வாகன நம்பர் பிளேட்டில் o மற்றும் i என்ற ஆங்கில எழுத்துக்கள் இடம் பெறாது ஏன் தெரியுமா?

இந்தியாவின் வாகனங்களின் நம்பர் பிளேட்டில் o மற்றும் i ஆகிய ஆங்கில எழுத்துக்கள் இடம் பெறாது. இது ஏன்? இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? வாருங்கள் விரிவாகக் காணலாம்.

வாகன நம்பர் பிளேட்டில் o மற்றும் i என்ற ஆங்கில எழுத்துக்கள் இடம் பெறாது ஏன் தெரியுமா ?

இந்தியாவில் போக்குவரத்தை முறைப்படுத்தப் போக்குவரத்திற்கான தனித் துறைகளை மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களைப் போக்குவரத்துத் துறையின் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும், அங்கு வழங்கப்படும் எண்களை வாகனத்தின் முன்பு நம்பர் பிளேட்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி.

வாகன நம்பர் பிளேட்டில் o மற்றும் i என்ற ஆங்கில எழுத்துக்கள் இடம் பெறாது ஏன் தெரியுமா ?

இந்திய அரசு வாகனங்களை அதன் தன்மைக்கும் பயன்பாட்டிற்கும் ஏற்ப பல விதங்களாகப் பிரித்துள்ளனர். அதன்படி சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்களுக்கு வெள்ளி நிற நம்பர் பிளேட்டையும், டிராவல்ஸ் பயன்பாட்டிற்கான வாகனங்களுக்கு மஞ்சள் நம்பர் பிளேட்டையும் ஒதுக்கியுள்ளது. இந்த நிற நம்பர் பிளேட்டில் கருப்பு நிறத்தில் வாகனத்தின் பதிவு எண்ணை எழுத வேண்டும்

வாகன நம்பர் பிளேட்டில் o மற்றும் i என்ற ஆங்கில எழுத்துக்கள் இடம் பெறாது ஏன் தெரியுமா ?

அதே போல தற்போது உள்ள எலெக்ட்ரிக் வாகனங்களுக்காகப் பச்சை நிற நம்பர் பிளேட்களை அரசு ஒதுக்கியுள்ளது. அதில் சொந்த பயன்பாட்டிற்காக வாங்கப்படும் நம்பர் வாகனங்களில் பச்சை நிற நம்பர் பிளேட்டில் எழுத்துக்களை வெள்ளை நிறத்திலும், டிராவல்ஸ் பயன்பாட்டிற்காக வாங்கப்படும் வாகனங்களில் பச்சை நிற நம்பர் பிளேட்டில் எழுத்துக்களை மஞ்சள் நிறத்திலும் எழுத வேண்டும்

வாகன நம்பர் பிளேட்டில் o மற்றும் i என்ற ஆங்கில எழுத்துக்கள் இடம் பெறாது ஏன் தெரியுமா ?

இது போக வாடகைக்கு விடப்படும் செல்ஃப் டிரைவிங் கார்களுக்கான பதிவெண்ணைக் கருப்பு நிற நம்பர் பிளேட்டில் மஞ்சள் நிற எழுத்துக்களுடன் எழுத வேண்டும். இது போக விற்பனை செய்யப்படாத கார்களுக்கான தற்காலிக பதிவு எண்ணைச் சிவப்பு நிற நம்பர் பிளேட்டில் வெள்ளி நிற எழுத்துக்களைக் கொண்டு எழுதப்பட்டிருக்க வேண்டும். விற்பனை செய்து பதிவிற்காகக் காத்திருக்கும் வாகனங்களில் மஞ்சள் நிற போர்டில் சிவப்பு நிறத்தில் எண்ணை எழுதியிருக்க வேண்டும். இது தான் தற்போது இந்தியாவில் இருக்கும் நடை முறை

வாகன நம்பர் பிளேட்டில் o மற்றும் i என்ற ஆங்கில எழுத்துக்கள் இடம் பெறாது ஏன் தெரியுமா ?

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கு ஒரு விதமான நம்பர் பேட்டர்ன் வழங்கப்படுகிறது. அதன்படி முதல் இரண்டு எழுத்துக்கள் ஆங்கில எழுத்துக்கள் அடுத்த இரண்டெழுத்துக்கள் எண்கள் அதன் பின் ஒன்று அல்லது இரண்டு எழுத்துக்கள் ஆங்கில எழுத்துக்கள் அதன்பின் உள்ள நான்கு எழுத்துக்கள் எண்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

வாகன நம்பர் பிளேட்டில் o மற்றும் i என்ற ஆங்கில எழுத்துக்கள் இடம் பெறாது ஏன் தெரியுமா ?

முதல் இருண்டு ஆங்கில எழுத்துக்கள் அந்த வாகனம் எந்த மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதை குறிக்கும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அந்த மாநிலத்தின் பெயரை வைத்து ஒரு கோட் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த மாநிலத்தில் உள்ள எல்லா வாகனங்களும் அந்த கோடை கொண்டிருக்கும். உதாரணமாகத் தமிழ்நாட்டிற்கு TN என ஒதுக்கப்பட்டுள்ளது.

வாகன நம்பர் பிளேட்டில் o மற்றும் i என்ற ஆங்கில எழுத்துக்கள் இடம் பெறாது ஏன் தெரியுமா ?

