டொமினோ பீட்சா விற்கப்போகும் செவர்லே பீட்!
அமெரிக்காவில் நடமாடும் பீட்சா விற்பனை நிலையத்திற்காக 5,000 செவர்லே ஸ்பார்க்(இந்தியாவில் பீட் கார்) கார்களை வாங்குகிறது டொமினோ பீட்சா நிறுவனம். நடமாடும் பீட்சா விற்பனையகத்துக்கு பொருந்தும் வகையிலான கார் டிசைனை செய்து தருவதற்காக போட்டி ஒன்றையும் டொமினோ நடத்தியது.
இந்த போட்டியில் சிறந்த டிசைன் மற்றும் 20,000 டாலருக்கு மிகாத விலையில் காரை வடிவமைத்து தரும்படி டொமினோ பீட்சா நிறுவனம் போட்டியாளர்களுக்கு நிபந்தனைகளை விதித்தது. இதனடிப்படையில், ஏராளமானோர் டொமினோ பீட்சா நிறுவனத்துக்கு காரை வடிவமைக்கும் போட்டியில் பங்கேற்றனர். 5 ஸ்டேஜ் டொமினோ அல்டிமேட் டெலிவிரி வெகிக்கிள் சேலஞ்ச் என்ற பெயரில் இந்த போட்டி கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் துவங்கியது.

ரோமானியர் வெற்றி
டொமினோ நடத்திய டிசைன் போட்டியில் ரோமானிய டிசைனர் மரியன் சிலிபியனு வடிவமைத்த பீட் கார் டிசைன்தான் இறுதியில் தேர்வு செய்யப்பட்டது.

5,000 கார்கள்
அமெரிக்காவில் உள்ள 5,000 பீட் கார்களை பீட்சா விற்பனையகமாக பயன்படுத்தும் வகையில் டொமினோ வாங்குகிறது. ஒரு விற்பனையகத்துக்கு ஒன்று வீதம் அமெரிக்கா முழுவதும் செயல்படும் 5,000 கார்கள் வழங்கப்பட உள்ளன.

டிசைனுக்கு வெற்றி
டி பாக்ஸ்2 என்ற பெயரில் மரியன் வடிவமைத்த இந்த பீட் கார் வெளிப்புற தோற்றம், உட்புற தோற்றம், இரவு தோற்றம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் முதலிடம் பெற்றது.

போனியாகும் டிசைன்
மரியனின் கைவண்ணத்தில் டொமினோ நிறுவனத்தின் பிராண்டின் வண்ணக் கலவையில் வாடிக்கையாளர்களை எளிதாக கவரும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது டி பாக்ஸ்2.

வசதிகள்
ஆர்டர்களை டெலிவிரி செய்வதற்கான ஓவன், சாதாரண விற்பனைக்கான ஓவன் மற்றும் கோகோ கோலாவுக்கான பிரத்யேக கூலர் என அனைத்துக்கும் தனித்தனியாக இடம் கொடுக்கப்பட்டுள்ளன.

பீட்சா விற்கப்போகும் பீட்!

பீட்சா விற்கப்போகும் பீட்!

பீட்சா விற்கப்போகும் பீட்!

பீட்சா விற்கப்போகும் பீட்!

பீட்சா விற்கப்போகும் பீட்!

பீட்சா விற்கப்போகும் பீட்!

பீட்சா விற்கப்போகும் பீட்!

பீட்சா விற்கப்போகும் பீட்!

பீட்சா விற்கப்போகும் பீட்!

பீட்சா விற்கப்போகும் பீட்!

பீட்சா விற்கப்போகும் பீட்!



Click it and Unblock the Notifications








