Just In
- 8 hrs ago
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
- 12 hrs ago
விபத்தில் சிக்கிய ஆளில்லா இயங்கும் டெஸ்லா கார்!! இருவர் காருக்கு உள்ளேயே கருகி பலி!
- 13 hrs ago
100 கிமீ ரேஞ்ச்.. அசத்தலான புதிய நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்!
- 13 hrs ago
மாஸ்க் அணியவில்லை என்றால், என்ன இப்படி தூக்குறாங்க!! போலீஸாரிடம் சிக்கிய தம்பதியினர்...
Don't Miss!
- News
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் புதிய உச்சம்: ஒரே நாளில் 1,757 பேர் மரணம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரப்போகுது…
- Sports
தல... சின்ன தல... ஒவ்வொருத்தரா பெவிலியனுக்கு அனுப்பிய ராஜஸ்தான் பௌலர்... மிகச்சிறப்பு!
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Movies
காரக் குழம்பு சாப்பிட கனி வீட்டிற்கு சென்ற சிம்பு...வைரலாகும் ஃபோட்டோ
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வேகமாக வந்த கார்... நடு ரோட்டில் நின்று நிறுத்திய நாய்... நாய்களை கடவுள்னு ஏன் சொல்றாங்கனு இப்போதான் புரியுது!
நாய்களை காக்கும் கடவுள் என பலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம், இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் சம்பவம் கனடா அரங்கேறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

கனடா நாட்டின் தலைநகரான ஓட்டாவாவைச் (Ottawa) சேர்ந்தவர் ஹேலி மூர் (Haley Moore). இவர் தனது குடும்பத்தில் ஒருவராக பாவித்து க்ளோவர் (Clover) எனும் நாயை வளர்த்து வருகின்றது. சுமார் ஒன்றரை வயது மட்டுமே கொண்ட இந்த நாயே தற்போது ஹேலி மூர் குடும்பத்தினருக்கு கடவுளாக மாறியிருக்கின்றது.

மிக சமீபத்தில் பனிகள் நிறைந்த சாலையில் ஹேலி மூர் மற்றும் க்ளோவர் இருவரும் சாலையில் வால்க்கிங் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஹேலி மூருக்கு வலிப்பு ஏற்படத் தொடங்கியிருக்கின்றது. இதனால் அவர் கீழே சுருண்டு விழுந்திருக்கின்றார்.

தன்னுடைய எஜமானருக்கு உதவி தேவை என்பதை உணர்ந்த க்ளோவர். அங்கு - இங்குமாக ஓட தொடங்கியது. ஆனால், அதன் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு அதற்கு ஓர் தடையாக அமைந்தது. இருப்பினும், விடாப்படியாக செயல்பட்ட க்ளோவர் சிறிது நேரத்தில் கயிற்றை தானாகவே கழட்டிவிட்டு, சுதந்திரமானது.

இதனைத் தொடர்ந்து, அவ்வழியாக வந்த ஓர் பிக்-டிரக்கை அது தடுத்து நிறுத்தி, தனது எஜமானருக்காக உதவி கோரியது. உரிமையாளரின் உயிரை காக்க நாய் காரை மறித்த இந்நிகழ்வு கனடா நாட்டு மக்கள் மத்தியில் பெறுத்த ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

குறிப்பாக, க்ளோவரின் உடனடி நடவடிக்கையால் தற்போது ஹலே நலமுடன் இருக்கின்றார். ஹலேவை க்ளோவர் காப்பாற்றுவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது ஓடி வந்து பிக்-அப் டிரக்கை மறிக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன.

இதுகுறித்து பிக்-அப் டிரக் டிரைவர் சிடிவி நியூஸ் தளத்திற்கு கூறியதாவது, "நாய் ஓடி வருவதை கண்டு முதலில் நான் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டேன். அது என்னுடைய வாகனத்தை மறித்து வித்தியாசமான செய்கையை செய்து காட்டியது. இதன் பின்னரே சாலையோரத்தில் பெண் ஒருவர் விழுந்திருப்பதைக் காண்டு அதிர்ந்துபோனேன்" என்றார்.

இதையடுத்து பிக்-அப் டிரைக் டிரைவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆம்புலன்ஸ் வாயிலாக ஹலே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நலமுடன் இருக்கின்றார். குறிப்பாக, முன்பைக் காட்டிலும் க்ளோவர் மற்றும் ஹலே இருவரும் அதிக பாச உணர்வுடன் நடமாடத் தொடங்கியிருக்கின்றனர்.
சம்பவத்தின்போது ஆம்புலன்ஸ் வந்தபோதும் ஹேலியை விட்டு க்ளோவர் பிரியவே இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஆம்புலனஸில் புறப்படத் தொடங்கியது முதல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றது வரை க்ளோவர் அவருடனேயே இருந்திருக்கின்றது.

ஹேலி மயக்கத்தில் இருந்து தெளிந்தபோது அவருடனேயே க்ளோவர் இருந்திருக்கின்றது. என்ன நேர்ந்தது என்பதை உணர முடியாமல் இருந்த வேலையில் அவருக்கு அருகில் ஆறுதலாக க்ளோவரே அந்த சமயத்தில் இருந்திருக்கின்றது. இந்த சம்பவத்தில் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படாத காரணத்தினால் ஹேலி உடனடியாக வீட்டிக்கு திரும்பியிருக்கின்றார்.

இந்த சம்பவத்தில் க்ளோவர் தற்போது ஹேலி குடும்பத்தினருக்கு கடவுளாக மாறியதோடு இல்லாமல் அப்பகுதி வாசிகள் பலர் நாயை ஹீரோவாகவே பார்க்கத் தொடங்கியிருக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தை அடுத்து, க்ளோவர் இருக்கும்போது நான் கூடுதல் பாதுகாப்பாக உணர்வதாக ஹேலி கூறியிருக்கின்றார்.
Source: CTVNews/YouTube