வெள்ளை மாளிகையை கார் விளம்பர மேடையாக மாத்திட்டாரே இந்த டிரம்ப்.. அமெரிக்கர்கள் மட்டுமல்ல இந்தியர்களும் ஷாக்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உலகப் பணக்காரர் எலான் மஸ்க், இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த நிலையிலேயே அனைவரையும் அதிரச் செய்கின்ற வகையில் ஓர் ஆச்சரியத்தை நிகழ்த்தி இருக்கின்றார் டொனால்ட் டிரம்ப். வெள்ளை மாளிகையில் வைத்து எலான் மஸ்க்கிற்கு சொந்தமான டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் கார்களை அவர் புரமோட் செய்திருக்கின்றார். இது அமெரிக்கர்களுக்கு மட்டுமல்ல இந்தியா போன்ற பிற நாட்டைச் சேர்ந்தவர்களையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டே இந்த காரை அவர் புரமோட் செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இருப்பினும், இது சர்ச்சையை கிளப்பும் வகையில் அமைந்திருக்கின்றது. அமெரிக்காவில் இன்னும் பல பிராண்டுகள் மின்சார வாகனங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், அமெரிக்க அதிபரோ குறிப்பாக டெஸ்லா நிறுவனத்தின் இ-காரை முன்னிறுத்தி விளம்பரப்படுத்தி இருக்கின்றார்.

இதனால்தான் அவரின் செயல் சர்ச்சையைக் கிளப்பி இருக்கின்றது. குறிப்பாக, மின்சார வானங்கள் மீது பெரிய அளவில் திருப்தி இல்லாதவராகவே இவர் கடந்த நாட்களில் தன்னை வெளியுலகில் காண்பித்திருக்கின்றார். குறிப்பாக, இ-வாகனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் பலவற்றை அவர் கடந்த நாட்களில் பின் வாங்கவும் செய்திருக்கின்றார்.
இந்த மாதிரியான ஓர் மனிதரே தற்போது இ-வாகனத்திற்கு ஆதரவு தரக் கூடியவராக தன்னை காண்பித்து இருக்கின்றார். இதுவே பலரின் ஆச்சரியத்திற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. டிரம்ப் இ-வாகனங்களுக்கு ஆதரவாக பேசும் வீடியோவே தற்போது வெளியாகி உள்ளது. அப்போது அவருடன் எலான் மஸ்க்-ம், அவருடைய பிராண்டான டெஸ்லா நிறுவன இ-கார் இருப்பதையும் நம்மால் காண முடிகின்றது.
இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் இதே மாதிரியான சூழலே தற்போது தென்படுகின்றது. அதாவது, மின்சார வாகன பயன்பாட்டை நோக்கி மக்களை நகர்த்தும் முயற்சிகளே நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், ஒரு பிராண்டை முன்னிறுத்தி ஆதரவு வழங்கும் செயல் என்பது சற்றே விநோதமாக அமைந்திருக்கின்றது.
அதேசமயம், நம் நாட்டில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சில முன்னணி வாகன மாடல்களின் அறிமுக நிகழ்வில் கலந்திருக்கின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது. ஆனால், அவர் ஒன்றிற்கும் மேற்பட்ட வாகன அறிமுக நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு தன்னுடைய ஆதரவைக் காண்பித்திருக்கின்றார்.
அவர் மட்டுமல்ல இன்னும் பலர் இந்த மாதிரியான செயலைச் செய்திருக்கின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது. டிரம்ப்-இன் இந்த மின்சார வாகனத்தை புரமோட் நிகழ்ச்சியின் போது இருந்தது டெஸ்லா மாடல் எஸ் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். டெஸ்லா நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்த காரை தான் வாங்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, அது சிறந்த வடிவமைப்பைக் கொண்டிருப்பதாகக் கூறி அதற்கு புகழாரம் சூட்டினார். இதேபோல், டெஸ்லாவின் சைபர்டிரக் கார் மாடலையும் அவர் புகழ்ந்து தள்ளிவிட்டார். முன்னதாக கடுமையான விமர்சனங்களை இ-வாகனங்கள் மீது முன் வைத்து வந்த டொனால்ட் டிரம்ப் தற்போது, அதற்கு பேராதரவு வழங்கக் கூடியவராக மாறியிருப்பது இதன் வாயிலாக தெள்ள தெளிவாகத் தெரிகின்றது.
எனவே விரைவில் அமெரிக்காவின் மீண்டும் மின்சார வாகனங்களுக்கான சலுகைகள் மிக தாராளமாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, டொனால்ட் டிரம்பின் இந்த புரமோஷன் செயலால் டெஸ்லாவின் மின்சார வாகன விற்பனை மிகப் பெரிய அளவில் வளர்ச்சியைக் காணும் எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலும் மின்சார கார் ஊக்குவிப்பு பணிகள் மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. நாட்டில் மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்குதல், சிறப்பு தள்ளுபடியை வழங்குதல் மற்றும் வரி தள்ளுபடியை வழங்குதல் உள்ளிட்டவற்றை அரசுகள் செய்து வருகின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








