டீ மாஸ்டர்ன்னு சாதாரணமா நினைச்சுடாதீங்க! ரூ1.5 கோடி விலையுள்ள காரில் வந்து தான் டீ போடுவாறு

டீக்கடையில் டீ போடும் டீ மாஸ்டர் ஒருவர் ரூபாய்1.5 கோடி மதிப்பிலான காரில் வந்திறங்கி டீ போடுகிறார் என சொன்னால் நம்ப முடிகிறதா? இது ஏதோ வெளிநாட்டில் எல்லாம் இல்லை, இந்தியாவில் தான் இப்படி ஒருவர் இருக்கிறார். இவர் உலக அளவில் பிரபலமாகவும் இருக்கிறார். வட இந்தியாவைச் சேர்ந்த டோளி சாய்வாலா காரில் வந்திறங்கிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இன்றைய சமூக வலைதள உலகம் என்பது பல்வேறு விதமான பிரச்சினைகளை ஒரு பக்கம் சந்தித்து வந்தாலும், மற்றொரு பக்கம் பலரது வாழ்க்கையை மாற்றியுள்ளது என கூறலாம். எந்த அளவிற்கு இது மக்களின் வாழ்க்கையை மாற்றுகிறது என்றால் அதற்கு உதாரணம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்த டோலி சாய்வாலா என்பவர் தான்.

dolly chaiwala with porsche cayman

இவர் ரோட்டோரமாக இருக்கும் டீக்கடையில் டீ போடும் பணியை செய்து வந்துள்ளார். இவர் டீ போடும் ஸ்டைல் அங்குள்ள மக்களை கவரும் விதமாக இருந்தது. இவர் டீ போடும் செயலை பார்க்கவே பலர் அவர் கடைக்கு டீ குடிக்க வந்துள்ளார்கள். இப்படியாக வந்த வாடிக்கையாளர் ஒருவர் இவர் டீ போடும் ஸ்டைலை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனால் சமூக வலைதளங்களில் டோளி டீ வாலா மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இவரது பிரபலத்தை பயன்படுத்தி பலர் இவருக்கு பல்வேறு விதமான ஆஃபர்களை வழங்கினார்கள். இதையெல்லாம் பயன்படுத்தி குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவு வளர்ச்சியை இவர் பெற்றுள்ளார். சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில்கேட்ஸ் இவர் டீ போடும் ஸ்டைலை பார்த்து வியந்து இவரை நேரில் சந்தித்த சம்பவமும் நடந்துள்ளது.

dolly chaiwala with porsche cayman

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் டீ வாலா சமீபத்தில் ரோட்டோரமாக இருக்கும் ஒரு டீக்கடையில் காரில் வந்து இறங்கி டீ போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.

இவ்வளவு அதிக லைக் வருவதற்கு முக்கியமான காரணம் அவர் வந்திறங்கிய கார் தான். சாதாரண காரில் எல்லாம் மந்திரங்கள் என்ற காரில் தான் வந்திருக்கிறார். இந்த கார் இந்தியாவில் விற்பனையாகும் காஸ்ட்லியான கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த காரை இந்தியாவில் இறக்குமதி செய்த செய்துதான் அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

dolly chaiwala with porsche cayman

ரூ 75.68 லட்சம் முதல் ரூபாய் 2.74 கோடி வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது. மொத்தம் 10 விதமான வேரியன்ட்களில் இந்த கார் விற்பனையில் உள்ளது. இந்த காரை பலர் விரும்பி வாங்கி வருகிறார்கள், இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷனில் இருக்கிறது. முக்கியமாக இது ஒரு 2 சீட்டர் கார் இரண்டு பேர் மட்டுமே இந்த காரில் பயணம் செய்ய முடியும்.

இதனால் பெரும் பிரபலங்கள் உள்ளிட்ட வெகு சிலர் தான் இந்த காரை வாங்கி வைத்திருக்கிறார்கள். அதில் டோளியும் இந்த காரை வாங்கி வைத்துள்ளார். இது ஒரு கூபே வடிவ கார் என்பதால் இதன் வடிவமைப்பு பலரை கவரும் விதமாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த கார் வேகமாகவும் பயணிக்கும் காராக இருக்கிறது. இந்த காரின் முக்கியமான விஷயமே இதன் ஸ்டைலான வடிவமைப்பு தான்.

இதில் டோளி சாய்வாலா வந்து இறங்கிய காரின் விலை ரூபாய் 1.5 கோடி என கூறப்படுகிறது. இந்த காரில் வந்து இறங்கி அவர் டீ போட சென்ற வீடியோ பலரைக் கவர்ந்துள்ளது. பலர் இவரது வளர்ச்சிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். சமூக வலைதளங்களும் ஒருவர் வாழ்க்கையை எப்படி எல்லாம் மாற்ற முடியும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டோளி சாய்வாலா இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு நபராக இருக்கிறார். இவர் ரூபாய் 1.5 கோடி ரூபாய் காரில் வந்து இறங்கி டீ போட்ட வீடியோ பலரை கவர்ந்து உள்ளது. இவரிடம் இதே போல ஏகப்பட்ட கார்கள் இருக்கின்றன. வெகு குறுகிய காலத்தில் இவர் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, May 10, 2024, 15:12 [IST]
English summary
Dolly chaiwala porsche cayman tea shop visit viral
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X