அடுத்து வரும் இரண்டு இலக்கங்கள் எந்த ஆர்டிஓ என்பதைக் குறிப்பிடும். உதாரணமாகத் தமிழ்நாட்டில் ஒவ்வொரு பெரிய நகரங்களுக்கும் ஒரு போக்குவரத்து ஆர்டிஓ அலுவலகங்கள் அமைக்கப்பட்டிருக்கும். அந்தந்த ஆர்டிஓ அலுவலகங்களுக்கு ஒரு எண் ஒதுக்கப்படும் எந்த எண் தான் அந்த இடத்தில் இருக்கும்.

வாகன நம்பர் பிளேட்டில் o மற்றும் i என்ற ஆங்கில எழுத்துக்கள் இடம் பெறாது ஏன் தெரியுமா ?

அடுத்ததாக இருப்பது ஆங்கில சொற்கள் அந்த சொற்கள் ஆர்டிஓ எந்த சிரீஸில் இந்த வாகனத்தைப் பதிவு செய்துள்ளது என்பதைக் குறிப்பிடுகிறது. அதாவது வாகனத்திற்கு 4 இலக்க எண்கள்தான் வழங்க முடியும். ஆக 9999 வாகனங்களுக்கு மேலோக ஒரு சிரிஸில் பதிவு முடிந்தவுடன் அடுத்த சிரிஸை துவங்குவார்கள். அதன்படி எந்த குறிப்பிட்ட வாகனம் எந்த சிரீஸில் பதிவு செய்யப்பட்டது என்பதை இந்த எழுத்துக்கள் குறிக்கிறது.

வாகன நம்பர் பிளேட்டில் o மற்றும் i என்ற ஆங்கில எழுத்துக்கள் இடம் பெறாது ஏன் தெரியுமா ?

அடுத்து உள்ள 4 எண்கள் தான் வாகனத்தின் பதிவு எண்ணாகும் ஒரு குறிப்பிட்ட ஆர்டிஓவில் குறிப்பிட்ட சிரிஸில் குறிப்பிட்ட எண்ணில் ஒரு வாகனம் மட்டுமே பதிவாகியிருக்கும். இதனால் நாட்டில் எத்தனை வாகனங்கள் மொத்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விபரங்களைப் பராமரிக்கவும், ஏதேனும் வாகனங்கள் சட்டவிரோதமான செயல்களுக்கான பயன்படுத்தப்பட்டால் அந்த வாகனத்தின் எண்ணை வைத்து அதன் உரிமையாளரைக் கண்டறிதல் ஆகியவற்றிற்கு இது பெரிதும் பயன்படுகிறது.

வாகன நம்பர் பிளேட்டில் o மற்றும் i என்ற ஆங்கில எழுத்துக்கள் இடம் பெறாது ஏன் தெரியுமா ?

இந்நிலையில் இவ்வாறு பதிவு செய்யும் போது ஒவ்வொரு மாநில அரசுகளும் ஒவ்வொரு விதிமுறைகளைப் பின்பற்றுகின்றன. தமிழகத்தில் பொருத்தவரை G என்ற சிரீஸில் வரும் எண்கள் அரசு சார்பில் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அரசு அதிகாரிகளுக்கான வழங்கப்படும் வாகனங்கள் போலீஸ் அதிகாரிகளுக்காக வழங்கப்படும் வாகனங்கள் இப்படியாக அரசுக்குச் சொந்தமான வாகனங்களை G என்ற சிரிஸில் பதிவு செய்கின்றனர்.

வாகன நம்பர் பிளேட்டில் o மற்றும் i என்ற ஆங்கில எழுத்துக்கள் இடம் பெறாது ஏன் தெரியுமா ?

அதே போலத் தமிழகத்தில் அரசு பேருந்துகளுக்காக N என்ற சீரிஸ் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படியாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு சிரீஸ்கள் ஒவ்வொரு பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சுவாரஸ்யமான ஒரு விஷயம் இருக்கிறது. இந்தியா முழுவதும் நம்பர் பிளேட்ட் சிரீஸில் ஆங்கிலத்தில் o மற்றும் i ஆகிய எழுத்துக்களை பயன்படுத்தத் தடை உள்ளது.

வாகன நம்பர் பிளேட்டில் o மற்றும் i என்ற ஆங்கில எழுத்துக்கள் இடம் பெறாது ஏன் தெரியுமா ?

ஆம் o மற்றும் i ஆகிய எழுத்துக்கள் எந்த வாகனங்களுக்கும் வழங்கப்படமாட்டாது அதற்கு முக்கியமான காரணம் இந்த எழுத்துக்கள் எண்களான 0 மற்றும் 1 ஆகிய எண்களைப் போன்ற தோற்றத்தில் இருப்பதால் குழப்பம் ஏற்படும் எதற்காக ஆங்கிலத்தில் o மற்றும் i ஆகிய எழுத்துக்களைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. இந்த தடை சிரீஸிற்கு மட்டும் தான் ஆனால் மாநில கோட்களுக்கு இந்த தடை கிடையாது. இந்த தகவல் உங்களுக்குப் பிடித்திருந்தால் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். இது போன்று உங்களுக்குத் தெரிந்த சுவாரஸ்மான தகவல்களை கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Do you know i and o are not used in number plates
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X