பிளாட்பாரத்தில் டீ கடை நடத்தியவர் ரூ2 கோடி காரில் வந்திறங்கிய அதிசயம்!

ஒரு காலத்தில் ரோட்டோரமாக டீக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்த ஒருவர் இன்று உலக பிரபலமாகி ரூபாய் 2 கோடி மதிப்பிலான காரில் அவர் வந்திறங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த காரை அவர் மாடிஃபிகேஷன் செய்து வேறு பயன்படுத்தி வருகிறார். இப்படியாக அவர் வந்து இறங்கிய கார் என்ன? இவ்வளவு பிரபலமான அவர் யார் என்ற விரிவான விபரங்களை தான் காணப் போகிறோம்.

சமூகவலைத்தளங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கியது முதல் சாதாரணமாக இல்லாத வித்தியாசமான குணாதிசயங்கள் கொண்ட மனிதர்கள் பிரபலமாக மாறி வருகிறார்கள். இப்படியாக சாலையோரத்தில் டீக்கடை நடத்தி வந்த சுனில் என்பவர் தனது வித்தியாசமான உடல் மொழியால் மக்களை அதிகம் ஈர்த்தார். இவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பிரபலமாகி இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இவர் பிரபலமானார்.

dolly chai wala benz gt

இதற்கு முக்கியமான காரணம் இவர் டீ போடும் செயல்தான் இவர் டீ போடும் ஸ்டைலில் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டைல் உட்பட பல்வேறு விதமான செயல்களை உட்பகுத்தி இவர் தனித்துவமாக வித்தியாசமாக உடல்மொழியுடன் டீ போடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இது பலரது கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இவர் சமூக வலைதளங்களில் சூப்பர் ஸ்டார் என்ற பெயர் வரும் அளவுக்கு அந்த அளவில் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

சமீபத்தில் இந்தியா வந்திருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் கூட இவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டது பிரபலமாக பேசப்பட்டது. இந்த புகைப்படமும் வைரலாக பரவியது. இந்நிலையில் சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்தியா முழுவதும் டோலி சாய்வாலா என அழைக்கப்படும் இவர் 2 கோடி ரூபாய் மதிப்பிலான காரில் வந்து இறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

dolly chai wala benz gt

இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோவில் அவர் பென்ஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி ஜிடி காரில் வந்து இறங்கினார். இந்த காரை அவர் மாடிஃபிகேஷன் செய்து வெளிப்புறத்தில் புதிதாக ஸ்டிக்கரிங் செய்து பயன்படுத்தி வருகிறார். இந்த காருக்கு வெளிப்பகுதியில் புலி படம் கொண்ட ஒரு ஸ்டிக்கரிங் செய்துள்ளார். இது பார்ப்பதற்கே அட்டகாசமாக லுக்கில் இருக்கிறது. சாலையில் சென்றால் பலர் திரும்பி பார்க்கும் வகையில் இருக்கிறது.

தற்போது இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு இல்லை ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட காரை வாங்கி இவர் மாடிஃபிகேஷன் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது ஏற்கனவே இந்த கார் பயன்பாட்டில் இருக்கும் போது ரூபாய் 2.27 கோடி முதல் 2.71 கோடி என்ற விலையில் இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகி வந்தது. இந்த கார் தற்போது செகண்ட் ஹாண்ட் மார்க்கெட்டில் மட்டுமே விற்பனையாகி வருகிறது.

dolly chai wala benz gt

இந்த காரில் 3982 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 476 முதல் 576.63 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஒரு லிட்டருக்கு 12.65 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக இருப்பது போல பல்வேறு அம்சங்கள் இருக்கிறது. முக்கியமாக இந்த காரில் பவர் ஸ்டியரிங் ஏபிஎஸ் டிரைவருக்கான ஏர்பேக் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் அலாய் வீல்கள் எல்லாம் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின் டர்போ சார்ஜர் இன்ஜினாக பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த கார் சிறப்பாக பெர்பார்மென்ஸ் செய்யும் காராக பரவலாக பேசப்படுகிறது.

இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை அடாஸ் தொழிற்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது இதில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக ப்ளூடூத் கனெக்டிவிட்டி டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் நான்கு ஸ்பீக்கர் கொண்ட ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரின் உட்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாதாரணமாக டீக்கடை நடத்தி வந்த ஒருவர் தற்போது ரூபாய் இரண்டு கோடி மதிப்பிலான காரில் வந்து இறங்கிய சம்பவம் பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. சமூக வலைதளங்களின் வளர்ச்சி ஒரு மனிதனை எந்த அளவுக்கு கொண்டு செல்லும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக இருக்கிறது. உங்கள் தனித்தன்மையுடன் நீங்கள் இருந்தால் நீங்களும் இப்படியாக ஒருநாள் பிரபலமாகலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 5, 2024, 18:39 [IST]
English summary
Dolly chai wala using mercedes benz amg gt know full details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X