ரயில் கதவுகளுக்கு அருகே உள்ள ஜன்னல்களில் மட்டும் கம்பிகள் ஏன் அதிகமாக உள்ளன தெரியுமா?
ரயில்களின் கதவுகளுக்கு அருகே உள்ள ஜன்னல்களில் மட்டும் மற்ற ஜன்னல்களை விட அதிகமான கம்பிகள் இருக்கும் ஏன் தெரியுமா? இதற்குப் பின்னால் உள்ள காரணத்தைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் ரயில் பயணம் என்பது இன்றியமையாததாகிவிட்டது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் குறைவான விலையில் பயணம் செய்ய இருக்கும் ஒரே வழி ரயில் பயணம் மட்டும் தான். மற்ற எல்லா விதமான போக்குவரத்தும் ரயில் பயணத்தை விட அதிக விலையில் தான் இருக்கும். இந்நிலையில் ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் பயணிகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு விஷயங்கள் செய்யப்படுகின்றன. இதில் சில விஷயங்கள் நமக்குத் தெரிந்தாலும் பல விஷயங்கள் தெரிவதில்லை.

ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பிற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிற சிங்கிலி பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் ஆபத்தான நேரத்தில் அதைப் பிடித்து இழுத்தால் ரயில் நிறுத்தப்படும். இது நாம் எல்லோருக்கும் உள்ள பயணிகளுக்கான பாதுகாப்பு அம்சம் ஆனால் ரயிலில் மற்றொரு அம்சமும் ரயில் பயணிகளுக்குப் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ளது. இதை எல்லாம் ஒவ்வொரு முறை ரயில் பயணத்தில் பார்த்தாலும் இதற்கான காரணம் மட்டும் தெரியாமல் இருந்தது.

நாமும் அதைப் பெரிய அளவில் பொருட்படுத்தாமல் சென்றிருப்போம். அப்படியான ஒரு தகவலைத் தான் இன்று நாம் கொண்டுவரப்போகிறோம். ரயில் பெட்டிகளில் பயணிகள் ஏறும் இறங்கும் இடத்திற்கு அருகில் உள்ள சீட்களில் ஜன்னலில் மட்டும் மற்ற ஜன்னலை விட மிக அதிகமான கிரில் கம்பிகள் கொடுக்கப்பட்டிருக்கும். இது ஏன் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் குறிப்பாகப் பயணிகள் ஏறும் இறங்கும் இடத்தில் மட்டும் அதிகம் கொடுக்கப்பட்டுள்ளதே எதற்காக?

பொதுவாக ரயில்களில் பயணிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது திருட்டு சம்பவங்கள் தான். குறிப்பாக இரவு நேரங்களில் பயணிகள் தூங்கிக் கொண்டிருக்கும் போது திருடர்கள் பயணிகளின் உடைமைகளையோ பொருட்களையோ திருடிச்சென்று விடுவார்கள். இப்படியாகத் திருட்டு சம்பவம் பல இதுவரை ரயில்களில் அதிகம் நடந்துள்ளன. அதுவும் குறிப்பாக ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்கும் போது தான் இவ்வாறான திருட்டு சம்பவங்கள் அதிகம் நடக்கும்.

ஓடும் ரயிலில் ஒருவர் திருடினால் திருடும் போது மாட்டிக்கொண்டால் அவரால் தப்பிக்க முடியாது. என்பதால் நிற்கும் ரயிலையே திருடர்கள் இவ்வாறான முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதுவும் குறிப்பாகத் திருடர்கள் பலர் ரயிலின் படிக்கட்டு அருகே நின்று கொண்டு ரயில் கிளம்பும் நேரத்தில் ஜன்னல் அருகே உள்ள சீட்பகுதிக்குள் கையைவிட்டுத் திருடும் சம்பவம் முன்னர் அதிகம் நடந்துள்ளது.

இரவு நேரங்களில் இந்த திருட்டு நடப்பதால் அதிலிருக்கும் பயணிகளுக்கு இது பெரும்பாலும் தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் ரயில் கிளப்பிச் செல்வதால் பயணிகளால் எதுவும் செய்யவும் முடிவதில்லை. இதனால் இவ்வாறான பிரச்சனைகளைத் தடுக்க ரயில்வே நிர்வாகம் யோசித்தது. அதன்படி ஜன்னல் கம்பிகளுக்கு இடையேயான இடைவெளி அதிகம் இருப்பதால் தான் இந்த திருட்டு நடக்கிறது. எனக் கணித்தனர்.

இதையடுத்து ரயில் பெட்டிகளில் உள்ள ஜன்னல் கம்பிகளின் இடைவெளியைக் குறைக்க முயற்சி செய்தனர். அதன் காரணமாக ரயில்களில் கதவுகளுக்கு அருகே உள்ள சீட்டின் ஜன்னல் கம்பிகள் மட்டும் அதிகமாக கிரில்கள் கொண்டு ஜன்னல் கம்பிகளுக்கு இடையேயான இடைவெளியைக் குறைத்துள்ளனர். இதன் மூலம் திருடர்களால் ரயில் கிளம்பும் நேரத்தில் ஜன்னல் வழியாகக் கையை விட்டு திருட்டில் ஈடுபட முடியாது.

இப்படியான முறை ஐசிஎஃப் -ல் தயாரிக்கப்பட்ட சிலீப்பர் வகுப்பு பெட்டிகள் மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகளில் மட்டுமே காண முடியும். சூப்பர் ஃபாஸ்ட் ரயில்களில் பொருத்தப்படும் சிவப்பு நிற பெட்டிகளில் இந்த முறை இருக்காது. இதற்கு முக்கியமான காரணம் இந்த பெட்டிகள் எல்லாம் ரயிலில் எடையைக் குறைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டவை அதனால் அதிகமாக இருப்பு பொருட்களை இதில் சேர்க்க முடியாது.

ஆனால் அதே வேளையில் பாதுகாப்பும் முக்கியம் என்பதால் இந்த ரயில்களில் கண்ணாடி ஜன்னல்கள் திரைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதை இறக்கிவிட்டால் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே அதிக இடைவெளி இருந்தாலும் ஜன்னலை மூடிக்கொண்டால் திருட்டு சம்பவத்தைத் தவிர்த்துவிடலாம்.

இதுதவிர ஏசி பெட்டிகள் முழுவதும் கண்ணாடி கொண்டு ஜன்னல்கள் சீல் செய்யப்பட்டுள்ளதால் அங்கும் இந்த முறையிலான ஏற்பாடுகள் தேவையில்லை. நாம் இவ்வளவு நாட்கள் ரயிலில் பயணம் செய்திருந்தாலும் பலருக்கு இந்த குறிப்பிட்ட சீட்களில் மட்டும் ஏன் ஜன்னல் கம்பிகள் அதிகமாக இருக்கிறது என்ற காரணம் தெரியாது. இது முற்றிலும் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று உங்களுக்கு ஏதாவது சுவாரஸ்யமான தகவல் கிடைத்தால் கமெண்ட்டில் எங்களுடன் பகிருங்கள்


Click it and Unblock the Notifications