கார் மெக்கானிக்கிற்கு டூல்ஸ் பையுடன் உதவி செய்யும் நாய்!

Written By:

மனிதர்களுக்கு எப்போதுமே உதவிகரமான விலங்காககவும், செல்லப் பிராணிகளாகவும் இருப்பதில் நாய்களும் முக்கிய இடம் வகிக்கின்றன. சில சமயம் உதவியாளர்களைவிட விசுவாசமுள்ள பிராணியாக நாய்கள் விளங்குவதை பல இடங்களில் காண முடியும்.

இதனை மெய்ப்பிக்கும் விதத்தில் ரஷ்யாவிலும் ஒரு நாய் தனது எஜமானருக்கு பணிவிடை செய்து வருகிறது. இன்டர்நெட்டில் வைரலாகி இருக்கும் இந்த நாய் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இன்டர்நெட்டை கலக்கும் நாய்

இன்டர்நெட்டை கலக்கும் நாய்

கார் மெக்கானிக் ஷாப்பில் டூல்ஸ்கள் கொண்ட சட்டை அணிவிக்கப்பட்ட நாய் தனது மெக்கானிக் உரிமையாளருக்கு பணிவிடை செய்த வீடியோ ஒன்றில் இன்டர்நெட்டில் போட்டுவிட்டனர். அது வைரலாக அங்கு பரவியதுடன், அது எந்த இடம் என்பதை கேட்டும் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

 விசேஷ உடை

விசேஷ உடை

டூல்ஸ் வைப்பதற்கு ஏதுவாக அந்த நாயின் உரிமையாளர் ஓர் விசேஷ ஆடையை தயாரித்து அந்த நாய்க்கு அணிவித்துள்ளார். அதிலிருந்து, டூல்ஸ்களை எளிதாக எடுத்து வைக்க முடியும்.

டூல்ஸ்களுடன் தயார் நிலையில்...

டூல்ஸ்களுடன் தயார் நிலையில்...

உரிமையாளரின் சமிக்ஞைகளை புரிந்து கொண்டு அந்த நாய் அவருக்கு அருகில் வந்து டூல்ஸ்களுடன் வந்து நிற்கிறது. அவரது பணி முடியும் வரை அசராமல் அங்கு நின்று அவருக்கு உதவி செய்கிறது.

 ஏமாற்றம்

ஏமாற்றம்

உதவியாளர்களின் செயல்களால் ஏமாற்றம் அடைந்த அந்த நாயின் உரிமையாளர், தனது உதவிக்காக தனது செல்லப்பிராணியை இவ்வாறு பயன்படுத்துவதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 எதிர்ப்பு

எதிர்ப்பு

இந்த செயல் விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடும் கண்டனத்தையும் பதிவு செய்து வருவதோடு, அந்த இடத்தை கண்டறியும் முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.

 மெல்லினமான பிராணி

மெல்லினமான பிராணி

செல்லப்பிராணியாக வளர்க்க மட்டுமே தகுதியுடைய இந்த ரக நாய்களின் முதுகுத்தண்டு மிகவும் மெல்லினமானது என்றும், எனவே, அதனை மீட்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோ

யூ-ட்யூப் வீடியோவை காணலாம்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Photos of a Dachshund helping a mechanic at a car repair shop in Russia have been making rounds lately on the internet. The dog is wearing a custom-made suite with tools for easy access by his mechanic friend.
Story first published: Thursday, December 17, 2015, 15:52 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark