வீட்டுக்கு போறப்ப மளிகை சாமான் வாங்கற மாதிரி 5 கோடி ரூபா காரை வாங்கி சென்ற டாக்டர்! ஷோரூமே ஆடி போயிருச்சு!

சொந்தமாக ஒரு புதிய காரை வாங்குவது என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருணம். நமது தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய கூடிய காரை தேர்வு செய்வது, அதிக காலம் எடுத்து கொள்ளும் ஒரு செயல்முறை ஆகும். இதற்காக இணையதளங்களில் நிறைய தகவல்களை தேட வேண்டியிருக்கும். நண்பர்களிடம் நிறைய விசாரிக்க வேண்டியிருக்கும்.

இதன் மூலம்தான் நமது பட்ஜெட்டிற்கு ஏற்ற, அதே நேரத்தில் அதிக வசதிகள் நிரம்பிய ஒரு காரை நம்மால் தேர்வு செய்ய முடியும். இறுதியாக எந்த காரை வாங்க போகிறோம்? என்ற முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகி விடும். இடைப்பட்ட காலத்தில் ஏற்படும், அந்த காரை வாங்கலாமா? இந்த காரை வாங்கலாமா? என்பது போன்ற குழப்பங்கள் சுகமானவை.

Doctor Buys Lamborghini Huracan Tecnica Worth Rs 5 Crore

இது போன்ற சுகமான குழப்பங்களை எல்லாம் கடந்து, நமக்கு ஏற்ற சரியான காரை தேர்வு செய்த பின் ஒரு திருப்தி ஏற்படும். அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதற்கு பின் புதிய காரின் டெலிவரி நாளுக்காக காத்திருக்கும் தவிப்பும் கூட சுகமானதுதான்.

அன்றைய தினம் புத்தாடைகளை எல்லாம் அணிந்து, குடும்பத்துடன் ஷோரூமிற்கு சென்று, கேக் எல்லாம் வெட்டி, புது காரை டெலிவரி எடுத்த கையோடு, வெளியே ஒரு ரவுண்ட் அடித்து விட்டு வந்தால், எதையோ சாதித்ததை போன்ற உணர்வு கிடைக்கும். எனவே கார் டெலிவரி நிகழ்ச்சிகள் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றன.

Lamborghini Huracan Tecnica

கார் டெலிவரி நிகழ்ச்சிகளுக்கு வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். எனவே வாடிக்கையாளர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக, இந்த நிகழ்ச்சிகளை நடத்த கார் ஷோரூம்கள் மெனக்கெடுகின்றன. இதனால் சில லட்ச ரூபாய் செலவில் வாங்கப்படும் கார்களின் டெலிவரி நிகழ்ச்சிகளே மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்படுகின்றன.

ஆனால் டாக்டர் ஒருவரோ, பல கோடி ரூபாய் மதிப்புடைய லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா (Lamborghini Huracan Tecnica) காரை, ஏதோ மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் மளிகை பொருட்களை வாங்கி செல்வது போல், மிகவும் சாதாரணமான முறையில் டெலிவரி எடுத்துள்ளார்.

இந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. Doctor Rahil Chaudhary என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வைரல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வைரல் வீடியோவில், லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா காரை, டாக்டர் டெலிவரி எடுப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

அந்த சமயத்தில் அவர் அணிந்திருந்த உடைதான், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அறுவை சிகிச்சைகளின்போது, டாக்டர்கள் அணியும் சீருடையை அவர் அணிந்திருந்தார். எனவே அறுவை சிகிச்சையை முடித்த கையோடு, லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா காரை டெலிவரி எடுக்க டாக்டர் வந்து விட்டாரா? என நெட்டிசன்கள் வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

அத்துடன் எளிமையான முறையில் லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா காரை டெலிவரி எடுத்ததற்காக, அவருக்கு சமூக வலை தளங்களில் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. ஆனால் அறுவை சிகிச்சை சீருடையில் டாக்டரை பார்த்ததும், ஷோரூம் ஊழியர்கள் திகைத்து போயிருப்பார்கள் என நாம் நம்பலாம். டாக்டர் டெலிவரி எடுத்த லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-Showroom Price) 4.04 கோடி ரூபாய் வருகிறது.

அதே நேரத்தில் ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 5 கோடி ரூபாய் வரும். இவ்வளவு விலை உயர்ந்த லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா காரில், 5.2 லிட்டர் வி10 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 3.2 வினாடிகளில் எட்டி விடும். அதே நேரத்தில் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 325 கிலோ மீட்டர்களாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா, இந்திய செல்வந்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஒரு கார் ஆகும். பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் (Shraddha Kapoor) போன்றவர்களிடம் எல்லாம், லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 13, 2025, 14:08 [IST]
English summary
Doctor buys lamborghini huracan tecnica worth rs 5 crore viral video full details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+