டிரம்ப்புக்கு காரை கிஃப்ட் பண்ணவங்க யாரென்று தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க... டிரம்ப் சொன்ன ஒரே வார்த்தை!!
அமெரிக்க அதிபர் தேர்தலை உலகமே உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறது. இதனால், விரைவில் நடைபெற உள்ள இந்த தேர்தல் தொடர்பான விஷயங்கள் நாளுக்கு நாள் சூடுப்பிடித்து வருகின்றன. இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில், அவரது ஆதரவாளரும், பிரபல இன்ஸ்டாகிராம் பிரபலமுமான அதின்ரோஸ் டொனால்ட் டிரம்பிற்கு விலையுயர்ந்த டெஸ்லா எலக்ட்ரிக் காரை பரிசாக வழங்கி அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
உலகிற்கே நாட்டாமை செய்யும் அமெரிக்காவில் அதிகாரத்தை தீர்மானிக்கும் தேர்தல் என்பதினாலேயே அமெரிக்க அதிபர் தேர்தல் பலத்த கவனத்தை பெற்றுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. முன்னதாக நடந்த சில சம்பவங்கள் இதற்கு முக்கிய காரணம் ஆகும். அந்த சம்பவங்களை பற்றி செய்திகளில் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

அதுமட்டுமின்றி, தற்போதைய அதிபர் ஜோ பைடன் தேர்தலில் இருந்து விலகியது டொனால்ட் டிரம்ப்பிற்கு பெரிதும் அனுகூலமாக அமைந்துவிட்டது. இதனால், வருகிற நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள அமெரிக்க தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிப் பெற்று மீண்டும் அதிபர் ஆவார் என அங்கிருந்துவரும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், பிரபல அமெரிக்க இன்ஸ்டாகிராம் பிரபலம் அதின் ரோஸ் சமீபத்தில் டிரம்ப்பை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, இந்த சந்திப்பின் ஒருபகுதியாக, டொனால்ட் டிரம்ப்பிற்கு விலையுயர்ந்த டெஸ்லா எலக்ட்ரிக் காரான சைபர்டிரக்கை அதின் ரோஸ் பரிசாக வழங்கியுள்ளார். இந்த காரில் அமெரிக்காவின் தேசிய கொடி உடன், டிரம்ப்பின் படமும் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில், டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டின்போது காதில் இருந்து இரத்தம் வழிந்துக் கொண்டிருந்த நேரத்திலும் டொனால்ட் டிரம்ப் தைரியமாக கையை உயர்த்தி நின்றது மக்கள் மத்தியில் பிரபலமாகியது.

குறிப்பாக, காதில் இருந்து இரத்தம் வழிந்துக் கொண்டிருக்க, டிரம்ப் கையை உயர்த்தி நின்ற போது எடுக்கப்பட்ட படங்கள் அமெரிக்கா முழுவதும் வைரலாகின. தற்போது, அதின்ரோஸ் பரிசாக வழங்கியுள்ள டெஸ்லா சைபர்டிரக்கில் இடம்பெற்றிருப்பதும் அந்த படமே ஆகும். இந்த படம் வாகனத்தின் இரு பக்கங்களிலும் இடம்பெற்றுள்ளது. மேலும், 'மீண்டும் அமெரிக்காவை சிறப்பாக்குங்கள்' என்கிற டிரம்ப்பின் தேர்தல் பிரச்சார முழக்கமும் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளது.
சைபர்டிரக் வாகனம் மட்டுமின்றி, பிராண்ட்-நியூ ரோலக்ஸ் கைக்கடிகாரத்தையும் டிரம்புக்கு அதின் ரோஸ் சந்திப்பின் நினைவு பரிசாக வழங்கியுள்ளார். ஃப்ளோரிடாவில் உள்ள டிரம்ப்பின் தனியார் இடத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், டெஸ்லா சைபர்டிரக் வாகனத்தை தனது படத்துடன் பார்த்தவுடன் 'இது அசாத்தியமானது என நினைக்கிறேன்' என டிரம்ப் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக ஆய்வுகளில் இருந்த டெஸ்லா சைபர்டிரக் ஒருவழியாக கடந்த 2023ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது. டிரம்புக்கு வழங்கப்பட்டு இருப்பது கஸ்டமைஸ் செய்யப்பட்ட சைபர்டிரக் ஆகும். சிறிதுநேரம் கலந்துரையாடிய பின்னர், சைபர்டிரக்கினுள் டிரம்ப்பும், அதின்ரோஸும் ஏறி அமர்ந்தனர். வாகனத்தினுள் இருவரும் கொஞ்ச நேரத்திற்கு பாடல்களை கேட்டு மகிழ்ந்தனர்.
அமெரிக்காவில் டெஸ்லா சைபர்டிரக்கின் விலை தற்சமயம் 60,990 டாலர்களில் இருந்து 1 லட்சம் டாலர்கள் வரையில் உள்ளது. தற்போதைய இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.51 லட்சத்து 20 ஆயிரம் - ரூ.89 லட்சத்து 95 ஆயிரம் ஆகும். வாகனத்தை வாங்கிய பின் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சம் வரையில் செலவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. தான் ஆட்சிக்கு வந்தால், எலக்ட்ரிக் வாகனங்களை ஓரங்கட்டிவிடுவேன் என கடந்த மாதத்தில் நடைபெற்ற கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் வாகனங்களுக்கு எதிரியாக விளங்கும் டொனால்ட் டிரம்புக்கு பரிசாக டெஸ்லா சைபர்டிரக் என்கிற எலக்ட்ரிக் காரை வழங்கியுள்ளனர். இந்த பரிசை அவர் ஏற்றுக் கொண்டாரா என்றால், இல்லை என்பதுதான் பதில். தேர்தல் பிரச்சார சமயங்களில் இவ்வாறான விலையுயர்ந்த பரிசுகளை பெறுவது டொனால்ட் டிரம்ப்புக்கு சட்ட ரீதியான சிக்கல்களை உண்டாக்கும். ஏனெனில், தேர்தலுக்கு குறிப்பிட்ட தொகையை மட்டுமே செலவு செய்ய வேண்டும் என நம்ம ஊரில் உள்ளதை போன்றே அமெரிக்காவிலும் கட்டுப்பாடுகள் உள்ளன.


Click it and Unblock the Notifications









