அது அர்னாப் கோஸ்வாமியின் லம்போர்கினி கார் இல்லையாம்...!!

Posted By:

மும்பையில், அதிவேகத்தில் லம்போர்கினி சூப்பர் காரை ஓட்டிச் சென்ற தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பையின் பந்த்ரா- வோர்லி கடல் இணைப்பு பாலத்தில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில், சென்ற அந்த கார் குறித்து டைம்ஸ் நவ் முதன்மை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். அது அர்னாப் கோஸ்வாமியின் கார் என்று முதலில் தகவல் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த காரை போலீசார் மடக்கியது பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அர்னாப் காரல்ல...

அர்னாப் காரல்ல...

போலீசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்ட அந்த காருக்கு அருகில் அர்னாப் கோஸ்வாமி நிற்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக தளத்தில் வெளியானது. அந்த காரை அர்னாப்தான் அதிவேகத்தில் ஓட்டி வந்ததாக முதலில் செய்திகள் வெளியானது.

விளக்கம்

விளக்கம்

அதற்கு பிறகு போலீசார் அளித்த தகவலில், அந்த கார் அதிவேகத்தில் செல்வது குறித்து டைம்ஸ் நவ் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிதான் புகார் அளித்ததாக தெரிவித்தனர். மேலும், அந்த புகாரின்பேரிலேயே அந்த காரை மோட்டார்சைக்கிளில் விரட்டிச் சென்று மடக்கியதாகவும் போலீசார் கூறினர்.

 வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு

பிற வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், காரை ஓட்டி வந்ததாக அர்னாப் கோஸ்வாமி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கைது

கைது

அந்த லம்போர்கினி காரை அதிவேகத்தில் ஓட்டியதாக மும்பை ஜூகு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சம்வித் ரமேஷ் தாரா(39) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

டெஸ்ட் டிரைவ் கார்

டெஸ்ட் டிரைவ் கார்

லம்போர்கினி ஹூராகென் காரை வாங்குவதற்கு ரமேஷ் தாரா திட்டமிட்டிருக்கிறார். இதையடுத்து, மும்பை, பிரபாதேவி பகுதியிலுள்ள லம்போர்கினி ஷோரூமை அணுகியுள்ளார். அந்த ஷோரூமிலிருந்துதான் லம்போர்கினி ஹூராகென் காரை டெஸ்ட் டிரைவ் செய்வதற்காக எடுத்துச் சென்று தாறுமாறாக ஓட்டி போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

சக்திவாய்ந்த கார்

சக்திவாய்ந்த கார்

லம்போர்கினி ஹூராகென் காரில் 610 பிஎஸ் பவரையும், 560 என்எம் டார்க்கையும் வழங்கும் 5.2 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 7 ஸ்பீட் டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது.

செயல்திறன்

செயல்திறன்

இந்த அதிசக்திவாய்ந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 3.2 வினாடிகளில் எட்டும் வல்லமையுடையது. மணிக்கு 325 கிமீ டாப்ஸ்பீடு கொண்ட இந்த ஹூராகென் வெறும் 10 வினாடிகளில் 0- 350 கிமீ வேகத்தை எட்டவல்லது.

விலை விபரம்

விலை விபரம்

ரூ.3.43 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய லம்போர்கினி ஹூராகென் சூப்பர் கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

இதுதான் அர்னாப் கார்...

இதுதான் அர்னாப் கார்...

அர்னாப் கோஸ்வாமியிடம் டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் கார் இருக்கிறதாம்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Does Arnab Goswami Own A Lamborghini Huracan.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark