விமானத்தில் ஏறும் வரை இருக்கும்... அதற்கு பின் இருக்காது... விமான பணிப்பெண்களின் ஹீல்ஸ் மாயமாகும் ரகசியம்

விமான பணிப்பெண்கள் ஹீல்ஸ் அணிவது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானத்தில் ஏறும் வரை இருக்கும்... அதற்கு பின் இருக்காது... விமான பணிப்பெண்களின் ஹீல்ஸ் மாயமாகும் மர்மம்

விமான பணிப்பெண்கள் எப்போதும் நேர்த்தியாக இருப்பார்கள். அவர்கள் மிகவும் நேர்த்தியான சீருடையை அணிந்திருப்பதுடன், சரியான அளவில் மேக்-அப் செய்திருப்பார்கள். அத்துடன் அவர்கள் உயரமான ஹீல்ஸ் கொண்ட செருப்பையோ அல்லது ஷூ-வையோ அணிந்திருப்பார்கள். விமான பணிப்பெண்கள் தங்களது தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

விமானத்தில் ஏறும் வரை இருக்கும்... அதற்கு பின் இருக்காது... விமான பணிப்பெண்களின் ஹீல்ஸ் மாயமாகும் மர்மம்

ஆனால் விமான பணிப்பெண்கள் உயரமான ஹீல்ஸ் அணிய வேண்டும் என்பதை விமான நிறுவனங்கள் கட்டாயமாக்கியுள்ளனவா? என்ற சந்தேகம் ஒரு சிலருக்கு இருக்கலாம். இந்த கேள்விக்கு பதில் தேடினால், பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும். இதில், சில தகவல்கள் தெளிவற்றதாகவும், குழப்பமானதாகவும் இருக்கலாம்.

விமானத்தில் ஏறும் வரை இருக்கும்... அதற்கு பின் இருக்காது... விமான பணிப்பெண்களின் ஹீல்ஸ் மாயமாகும் மர்மம்

சரி, விமான பணிப்பெண்கள் உயரமான ஹீல்ஸ் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கான பதிலை பார்க்கலாம். விமான பணிப்பெண்கள் சீருடையில் இருக்கும்போது, ஹீல்ஸ் அணிய வேண்டும் என பெரும்பாலான விமான நிறுவனங்கள் விரும்புகின்றன. ஆனால் விமானத்தில் இருக்கும்போது அல்ல. குழப்பமாக இருக்கிறதா?

விமானத்தில் ஏறும் வரை இருக்கும்... அதற்கு பின் இருக்காது... விமான பணிப்பெண்களின் ஹீல்ஸ் மாயமாகும் மர்மம்

விமான நிலையத்திலும் சரி, விமானத்திலும் சரி, விமான பணிப்பெண்கள் சீருடையில்தான் இருப்பார்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம். புரியும்படி சொல்வதென்றால், விமான நிலையத்தில் இருந்து விமானம் நிற்கும் இடத்திற்கு வரும் வரை விமான பணிப்பெண்கள் உயரமான ஹீல்ஸ் அணிய வேண்டும் என்று விமான நிறுவனங்கள் விரும்புகின்றன.

விமானத்தில் ஏறும் வரை இருக்கும்... அதற்கு பின் இருக்காது... விமான பணிப்பெண்களின் ஹீல்ஸ் மாயமாகும் மர்மம்

ஆனால் விமானத்தில் ஏறிய பிறகு தட்டையான செருப்பு அல்லது ஷூ-வைதான் விமான பணிப்பெண்கள் அணிந்திருப்பார்கள். தோற்றம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காகவே விமான நிறுவனங்கள் இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றன. விமான நிலையத்தில் இருந்து விமானத்திற்கு வரும் வரை ஏன் உயரமான ஹீல்ஸ் அணிய வேண்டும்? என்பதை முதலில் பார்த்து விடலாம்.

விமானத்தில் ஏறும் வரை இருக்கும்... அதற்கு பின் இருக்காது... விமான பணிப்பெண்களின் ஹீல்ஸ் மாயமாகும் மர்மம்

அதற்கு முதலில் ஹீல்ஸ் அணிவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிய வேண்டும். ஹீல்ல் அணிந்தால், உயரமான தோற்றம் கிடைக்கும். ஹீல்ஸ் அணியும் பெண்களின் உயரம் 5-6 இன்ச் அதிகரிக்கும் என்பது உண்மை. இது பெண்களுக்கு கவர்ச்சியான தோற்றத்தை வழங்குகிறது. மேலும் ஸ்டைலான லுக் கிடைப்பதற்கும், ஹீல்ஸ் உதவுகிறது.

