விமானங்களுக்கு ரிவர்ஸ் கியர் உண்டா, இல்லையா? - பட்டுனு சொல்லுங்க!

கார் உள்ளிட்ட வாகனங்கள் பின்னோக்கி செலுத்துவதற்கான ரிவர்ஸ் கியர் வசதியுடன் வருகின்றன. பிரம்மாண்டமான மோட்டார்சைக்கிள்கள் கூட ரிவர்ஸ் கியர் வசதியுடன் கிடைக்கின்றன.

ஆனால், பல நூறு பயணிகளை ஏற்றிக் கொண்டு பறக்கும் விமானங்களுக்கு பின்னோக்கி செலுத்துவதற்கான ரிவர்ஸ் கியர் உண்டா என்ற சந்தேகம் பலராலும் முன்வைக்கப்படுகிறது. அதற்கான விடையையும், விளக்கங்களையும் காணலாம்.

விமானங்களுக்கு ரிவர்ஸ் கியர் உண்டா, இல்லையா? - பட்டுனு சொல்லுங்க!

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில், விமானங்களுக்கு ரிவர்ஸ் கிடையாது என்பது மட்டுமல்ல, எஞ்சின்களுக்கும், சக்கரங்களுக்கும் ஆற்றலை கடத்தும் டிரான்ஸ்மிஷன் அமைப்பே கிடையாது. ஆம், விமான சக்கரங்களுக்கும், அதன் எஞ்சின்களுக்கும் தொடர்பே கிடையாது என்பதே உண்மை.

விமானங்களுக்கு ரிவர்ஸ் கியர் உண்டா, இல்லையா? - பட்டுனு சொல்லுங்க!

டர்போட்ராப் எஞ்சின் பொருத்தப்பட்ட விமானங்களில் மட்டுமே ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு உண்டு. இப்போது வரும் ஜெட் விமானங்களுக்கு இந்த டிரான்ஸ்மிஷன் அமைப்பு கிடையாது. எஞ்சின் இயங்கும்போது காற்று பின்னோக்கி உந்தித் தள்ளப்படும்போது சக்கரங்கள் நகர்கின்றன. அவ்வளவுதான்.

விமானங்களுக்கு ரிவர்ஸ் கியர் உண்டா, இல்லையா? - பட்டுனு சொல்லுங்க!

சரி, விமான நிலையங்களில் விமானங்கள் கட்டடங்களுக்கு மிக அருகாமையில் முன்னோக்கி நிறுத்தப்படுகின்றனவே. அவை எவ்வாறு மீண்டும் பின்னோக்கி எடுக்கப்படுகின்றன. டோ டிரக் எனப்படும் பிரத்யே டிராக்டர்கள் மூலமாக விமானத்தின் முன் சக்கரத்துடன் இணைக்கப்பட்டு விமானம் பின்னோக்கித் தள்ளப்படுகிறது.

விமானங்களுக்கு ரிவர்ஸ் கியர் உண்டா, இல்லையா? - பட்டுனு சொல்லுங்க!

இந்த டிராக்டர்கள் மிகவும் சக்திவாய்ந்தவை. ஏர்பஸ் ஏ380 விமானமாக இருந்தாலும் சரி, போயிங் 747 போன்ற பெரிய சரக்கு விமானமாக இருந்தாலும் சரி. எளிதாக பின்னோக்கி தள்ளும் ஆற்றல் வாய்ந்தது.

விமானங்களுக்கு ரிவர்ஸ் கியர் உண்டா, இல்லையா? - பட்டுனு சொல்லுங்க!

அதேநேரத்தில், விமானம் முன்னோக்கி செல்வதற்கு எஞ்சின் அளிக்கும் த்ரஸ்ட் விசையை போன்றே, பின்னோக்கி தள்ளுவதற்கான 'ரிவர்ஸ் த்ரஸ்ட்' விசையை அளிக்கும் கட்டமைப்பு விமானங்களில் உள்ளன.

விமானங்களுக்கு ரிவர்ஸ் கியர் உண்டா, இல்லையா? - பட்டுனு சொல்லுங்க!

இந்த ரிவர்ஸ் த்ரஸ்ட் பெரும்பாலும் விமானம் தரை இறங்கும்போது ஓடுதளத்தில் வேகத்தை குறைக்கும்போது பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, மினி பிளாப்புகளும் விமானத்தின் வேகத்தை குறைக்க பயன்படுகிறது. இந்த ரிவர்ஸ் த்ரஸ்ட் வசதி இல்லையெனில், விமானத்தின் வேகத்தை குறைக்க மிக நீண்ட தூர ஓடுபாதை தேவைப்படும்.

விமானங்களுக்கு ரிவர்ஸ் கியர் உண்டா, இல்லையா? - பட்டுனு சொல்லுங்க!

மேலும், இந்த ரிவர்ஸ் த்ரஸ்ட் சிஸ்டத்தை பயன்படுத்தும்போது அதிக காற்று விமானத்தின் முன்புறத்தில் உந்தித்தள்ளும். இதனால், விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்படும்போது பயன்படுத்தினால் பல்வேறு விபரீதங்களை ஏற்படுத்தும்.

விமானங்களுக்கு ரிவர்ஸ் கியர் உண்டா, இல்லையா? - பட்டுனு சொல்லுங்க!

விமான நிலைய கட்டங்கள், அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள், பணியாளர்கள், பயணிகள் மற்றும் உபகரணங்களை இந்த ரிவர்ஸ் த்ரஸ்ட் முறை பயன்படுத்தும்போது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவேதான், டோ டிரக் பயன்படுத்தப்படுகின்றன.

விமானங்களுக்கு ரிவர்ஸ் கியர் உண்டா, இல்லையா? - பட்டுனு சொல்லுங்க!

இதுமட்டுமல்ல, ரிவர்ஸ் த்ரஸ்ட் பயன்படுத்தி விமானத்தை பின்னோக்கி எடுக்கும்போது அதிக அளவு எரிபொருள் செலவாகும். ஆனால், டோ டிரக் மூலமாக பின்னோக்கி தள்ளும்போது விமான எஞ்சின் மூலமாக செலவாகும் அதிகப்படியான எரிபொருள் விரயம் தவிர்க்கப்படும்.

Picture credit: Wiki Commons

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Do Airplanes Have A Reverse Gear?.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X