Just In
- 4 hrs ago
சுதந்திர தினத்தில் இந்தியர்களுக்கு விருந்து வைத்த மஹிந்திரா... டாடாவுக்கு இனிமேல் செம போட்டி காத்திருக்கு!
- 10 hrs ago
ரூ1 லட்சத்திற்கு ஸ்கூட்டர்... முழுசார்ஜில் 500 கி.மீ பயணிக்கும் கார்... ஓலாவின் சுதந்திர தின அதிரடி அறிவிப்பு
- 16 hrs ago
நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்குகளில் எது சிறந்தது? ஹோண்டா சிபி300எஃப் vs டோமினார் 400 vs கேடிஎம் 250 ட்யூக்
- 17 hrs ago
ஸ்கிராட்ச் விழுந்தாகூட தானா சரி ஆகிடும்... புதிய கார் கோட்டிங் அறிமுகம்!
Don't Miss!
- News
"உங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா?" கனல் கண்ணன் கைது.. கொந்தளித்த பாஜக அண்ணாமலை
- Finance
சர்வதேச ரெசசனை இந்தியா தோற்கடிக்குமா.. ஏற்றுமதி என்னவாகும்?
- Movies
இனி தம்பதியாக இருக்க முடியாது..கணவரை விட்டு பிரிகிறேன்..பகீர் தகவலை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம்!
- Sports
டி20 உலகக்கோப்பையில் அஸ்வினுக்கு வாய்ப்புள்ளதா??.. ஆகாஷ் சோப்ரா கூறிய விளக்கம்.. அட இதுவும் சரிதானே?
- Lifestyle
உங்க கணவன் அல்லது காதலனுக்கு இந்த விஷயங்கள் மட்டும் தெரிஞ்சிருந்தா நீங்க கொடுத்து வச்சவங்களாம்!
- Technology
ஜியோக்கு போட்டியாக Airtel அறிமுகம் செய்த 2 புது திட்டம்.! இன்றே ரீசார்ஜ் செய்யுங்க.!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
என்ன சொல்றீங்க... விமானங்களுக்குச் சாவியே கிடையாதா? அப்ப எப்படி விமானத்தை ஸ்டார்ட் பண்ணுறாங்க?
நாம் கார் பைக்களை ஸ்டார்ட் செய்யச் சாவியைப் பயன்படுத்துவது போல விமானங்களில் சாவி வழங்கப்படுமா? அப்படி வழங்கப்பட்டால் அது யாரிடம் இருக்கும்? இது குறித்த முழு விபரத்தைக் காணலாம் வாருங்கள்.

நாம் எல்லோரும் கார் அல்லது பைக்கை தினந்தோறும் வாழ்வில் பயன்படுத்தி வருகிறோம். நாம் கார் பைக்கை பாதுகாப்பாக வைத்திருக்க அது திருடு போகாமல் இருக்க அதற்குச் சாவியை வழங்கியுள்ளார். உங்கள் வாகனத்திற்காக வழங்கப்பட்ட சாவியைத் தான் பயன்படுத்தி நீங்கள் அந்த வாகனத்தைப் பயன்படுத்த முடியும்.

வாகனத்தின் இன்ஜினை ஸ்டார்ட் செய்யவும் சரி வாகனத்திற்கு சைடு லாக் செய்யவும் சரி இந்த சாவி முக்கியம். ஆனால் இன்று பலருக்கும் இருக்கும் சந்தேகம் விமானங்களுக்குச் சாவி இருக்குமா? விமானங்கள் எப்படி விமான இன்ஜின்களை ஸ்டார்ட் செய்கிறார்கள்? ஒரு விமானத்தின் சாவி இருக்கும் என்றால் அது யார் பொறுப்பில் இருக்கும்? எனப் பல சந்தேகங்கள் இருக்கிறது இதை தெளிவுபடுத்தத்தான் இந்த பதிவை வழங்கியுள்ளோம்.

விமானத்திற்குச் சாவி இருக்குமா இருக்காதா என்ற கேள்விக்கு முதலிலேயே பதிலைச் சொல்லி விடுகிறோம் அப்பொழுது தான் இதன் காரணங்கள் தெளிவாகப் புரியும். பொதுவாக விமானங்களுக்குச் சாவி என்பது விமானத்தின் வகையைப் பொறுத்து முடிவாகும். தற்போது பயன்பாட்டில் இருக்கும் கமர்ஷியல் விமானங்களுக்குச் சாவி கிடையாது. ஆனால் ஆனால் தனியார் மற்றும் சிறிய ரக விமானங்களுக்குச் சாவி இருக்கிறது.

முதலில் சாவி உள்ள விமானங்களைப் பற்றித் தெளிவாகக் காணலாம். பொதுவாகத் தனி நபர் அல்லது நிறுவனத்தின் பயன்பாடு, சிறிய ரக விமானங்களில் சாவிகள் வழங்கப்பட்டிருக்கும். இதிலும் விமானத்தின் வகையைப் பொறுத்து எந்தெந்த விஷயங்களுக்குச் சாவி வழங்கப்பட்டிருக்கும் என்ற விபரமும் இருக்கிறது.

