இப்போ நாம ஜம்முனு பயணிக்கிற எலெக்ட்ரிக் ரயில் இந்தியால எப்போ முதல் முறையா பயன்பாட்டுக்கு வந்துச்சு தெரியுமா?
இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் ரயில் மிக அதிகளவில் பயன்பாட்டில் இருக்கின்றன. மின்சார ரயில் நாட்டில் எப்போது முதல் முறையாக பயன்பாட்டுக்கு வந்தது என்கிற கேள்விக்கான பதிலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். இதுதவிர இன்னும் பல சுவாரஷ்ய தகவல்களையும் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஆசியாவுலேயே மிகப் பெரிய வலை அமைப்பைக் கொண்ட துறையாக இந்தியன் ரயில்வேஸ் இருக்கின்றது. இது தனது முழு வலையமைப்பையும் மின் மயமாக்கும் பணியில் கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றது. இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் எஞ்சியுள்ள ஒரு சில பகுதிகளும் முழுமையாக மின் வலையமைப்பிற்கு மாற்றப்பட உள்ளன.

இந்த மாதிரியான சூழ்நிலையில் இந்தியாவில் எப்போது முதல் முறையாக மின்சார ரயில்கள் தண்டவாளங்களில் ஓடத் தொடங்கின? மற்றும் எப்போதில் இருந்து இந்தியன் ரயில்வேஸ் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றது? என்கிற கேள்வி நம்மில் ஒரு சிலருக்கு எழும்பியிருக்கும். இதற்கான பதிலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
1925 பிப்ரவரி 3 ஆம் தேதி அன்றே இந்தியாவில் முதல் முறையாக மின்சார ரயில்கள் ஓட தொடங்கின. இப்போது எப்படி முதற்கட்டமாக வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் ஓட தொடங்கி இருக்கின்றதோ, அதேபோலவே அந்த கால கட்டத்தில் ஒவ்வொரு கட்டமாக எலெக்ட்ரிக் ரயில்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன.

முதன் முதலில் பாம்பே விக்டோரியா டெர்மினஸ் மற்றும் குர்லா ஹார்பர் இடையேதான் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ரயில் இயக்கப்பட்டது. இப்போதைய சத்ரபதி சிவாஜி மஹாராஜ் டெர்மினஸே அப்போதைய பாம்பே விக்டோரியா டெர்மினஸ் என்பது குறிப்பிடத்தகுந்தது. நூறு ஆண்டுகளாக இந்தியன் ரயில்வேஸ் 100 சதவீத மின் மயமாக்கலை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கின்றது.
முந்தைய காலகட்டத்தில் நிலக்கரி, டீசல் உள்ளிட்டவற்றில் இயங்கும் எஞ்ஜின்களே ரயிலின் இயக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றைக் குறைக்கும் விதமாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக ரயில்வேத்துறையை மாற்றும் விதமாகவும் இந்தியன் ரயில்வேஸ் தொடர் மேம்படுத்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. வேகமான மற்றும் அதீத திறன் கொண்ட போக்குவரத்தை வழங்கும் விதமான முயற்சிகளிலும் அது ஈடுபட்டு வருகின்றது.

2022 - 23 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 1,973 கிமீ பாதை மின்மயமாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இது 2021 - 22 ஆம் ஆண்டைக் காட்டிலும் 41 சதவீதம் அதிகம் ஆகும். ஆம், இந்தியன் ரயில்வேஸ் தனது மின்மயமாக்கல் பணிகளை அதீத வேகத்தில் மேற்கொண்டு வருகின்றது. இதன் விளைவாகவே முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் 2022- 23 ஆண்டில் அதிகளவில் அதனால் மின்மயமாக்கல் நடைபெற்றிருக்கின்றது.
தற்போது நாட்டின் ஒட்டுமொத்த ரயில் பாதையில் 83 சதவீதம் வரை மின் மயமாக்கப்பட்டு இருக்கின்றது. 2030 ஆம் ஆண்டிற்குள் ரயில்வேஸ் பூஜ்ஜியம் கார்பன் உமிழ்வு திறன் கொண்ட துறையாக மாற்றப்பட இருக்கின்றது. அதாவது, இன்னும் ஏழு ஆண்டுகளில் 100 சதவீதம் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட இருக்கின்றது.

100 சதவீதம் மின்மயமாக்கப்பட்ட ரயில்வே மண்டலங்களின் பட்டியல்:
வடக்கு-மத்திய ரயில்வே துறை (North Central Railway)
கிழக்கு கடற்கரை ரயில்வே துறை (East Coast Railway)
தென்-கிழக்கு ரயில்வே துறை (South Eastern Railways)
மேற்கு-மத்திய ரயில்வே துறை (West Central Railway)
கிழக்கு ரயில்வே துறை (Eastern Railway)


Click it and Unblock the Notifications
