இனி கஸ்டமர்ஸை யாராலும் ஏமாற்ற முடியாது! இன்னும் ஒருசில நாட்களில் வருகிறது அரசின் விற்பனைக்கு பிந்தைய சேவை தளம்
விற்பனைக்கு பிந்தையை சேவையை மிக சிறப்பாக வாடிக்கையாளர்களுக்கு தயாரிப்பாளர்கள் வழங்க வேண்டும் என்பதற்காக அரசு ஓர் சூப்பரான வலைதளத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தளம் இன்னும் ஒரு சில வாரங்களில் பயன்பாட்டிற்கு வர இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு சில வாடிக்கையாளர்கள் ஓர் பொருளை வாங்கிய அடுத்த சில தினங்களிலேயே மிக மோசமான அனுபவத்தைச் தாங்கள் பெற்றதாக கூறுவதை நம்மால் காண முடிகின்றது.
குறிப்பாக, பலர் தங்களுக்கு பழுதற்ற பொருளை நிறுவனங்கள் ஏமாற்றி விற்பனைச் செய்துவிட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும், விற்பனைக்கு பின்னர் குறிப்பிட்ட அந்த பொருளை தயாரித்த நிறுவனம் சரிவர தங்களுக்கு சேவையை வழங்குவதில்லை என்றும், சரிவர பதிலும் அவர்களிடத்தில் கிடைப்பதில்லை என்ற புகார்களும் நாடு முழுவதும் எழும்பிய வண்ணம் இருக்கின்றன. சமீபத்தில்கூட கேரள நடிகரான கிரண் அரவிந்தக்ஷன், தனது ஃபோக்ஸ்வேகன் போலோ கார் பழுதாகி சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சுமார் 16 மாதங்களாக கார் ரிப்பேர் செய்யப்படாமல் சர்வீஸ் சென்டரிலேயே நிறுத்தப்பட்டிருப்பதாகக் கூறி போராட்டத்தில் களமிறங்கினார்.

இத்தகைய அவல நிலையைக் குறைக்கும் பொருட்டே அரசு சார்பில் இந்த பிரத்யேக தளம் உருவாக்கப்பட்டு வருகின்றது. இங்கு நுகர்வோர்கள் தாங்கள் வாங்கிய எந்த பொருளுக்கும் விற்பனைக்கு பிந்தையை சேவையை சுலபமாக பெற்றுக் கொள்ள முடியும். அதாவது, கார், செல்போன், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்திற்குமான ஒற்றை சேவை தளமாக அரசின் இந்த புதிய தளம் இருக்கும் என கூறப்படுகின்றது.
சிறப்பு சேவையை வழங்கும் தளமாக மட்டுமே இல்லாமல் இது சேவைக்கான காலக்கெடு, சேவை மையங்களின் இருப்பிடம் மற்றும் உதிரி பாகங்களின் இருப்பு உள்ளிட்டவை போன்ற மிக முக்கியமான தகவல்களை வழங்கக் கூடியதாகவும் இருக்கும் என கூறப்படுகின்றது. ஆகையால், இந்த தளம் நுகர்வோர்களுக்கு ஓர் வரப் பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, ஒரே தளத்தில் அனைத்திற்குமான தகவலை பெற்றுக் கொள்ள முடியும் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது.
சமீபத்தில் ஃபோர்டு நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறியது. முந்தைய கால கட்டத்தில் விற்பனையில் கொடிக்கட்டி பறந்த அந்நிறுவனம் இப்போது இருந்த இடம் தெரியாமல் போய் இருக்கின்றது. இதுபோன்று பன்னாட்டு நிறுவனங்கள் சந்தையை விட்டு வெளியேறும்போது, அது எத்தனை காலத்திற்கு விற்பனைக்கு பிந்தைய சேவை ஆதரவை நாட்டில் வழங்கும் மற்றும் உதிரி பாகங்களை நாட்டில் விற்பனைச் செய்யும் என்பதையும் இந்த தளத்தில் நம்மால் அறிந்துக் கொள்ள முடியும்.
இத்தகைய ஓர் பயனுள்ள தளத்தையே அடுத்து வரும் சில வாரங்களில் அரசு பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றது. சமீபத்தில், கியா சொனெட் மற்றும் டாடா நெக்ஸான் இவி ஆகிய இரு கார்களும் ஷோரூமில் சர்வீஸுக்காக விட்டபோது விபத்தைச் சந்தித்தன. இரண்டும் சர்வீஸ் மைய ஊழியர்களின் கவனக் குறைவால் விபத்தைச் சந்தித்தன. இருப்பினும், சர்வீஸ் மைய நிர்வாகம் அந்த காரை சரி செய்ய இன்சூரன்ஸை கிளைம் செய்யும்படி கார் உரிமையாளர்களை வற்புறுத்தியது.
இதில், கியா சொனெட் காரின் விஷயம் இணையத்தில் அதி-வேகமாக பரவியதை அடுத்து சர்வீஸ் மைய நிர்வாகம் பைசா செலவில்லாமல் காரை சர்வீஸ் செய்து தருவதாக அவர்களே முன் வந்தனர். அது தற்போது நல்ல நிலைக்கு மாற்றப்பட்டு வாடிக்கையாளர்களிடமும் வழங்கப்பட்டுவிட்டது. இந்த மாதிரியான சூழலே நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவுகின்றது. இதுமட்டுமில்லைங்க, காரை வாங்கிய சில தினங்களிலேயே பிரச்னைகளைச் சந்திக்கும் வாடிக்கையாளர்களும் நாட்டில் உள்ளனர்.
இதன் விளைவாக ஷோரூம் போராட்டம், சலசலப்பு ஆகியவை அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன. இதுபோன்ற ஓர் சூழலைத் தவிர்க்க நிச்சயம் அரசின் இந்த தளம் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த தளத்தில் விவசாய உபகரணங்கள், ஆட்டோமொபைல்கள் (வாகனங்கள்) மற்றும் வாகன உபகரணங்கள் ஆகியவற்றிற்கும் சேவைக்கு பிந்தையை சேவையை இந்த தளத்தின் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும் என இந்த தளத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றி வரும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இத்துடன், ஓர் வாடிக்கையாளர்களுக்கு தங்களுடைய வாகனம் அல்லது பிற சாதனத்தில் ஏற்பட்டிருக்கும் கோளாறை எப்படி சரி செய்வது என்பதற்கான விபரங்களும் இந்த தளத்தில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வாயிலாக சிறு சிறு கோளாறுகளை வாடிக்கையாளர்கள் தங்களுடையை வீட்டிலேயே வைத்து சரி செய்து கொள்ள முடியும். மேலும் தேவையற்ற பண செலவு மற்றும் மெக்கானிக்குகளின் இழுத்தடிப்பு போன்றவற்றை தவிர்க்க முடியும்.


Click it and Unblock the Notifications








