காருக்கு உள்ளே ஒயின் பாட்டிலை வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

காருக்கு உள்ளே ஒயின் பாட்டிலை வைத்தால் என்ன நடக்கும்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காருக்கு உள்ளே ஒயின் பாட்டிலை வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இந்தியாவில் பலருக்கும் ஒயின் குடிக்கும் பழக்கம் இருக்கிறது. ஒரு சிலர் காருக்கு உள்ளேயே கூட ஒயின் பாட்டில்களை வைத்திருக்கிறார்கள். வீட்டிற்கு தெரிந்து விடக்கூடாது என்பது உள்பட இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால் காருக்குள் எக்காரணத்தை கொண்டும் ஒயின் பாட்டில்களை வைக்க கூடாது என்பதை அவர்கள் உணர்வதில்லை.

காருக்கு உள்ளே ஒயின் பாட்டிலை வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

காருக்குள் ஒயின் பாட்டில்களை வைத்தால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். அவை என்னென்ன? என்பதைதான் இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். பொதுவாக காருக்கு வெளியே இருக்கும் வெப்பநிலையை விட காருக்கு உள்ளே வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

காருக்கு உள்ளே ஒயின் பாட்டிலை வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

குறிப்பாக இந்தியா போன்ற வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும் நாடுகளில், சிறிது நேரம் காரை வெயிலில் நிறுத்தியிருந்தாலே காரின் கேபின் அனலாய் கொதிக்க தொடங்கி விடும். இந்த அதிகப்படியான வெப்பம்தான் காருக்கு உள்ளே வைக்கப்பட்டிருக்கும் ஒயின் பாட்டிலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

காருக்கு உள்ளே ஒயின் பாட்டிலை வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

மிகவும் சூடாக இருக்கும் காரின் கேபினுக்கு உள்ளே ஒயினை வைத்து சென்றால், ரசாயன மாற்றங்கள் ஏற்படும். இதன் காரணமாக ஒயினின் உண்மையான சுவை மாறுபடும். அத்துடன் ஒயின் பெரும்பாலும் கண்ணாடி பாட்டில்களில்தான் விற்பனை செய்யப்படுகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். அதிக வெப்பம் காரணமாக கண்ணாடி பாட்டிலுக்கு உள்ளே இருக்கும் ஒயின் விரிவடையும்.

காருக்கு உள்ளே ஒயின் பாட்டிலை வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஒயின் மட்டுமல்லாது, பாட்டிலின் மூடியும் விரிவடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக மூடி 'லூஸ்' ஆகி விடும். மூடி 'லூஸ்' ஆகி விட்டால், ஒயின் கசிய ஆரம்பித்து விடும் என்பதை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. எனவே காருக்குள் ஒயின் வாடை அடிக்காமல் இருக்க வேண்டும் என்றாலும், நீங்கள் காருக்கு உள்ளே ஒயின் பாட்டிலை வைக்க கூடாது.

காருக்கு உள்ளே ஒயின் பாட்டிலை வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

மேலும் மூடி 'லூஸ்' ஆகி விட்டால், பாட்டிலுக்கு உள்ளே காற்று புகுந்து விடும். ஒயின் அதன் உண்மையான சுவையை இழப்பதற்கு இதுவும் ஒரு காரணம். நீங்கள் ஒயினை வாங்கும்போது என்ன சுவையில் இருக்கும் என நினைத்தீர்களோ அந்த சுவை கிடைக்காது. அத்துடன் அதிகப்படியான வெப்பம் காரணமாக கண்ணாடி பாட்டில் வெடிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

காருக்கு உள்ளே ஒயின் பாட்டிலை வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இதுபோன்ற பிரச்னைகளையும் தவிர்க்க வேண்டும், ஒயினும் குடிக்க வேண்டும் என்றால், நீங்கள் ஒரு சில விஷயங்களை பின்பற்ற வேண்டும். ஒரு சிலர் ஒயினை முன்கூட்டியே வாங்கி காருக்கு உள்ளே வைத்து விட்டு மற்ற வேலைகளை பார்த்து கொண்டிருப்பார்கள். வீட்டிற்கு கொண்டு சென்று ஒயினை குடிப்பது அவர்களது நோக்கமாக இருக்கும்.

காருக்கு உள்ளே ஒயின் பாட்டிலை வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இதில், நீங்களும் ஒருவர் என்றால் இனி உங்கள் திட்டத்தில் மாற்றங்களை செய்யுங்கள். அதாவது அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு, வீட்டிற்கு செல்வதற்கு முன் இறுதியாக ஒயினை வாங்குங்கள். இதன் மூலம் ஒயின் நீண்ட நேரம் காருக்கு உள்ளே இருப்பது தவிர்க்கப்படும். அதேபோல் ஒயின் இருந்தால், காரை நிழலில் நிறுத்துவதும் ஓரளவிற்கு பலன் அளிக்கும்.

காருக்கு உள்ளே ஒயின் பாட்டிலை வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆனால் காரை நிழலில் நிறுத்துவதன் மூலம் ஒயினில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதியாக கூறி விட முடியாது. எனினும் இதன் மூலம் கார் சற்று குளிர்ச்சியாக இருக்கும். காரை நிழலில் நிறுத்தினால், நேரடியாக சூரிய ஒளி படுவதை தவிர்க்க முடியும். இதன் மூலம் அதிக வெப்பம் காரணமாக ஒயினில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.

காருக்கு உள்ளே ஒயின் பாட்டிலை வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதேபோல் காரின் ட்ரங்க் பகுதியில் ஒயினை வைப்பதையும் தவிர்க்கலாம். காரின் மிகவும் வெப்பமான பகுதிகளில் ட்ரங்க்கும் ஒன்று. எனவே காரின் முக்கியமான பகுதியில் இருப்பதை காட்டிலும், ட்ரங்க் பகுதியில் இருந்தால் ஒயின் மிக வேகமாக பாதிக்கப்பட்டு விடும். எனவே ஷாப்பிங் முடிந்ததும், முன் அல்லது பின் இருக்கையில் ஒயினுக்கு இடம் ஒதுக்கலாம்.

காருக்கு உள்ளே ஒயின் பாட்டிலை வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இது ஒயினை பாதுகாப்பாக உங்கள் வீட்டிற்கு கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் மட்டுமே. எக்காரணத்தை கொண்டும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி விடாதீர்கள். அது உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். உங்களுக்கு மட்டுமல்லாது, சாலையில் பயணிக்கும் மற்றவர்களும் இதனால் பாதிக்கப்படலாம்.

காருக்கு உள்ளே ஒயின் பாட்டிலை வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

எனவே முடிந்த வரை மது அருந்தாதீர்கள். அப்படியே அருந்தினாலும், வீட்டில் பாதுகாப்பாக அருந்துங்கள். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் நடைபெறும் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதுதான் முக்கியமான காரணமாக இருக்கிறது என்பதை எப்போதும் உங்கள் மனதில் கொள்ளுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Does wine go bad in a hot car check all details here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X