டிராக்டர் மாதிரி வயக்காட்டை உழுத ரோல்ஸ்ராய்ஸ் கார்? வைரலாகும் வீடியோவின் உண்மை என்ன?

விவசாயி ஒருவர் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி அதை வைத்து தன்து வயலை உழவு செய்ததாக வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ எந்த அளவிற்கு உண்மை இந்த வீடியோவில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் எது? எந்த பகுதியில் இந்த சம்பவம் நடந்தது? முழுமையான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது பிரிமியம் ரக கார்களுக்கு உலகம் முழுவதும் பெயர் பெற்றது. இந்நிறுவனம் தனது தயாரிப்புகளை தரமாக தயரிப்பதாலும், தனித்துவமாக தயாரிப்பதாலும் மக்கள் பலர் இந்த நிறுவனத்தின் கார்களை விரும்பி வாங்கி வருகின்றனர். இவ்வளவு இருந்தால் தானாக காரின் விலை அதிகரித்துவிடும் இல்லையா? இதன் படி உலகில் சில காஸ்ட்லியான கார்களை எல்லாம் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

Rolls Royce Viral Video

இந்நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கல்லீனன் காரை வைத்து இந்தியாவில் விவசாயி ஒருவர் அதை டிராக்டராக மாற்றி பின்பக்கம்உழவு பார்க்கும் இயந்திரத்தை பொருத்தி தனது வயலை உழவு செய்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்ப்பதற்கே ஆச்சரியளமாக இருக்கிறது. ஆனால் நன்றாக பார்த்தால் இது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்பது தெளிவாக தெரியும்.

ஆஃப்ரோடு அம்சங்கள்

ரோல்ஸ் ராய்ல் கல்லீனன் காரில் ஆஃப்ரோடு அம்சங்கள் இருக்கிறது ஆனால் இப்படி உழவு செய்யும் டிராக்கடர் இயந்திரத்தை பொருத்தி உழவு பார்க்கும் அளவிற்கு ஆஃப்ரோடு அம்சங்கள் கிடையாது.இந்த கார் சாலையில் இயக்குவதற்கே சிறப்பாக இருகு்கும். மற்றபடி சாலையில் உள்ள பள்ள மேடுகளை கடக்கவே இதில் உள்ள ஆஃப்ரோடு அம்சம் பயன்படும்.

ரோல்ஸ்ராய்ஸ் கல்லீனன் காரில் பொருத்தப்பட்ட சஸ்பென்சன் சிஸ்டமே இதில் உள்ள கிரவுண்ட் கிளியரன்ஸோ இந்த காரை ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஏற்றதாக மாற்ற முடியாததாக இருக்கும். இதனால் இந்த வாகனத்தை இப்படியெல்லாம் பயன்படுத்த முடியாது. சமூகவலைத்தளங்களில் பரவி வருவது செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தில் உருவாக்கிய வீடியோ!

ரோல்ஸ்ராய்ஸ் கல்லீனன் காரை பொருத்தவரை 6.7 லி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டள்ளது. இது 563 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டள்ளது. இந்த கார் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தில் இயங்கும் திறன் கொண்ட காராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் அதிகபட்சமாக 250 கி.மீ வேகத்தில் இயங்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

Rolls Royce Viral Video

இந்த காரின் சிறப்பம்சமே இதன் வடிவமைப்பு தான் இந்த காரில் உள்ள பெரும்பான்மையான பாகங்கள் முழுமையாக கையால் தயாரிக்கப்பட்ட தனித்துவமான வடிவமைப்பாக இருக்கிறது. இந்த காரின் தொழிற்நுட்பமும் பல அட்வான்ஸ்டு தொழிற்நுட்பங்களை கொண்டதாக இருக்கிறது. இதன் காரணமாகவே பல பணக்காரர்கள் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர். இதன் ஒவ்வொரு பாகத்தையும் ரசிக்க முடியும். சாலையில் சென்றால் இந்த காரை எல்லோரும் திரும்பி பார்ப்பார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒட்டு மொத்தமாக பார்த்தால் இந்த வீடியோ மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரிக்கப்பட்ட வீடியோவாக இருக்கிறது. இந்த கார் நிச்சயம் இது போன்ற விவசாய பயன்பாட்டிற்கு ஏற்ற கார் கிடையாது. இது போன்ற வீடியோவை பகிரும் முன்பு பொறுப்புடன் இருக்க வேண்டும். தேவையில்லாத வதந்திகளை இதன் மூலம் பரப்ப கூடாது.

More from DriveSpark

Article Published On: Friday, June 6, 2025, 9:00 [IST]
English summary
Does rolls royce plowed field viral video fact check
மேலும்... #india #rolls royce
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+