ஏலத்தில் குறைந்தபட்ச விலை கூட கிடைக்காமல் சொதப்பிய டிரம்பின் கார்!

Written By:

அமெரிக்காவின் புதிய அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப் பயன்படுத்திய விலையுயர்ந்த ஃபெராரி கார் ஒன்று சமீபத்தில் ஏலத்திற்கு வந்தது. அதிக விலைக்கு போகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இக்காருக்கு குறைந்தபட்ச விலை கூட கிடைக்காமல் போனது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

டொனால்ட் டிரம்புக்கு அதிர்ச்சி அளித்த கார் ஏலம்!

ஃபெராரி எஃப் 430 எனும் விலை உயர்ந்த சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரை 2007ஆம் ஆண்டு ட்ரம்ப் வாங்கியுள்ளார். நியூயார்க் நகரில் உள்ள ட்ரம்ப் நிறுவனங்களின் தலைமையிடமான ட்ரம்ப் டவர் பெயரில் இக்கார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்புக்கு அதிர்ச்சி அளித்த கார் ஏலம்!

வெறும் 3,862 கிமீ மட்டுமே ஓடியுள்ள இந்த பெராரி கார் ஏலத்தில் அதிகபட்சமாக 3,50,000 அமெரிக்க டாலர்களுக்கு விலை போகும் என்று மதிப்பிடப்பட்டது. (இந்திய மதிப்பில் சுமார் 2.32 கோடி ரூபாய்)

டொனால்ட் டிரம்புக்கு அதிர்ச்சி அளித்த கார் ஏலம்!

ஏலத்தில் இக்காருக்கு குறைந்தபட்ச தொகையாக 2,50,000 அமெரிக்க டாலர்கள் விலை நிர்னயிக்கப்பட்டிருந்தது. இது இந்திய மதிப்பில் சுமார் 1.62 கோடி ரூபாயாகும்.

டொனால்ட் டிரம்புக்கு அதிர்ச்சி அளித்த கார் ஏலம்!

ஏலம் தொடங்கியவுடன் குறைந்தபட்சமாக நிர்னயிக்கப்பட்ட தொகையைக்காட்டிலும் 10,000 டாலர்கள் குறைவாக கேட்கப்பட்டது. இது ஏல நிறுவனத்தாருக்கு கடும் ஏமாற்றத்தை அளித்தது.

டொனால்ட் டிரம்புக்கு அதிர்ச்சி அளித்த கார் ஏலம்!

குறைந்தபட்ச தொகையை காட்டிலும் குறைவாக கேட்கப்பட்டதால், அமெரிக்க அதிபர் பயன்படுத்திய ஃபெராரி கார் ஏலப் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக ஏல நிறுவனம் அறிவித்தது.

டொனால்ட் டிரம்புக்கு அதிர்ச்சி அளித்த கார் ஏலம்!

பின்னர், சிறிது நேரத்தில் வேறு ஒருவருக்கு இந்த ஃபெராரி கார் ரகசியமாகவிற்கப்பட்டதாக ஏல நிறுவனம் அறிவித்தது. காரை வாங்கிய நபர் குறித்த தகவல்களை ஏல நிறுவனம் அறிவிக்கவில்லை, என்றாலும் இந்த கார் 2,70,000 டாலர்கள் விலைக்கு விற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்புக்கு அதிர்ச்சி அளித்த கார் ஏலம்!

ஏப்ரல் 1ஆம் தேதி இந்த ஏலம் நடைபெற்றுள்ளது. சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வந்துள்ள இக்காரின் சர்வீஸ் ரெகார்ட் புத்தகம், இதர ஒரிஜினல் சான்றிதழ்கள், கார் மேனுவல், டூல் கிட், கார் கவர் மற்றும் அதன் பேக் உள்ளிட்ட பொருட்களும் இணைந்தே ஏலத்தில் விடப்பட்டது.

டொனால்ட் டிரம்புக்கு அதிர்ச்சி அளித்த கார் ஏலம்!

அதிபராக பொறுபேற்கும் முன்பு சிறந்த தொழிலதிபராக விளங்கிய டிரம்ப், 2007ல் இக்காரை வாங்கி, 4 ஆண்டுகள் பயன்படுத்திய பின்னர் வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். அதனை வாங்கிய நபர் மூலம் தான் இக்கார் ஏலத்திற்கு வந்தது.

டொனால்ட் டிரம்புக்கு அதிர்ச்சி அளித்த கார் ஏலம்!

நல்ல விலை போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காரின் உரிமையாளருக்கும், ஏல நிறுவனத்தாருக்கும் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. இருவருக்கு மட்டுமல்ல டிரம்புக்கு கூட இதை கேள்விப்பட்டு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கலாம்.

டொனால்ட் டிரம்புக்கு அதிர்ச்சி அளித்த கார் ஏலம்!

ஃபெராரி கார் மட்டுமல்லாமல் இதற்கு முன்னதாக, டிரம்ப் பயன்படுத்திய இன்னும் சில கார்கள் ஏலத்திற்கு வந்துள்ளன. கடந்த மாதம் அவர் பயன்படுத்திய காடிலாக் லிமோசின் கார் 45 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது. இது அக்காலகட்ட லிமோசின் காரை விட 4 - 7 மடங்கு கூடுதல் விலை ஆகும். இதே போல மற்றொரு ஏலத்தில் இவரின் பழைய லம்போர்கினி டியாப்ளோ காருக்கு 29 கோடி ரூபாய் விலை கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

English summary
US president donald trump's ferrari car upsets at auction
Story first published: Thursday, April 6, 2017, 6:00 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark