இந்தியாவைக் கண்டு மிரளப் போகும் உலக நாடுகள்... டிரைவரே இல்லாமல் தானியங்கி ரயிலைத் தயாரிக்கத் திட்டம் தயார்!

இந்தியாவில் டிரைவரே இல்லாமல் ரயிலை இயக்க டில்லி மெட்ரோ முடிவு செய்து பெல் நிறுவனத்துடன் இதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது.

உலகத்திலேயே 4வது மிகப்பெரிய ரயில் பாதையைக் கொண்ட நாடு இந்தியா. இங்கு மொத்தம் 68,103 கி.மீ நீளத்திற்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது. ஆசியாவிலேயே அதிக ஊழியர்களே கொண்ட இரண்டாவது நிறுவனமாக இந்திய ரயில்வே நிர்வாகம் திகழ்கிறது.

இந்தியாவைக் கண்டு மிரளப் போகும் உலக நாடுகள்... டிரைவரே இல்லாமல் தானியங்கி ரயிலைத் தயாரிக்கத் திட்டம் தயார்!

இந்த ரயில் பாதையில் முக்கியமானது மெட்ரோ ரயில் பாதை, பெருநகரங்களில் நகர்ப் பகுதிகளுக்கு உள்ளே மக்கள் பயணிப்பதற்காக அமைக்கப்பட்டது. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் இந்த மெட்ரோ ரயிலைப் பயன்படுத்தி வருகின்றனர். டில்லியில் இயங்கும் மெட்ரோ ரயிலை டில்லி மெட்ரோ ரயில் கார்பரேஷன் லிமிடெட் என்ற நிர்வாகம் நிர்வகித்து வருகிறது.

இந்நிலையில் டில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் டில்லியில் இயங்கும் மெட்ரோ ரயிலை முழுவதுமாக டிரைவரே இல்லாமல் இயக்க முடிவு செய்துள்ளது. இதற்காகத் தானியங்கி சிஸ்டமை தயாரிக்க அந்நிறுவனம் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது. அதன்படி பெல் நிறுவனம் கம்யூனிகேஷன் பேஸ்டு ரயில்கண்ட்ரோல் சிஸ்டத்தை (i-CBTC)உருவாக்கவுள்ளது.

இது முற்றிலுமாக வெளிநாட்டுத் துணையில்லாமல் இந்தியாவிலேயே உருவாக்கப்படும் ஆத்மநிர்பார் தொழிற்நுட்பமாகும். இந்த திட்டம் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த அமைச்சகம் தான் டில்லி மெட்ரோ மற்றும் பெல் நிறுவனத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்கிறது.

i-CBTC தொழிற்நுட்பத்தை பொருத்தவரை மார்டன் -கம்யூனிகேஷனை அடிப்படையாகக் கொண்டு இயங்கவுள்ளது. இது ரயில்களின் கண்ட்ரோல்களை ரோடியோ சிக்னல்கள் மூலம் கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்களை இயக்க டிரைவர்களே தேவையில்லை. முற்றிலும் தானியங்கியாகச் சிக்கல் மற்றும் மற்ற விஷயங்களை வைத்து இயங்கும்.

தற்போது அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக பொது போக்குவரத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் மக்களுக்குப் பாதுகாப்பான அதே நேரத்தில் விரைவான போக்குவரத்து வசதியை அமைத்துத் தர வேண்டியது அரசின் பொறுப்பு தான். அதன் அடிப்படையில் தற்போது மெட்ரோ ரயில்களின் இயக்கத்தை மேலும் பாதுகாப்பானதாகவும், விரைவாகவும் மாற்ற இந்த i-CBTC தொழிற்நுட்பம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொழிற்நுட்பம், மெட்ரோ ரயில், டிராக், சிக்கல் உள்ளிட்ட மற்ற ரயில் கட்டமைப்புகளின் டெலிகம்யூனிகேஷன் முறையில் ஒரு தொடர்பை ஏற்படுத்துகிறது. அதன் படி கொடுக்கப்பட்ட விதிகளில் ரயிலை இயக்குகிறது. இந்த டெலி கம்யூனிகேஷன் தொடர்பு ரயிலை விபத்து ஏற்படுத்தாமல் காப்பாற்றும் தன்மை கொண்டது. இதனால் இந்த தொழிற்நுட்பம் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

அதே போல உலகம் முழுவதும் ரயில்களைத் தானியங்கியாக இயங்க வைக்க நூற்றுக்கணக்கான சிஸ்டம் உள்ளது. இந்நிலையில் இந்தியா தனக்கென ஒரு பிரத்தியேக தானியங்கி ரயில் போக்குவரத்து சிஸ்டத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது குறித்த உங்கள் கருத்து என்ன கமெண்டில் சொல்லுங்கள்

More from DriveSpark

Article Published On: Monday, November 14, 2022, 11:35 [IST]
English summary
Dmrl join hands with bel for communication based train control system
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+