சில ரக விமானங்களில் விமானத்தின் கதவிற்கு மட்டும் சாவி இருக்கும் விமானிகள் விமானத்தின் கதவின் சாவியை மட்டும் பூட்டிவிட்டு அதை விமான உரிமையாளர்களிடம் ஒப்படைத்துவிடுவார்கள், சில விமானத்தின் காக்பிட்டில் த்ராட்டலை லாக் செய்யவும் சாவிகள் இருக்கும், விமானம் திருடு போவதைத் தடுக்க இப்படியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. சில விமானங்களில் பேட்டரி ஆப்ரேட் செய்யச் சாவி இருக்கும். விமானத்தில் முதலில் பேட்டரியை ஆன் செய்ததால் விமானத்தை ஸ்டார்ட் செய்ய முடியும் என்பதால் பேட்டரியை ஆன் செய்வது முதல் ஸ்டெப் என்பதால் அதில் சாவி கொடுத்தால் ஸ்டார்ட் ஆகும் நிலையில் வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று பயன்பாட்டில் இருக்கும் கமர்ஷியல் விமானங்களுக்குச் சாவி இல்லை. விமானிகள் நேரடியாக விமானத்திற்குள் சென்று விமானத்தை ஸ்டார்ட் செய்யும் வேலையை ஆரம்பித்து விட வேண்டியது தான். கமர்ஷியல் விமானத்தில் சாவி கொடுக்காமல் இருக்க ஒரு காரணமும் இருக்கிறது.

பொதுவாக கமர்ஷியல் விமானங்கள் விமான நிலையத்திற்குத் தரையிறங்கியதும், அதில் பல்வேறு ஊழியர்கள் ஏறி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்வார்கள். சுத்தம் செய்யும் குழுவினர் சுத்தம் செய்வார்கள். விமான இயந்திர பராமரிப்பு பணியாளர்கள் பராமரிப்பு பயணிகளைச் செய்வார். விமான உணவு வழங்கும் பணியாளர்கள் அவர்களுக்குத் தேவையான பணிகளைச் செய்வார். பாதுகாப்புப் பணியாளர்கள் விமானத்தைச் சோதனை செய்வார்கள். இப்படியாக ஒவ்வொருவரும் தனித்தனியாக அதில் பணியாற்ற வேண்டிய நிலை இருக்கிறது.

இதனால் விமானங்களுக்குச் சாவி இருந்தால் அதை யார் வைத்திருப்பது என்பது சிரமமாகிவிடும். ஒரு வேலை சாவி தொலைந்துவிட்டால் விமானத்தை இயக்க முடியாத சூழ்நிலைகள் ஏற்படும். பொதுவாக விமான நிலையங்களில் விமானம் நிறுத்தப்பட்டிருக்கும் பகுதி அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே நடமாடும் பகுதி என்பதால் விமானங்கள் திருடு போகாது. மேலும் அவர்களைக் கண்காணிப்பது எளிது.

அதனால் கமர்ஷியல் விமானங்களில் சாவிகள் இல்லை. ஆனால் தனி நபர் விமானங்கள் நீண்ட நாட்களாகக் கண்காணிப்பு இல்லாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் அதற்குச் சாவி வழங்கப்படுகிறது. இதை விமானத்தைத் தயாரிக்கும் நிறுவனங்களே முடிவு செய்து விமானத்தை வடிவமைக்கும் போதே விமானங்களில் சாவி வேண்டுமா வேண்டாமா என முடிவை எடுக்கின்றனர்.

சரி சாவியே இல்லை என்றால் கமர்ஷியல் விமானம் எப்படி இயங்குகிறது என்ற கேள்வி பலருக்கு இருக்கும். பொதுவாக விமானத்தின் இன்ஜினை ஸ்டார்ட் செய்யும் முன்பு auxiliary power unit என்ற ஒரு கருவியைத் தான் முதலில் இயக்குவார்கள். இது விமானத்தின் பின்பகுதியில் இருக்கும்.

இந்த கருவி ஜெனரேட்டர் மூலம் பவரை பெற்றும் அதிக காற்று அழுத்தத்தை உருவாக்கும். அதிக காற்று அழுத்தம் பின்னர் விமானத்தின் இன்ஜினிற்கு செலுத்தப்படும். இந்த காற்று அழுத்தம் காரணமாக விமானத்தின் இன்ஜின் செயல்படத் துவங்கும். இந்த auxiliary power unit (APU), விமானத்தின் எலெக்டரிக்கல் சிஸ்டம்ஸ், லைட்டிங், கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ், ஆகிய விஷயங்கள் எல்லாம் பேட்டரியில் இயங்கும். ஜெனரேட்டர் மூலம் பேட்டரி பவர் கிடைக்கும்.

இதில் auxiliary power unit மட்டும் விமான பேட்டரி மட்டும் இல்லாமல் விமானத்திற்கு வெளியே ஜெனரேட்டர் மூலமும் பவரை ஏற்றும் திறன் கொண்டதாக இருக்கும். அவசரக் காலங்களில் இதைப் பயன்படுத்தலாம். ஆனால் பேட்டரி பவர் இயங்கினால்தான் விமானம் பறக்க முடியும். நடுவானில் விமானத்தின் இன்ஜினை ரீஸ்டார்ட் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் விமானத்தின் பேட்டரி பவர் மிகவும் முக்கியம்.
-
தோற்றத்தைத் தவிர பெருசா ஒன்னும் மாற்றம் இல்லை... புதிய ஹூண்டாய் டுஸான் - ரிவியூ
-
அடேங்கப்பா... இந்த காரை புக்கிங் பண்றதுக்கே இவ்ளோ காசு கட்டணுமா? எவ்ளோனு தெரிஞ்சா 'ஸ்டண்' ஆயிருவீங்க!
-
ஸ்விஃப்ட் காரில் சிஎன்ஜி ஆப்ஷனா!.. இததாங்க ரொம்ப நாளா எதிர்பாத்து கிடக்கோம்! புக்கிங்கே தொடங்கிட்டாங்களாம்!