்போது அவரது சொத்து மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதில், ரூ.18 லட்சம் மதிப்புடைய தங்க நகைகள் மற்றும், ரூ.80 லட்சத்தை நெருங்கும் மதிப்புடைய இரண்டு கார்கள் இருப்பதையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 டொயோட்டா கேம்ரி

டொயோட்டா கேம்ரி

கடந்த 2007ம் ஆண்டு அவர் மாநிலங்களவைக்கு வேட்புமனு தாக்கல் செய்தபோது, அவர் தெரிவித்த சொத்து விபரத்தில் டொயோட்டா கேம்ரி சொகுசு செடான் கார் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

மதிப்பு

மதிப்பு

கடந்த முறை அவரது சொத்து மதிப்பு 8.56 கோடியாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில், டொயோட்டா கேம்ரியின் மதிப்பு ரூ.18,70,000 என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த முறை

இந்த முறை

இந்த முறை அவரது சொத்து விபரத்தில் ரேஞ்ச்ரோவர் மற்றும் டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் கார்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் இரண்டின் விலையும் சேர்த்து ரூ.80 லட்சத்தை நெருங்குகிறது.

ரேஞ்ச்ரோவர் மதிப்பு

ரேஞ்ச்ரோவர் மதிப்பு

இரண்டு கார்களில் ஒன்றாக ரேஞ்ச்ரோவர் கார் ஒன்று வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் மதிப்பு ரூ.61,74,109 என குறிப்பிட்டுள்ளார்.

 ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி

ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி

உலகின் மிகச் சிறந்த ஆஃப்ரோடு சொகுசு எஸ்யூவியாக ரேஞ்ச்ரோவர் புகழப்படுகிறது. கடந்த 1970ல் அறிமுகம் செய்யப்பட்டு தற்போது 4ம் தலைமுறை கண்டுள்ளது. கனிமொழி வைத்திருப்பது மூன்றாம் தலைமுறை மாடல். இதில், ஏராளமான பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகள் கொண்டது.

மற்றொரு கார்

மற்றொரு கார்

தனது வேட்புமனுவில் டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் கார் ஒன்று இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த கார் ரூ.16,32,637 மதிப்புடையது என்று குறிப்பிட்டுள்ளார்.

கரொல்லா ஆல்டிஸ்

கரொல்லா ஆல்டிஸ்

சிறந்த இடவசதி, அதிக மைலேஜ் கொடுக்கும் சிறந்த சொகுசு செடான் காராக ஆல்டிஸ் விளங்குகிறது. இந்த காரும் பல பொழுதுபோக்கு மற்றும் பாதுகாப்பு வசதிகளை கொண்டது.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 138 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் பெட்ரோல் எஞ்சினுடனும், 87 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சினுடனும் கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, June 17, 2013, 12:56 [IST]
English summary
DMK Rajya Sabha MP Kanimozhi's assets have registered over three-fold increase in the last six years to Rs 26.67 crore from Rs 8.56 crore. He has owned two luxury cars worth Rs.80 lakhs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+