விமானத்தில் ஏறும் வரை இருக்கும்... அதற்கு பின் இருக்காது... விமான பணிப்பெண்களின் ஹீல்ஸ் மாயமாகும் மர்மம்

விமான பணிப்பெண்கள் இப்படியான ஸ்டைலான லுக்கில் இருக்க வேண்டும் என்பதைதான் பெரும்பாலான விமான நிறுவனங்கள் விரும்புகின்றன. எனவேதான் விமான நிலையத்தில் இருந்து விமானத்திற்கு வரும் வரை, விமான பணிப்பெண்கள் உயரமான ஹீல்ஸ் அணிகின்றனர். ஆனால் இந்த நேரத்தில் ஹீல்ஸ் அணிவதால், விமான பணிப்பெண்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

விமானத்தில் ஏறும் வரை இருக்கும்... அதற்கு பின் இருக்காது... விமான பணிப்பெண்களின் ஹீல்ஸ் மாயமாகும் மர்மம்

உயரமான ஹீல்ஸ் அணிந்து கொண்டு நடக்கும்போது, கால் வலி ஏற்படும். மேலும் உயரமான ஹீல்ஸ் உடன் நடப்பதும் சிரமமான காரியம்தான். நிலைமை இப்படி இருக்கும்போது, விமான பணிப்பெண்கள் விமான நிலையத்தில் இருந்து விமானம் வரை நீண்ட தொலைவு பயணிக்க வேண்டிய நிலை, சில சமயங்களில் ஏற்படுகிறது.

விமானத்தில் ஏறும் வரை இருக்கும்... அதற்கு பின் இருக்காது... விமான பணிப்பெண்களின் ஹீல்ஸ் மாயமாகும் மர்மம்

எனவே இந்த நேரத்தில் ஹீல்ஸ் அணிவதால் விமான பணிப்பெண்களுக்கு கால் வலியும், அசௌகரியமும் ஏற்படும். அதே நேரத்தில் விமானத்தில் ஏறிய பிறகு, விமான பணிப்பெண்கள் ஹீல்ஸ் அணிய தேவை இல்லை. இதை கேட்பதற்கு உங்களுக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும், இதற்கு பின்னால் சில காரணங்கள் உள்ளன.

விமானத்தில் ஏறும் வரை இருக்கும்... அதற்கு பின் இருக்காது... விமான பணிப்பெண்களின் ஹீல்ஸ் மாயமாகும் மர்மம்

பாதுகாப்புதான் முதன்மையான காரணம். அதாவது டர்புலென்ஸ் போன்ற நிகழ்வுகள் நடக்கும்போது, தங்கள் விமான பணிப்பெண்கள் பாதிக்கப்படுவதை விமான நிறுவனங்கள் விரும்புவதில்லை. டர்புலென்ஸின்போது விமானங்கள் குலுங்கும் நிலை ஏற்படலாம். அப்போது விமான பணிப்பெண்கள் ஹீல்ஸ் அணிந்திருந்தால், சிரமங்களை சந்திக்க நேரிடும்.

விமானத்தில் ஏறும் வரை இருக்கும்... அதற்கு பின் இருக்காது... விமான பணிப்பெண்களின் ஹீல்ஸ் மாயமாகும் மர்மம்

எனவே விமானத்தில் ஏறிய பிறகு தட்டையான செருப்பு அல்லது ஷூ-வை விமான பணிப்பெண்கள் அணிந்து கொள்வார்கள். விமானத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் தங்களை காப்பாற்றி கொள்வதுடன் மட்டும் அல்லாது, பயணிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் விமான பணிப்பெண்களுக்கு உள்ளது. எனவே அவர்களின் செருப்பு அல்லது ஷூ சௌகரியமானதாக இருப்பது அவசியம்.

விமானத்தில் ஏறும் வரை இருக்கும்... அதற்கு பின் இருக்காது... விமான பணிப்பெண்களின் ஹீல்ஸ் மாயமாகும் மர்மம்

இத்தகைய பாதுகாப்பு காரணங்களால்தான், விமானத்தில் இருக்கும் போது விமான பணிப்பெண்கள் ஹீல்ஸ் அணிவதை பெரும்பாலான விமான நிறுவனங்கள் விரும்புவதில்லை. ஆனால் விமான பணிப்பெண்கள் எந்த நேரத்தில் எத்தகைய செருப்பு/ஷூ அணிய வேண்டும்? என்பது விமான நிறுவனங்கள் மற்றும் நாடுகளை பொறுத்து மாறுபடும். நாங்கள் இங்கே கூறியுள்ளது பெரும்பாலான நிறுவனங்களின் நடைமுறையாகும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Do Woman Flight Attendants Have To Wear High Heels? Read More To Find Out. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X