19 வருடமா பஸ்ஸை பாதுகாத்து வைத்து இருந்ததற்கே இந்த தொகையை கொடுக்கலாம்! டிரம்ப்பின் முரட்டு ரசிகர் போல

டொனால்ட் டிரம்ப் (Donald Trump), அமெரிக்காவின் புதிய அதிபர். இவர் பதவி வகித்த பிறகு அமெரிக்காவில் தினந்தோறும் புது, புது அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை செய்திகளில் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால், அமெரிக்க அதிபராக 2வது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். உலகின் மிக பெரும் வல்லரசு நாடாக விளங்கும் அமெரிக்காவின் அரசியல் ஆனது பல ட்ரில்லியன் டாலர்கள் மதிப்பில் பணம் புழங்கும் களம் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டும் என்றில்லை. இதனாலேயே, அங்கு ஒருவர் மீண்டும் மீண்டும் அதிபராகுவது எல்லாம் அரிதாக நடக்கக்கூடிய ஒன்றாகும்.

அமெரிக்க வரலாற்றில் மிகவும் சிலர் மட்டுமே 2 முறை அதிபர்களாகி உள்ளனர். அத்தகையவர்களுள் டொனால்ட் டிரம்ப் ஒருவர். அவரது ஆட்சி தான் தற்போது அமெரிக்காவில் நடந்துக் கொண்டிருக்கிறது. இதில் இருந்து டொனால்ட் டிரம்ப் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர் என்பதை அறியலாம்.

mini bus comes for sale

டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அமெரிக்கா முழுவதும் இருக்கின்றனர். நம்ம ஊரில் எம்ஜிஆர், என்டிஆர் உள்ளிட்டோருக்கு இருப்பதை போலவே, டிரம்ப்பின் மிக தீவிரமான ரசிகர்களை அமெரிக்கா முழுவதும் பரவலாக பார்க்க முடியும். அவ்வாறான ஒரு தீவிரமான டொனால்ட் டிரம்ப் ரசிகர் ஒருவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சி (New Jersey)-இல் வசித்து வருகிறார்.

இவர் எந்த அளவிற்கு தீவிரமான டிரம்ப் ரசிகர் என்றால், இவருக்கு சொந்தமாக இருக்கும் கடையில் டிரம்ப் சார்ந்த பொருட்கள் தான் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. டிரம்ப்பின் உருவம் பொறிக்கப்பட்ட டீ-சர்ட், டீ கப்களில் இருந்து, டிரம்ப்பின் பிரம்மாண்ட படத்தை கொண்ட மினி பேருந்து (Mini Bus) வரையில் அந்த ரசிகரின் கடையில் உள்ளது.

இதில், அந்த மினி பேருந்தை மட்டும் விற்பனைக்காக அவர் வைத்திருக்கவில்லை. கடையின் விளம்பரத்திற்காகவும், தனது தனிப்பட்ட அலுவலகமாகவும் அந்த மினி பேருந்தை பயன்படுத்தி வந்தார். அதனால்தான், இந்த மினி பேருந்தினுள் இருக்கைகள் கிடையாது. இந்த பேருந்தின் வெளிப்பக்கத்தை சுற்றிலும் நிறைய இடங்களில் டிரம்ப்பின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

mini bus comes for sale

குறிப்பாக, பேருந்தின் பின்பக்கத்தில் கூலிங் கிளாஸ் அணிந்தப்படி, அமெரிக்க தேசிய கொடியின் நிறங்களிலான உடையில் டொனால்ட் டிரம்ப் நிற்கும் படம் இடம்பெற்றுள்ளது. சரி இப்போது எதற்கு இந்த பேருந்தை பற்றி பார்க்கிறோம் என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். 'லெட்ஸ் கோ பிரண்டன்' (Let's Go Brandon) என்கிற பெயரில் செயல்படும் தனது கடையை இழுத்து மூட அந்த டிரம்ப் ரசிகர் முடிவெடுத்துள்ளார்.

மிகுந்த மன வருத்தத்திற்கு மத்தியில் எடுக்கப்பட்ட இந்த முடிவின்படி, தனது கடையில் உள்ள பொருட்களை எல்லாம் முடிந்தவரையில் குறைந்த விலையில் விற்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறார். அதன்படி, டிரம்ப் படம் பொறிக்கப்பட்ட தனது மினி பேருந்தையும் விற்க முடிவெடுத்துள்ளார். 2006ஆம் ஆண்டில் ஃபோர்டு மோட்டார் (Ford Motor) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த மினி பேருந்து 19 வருடங்கள் பழமையானது ஆகும்.

இதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை 14 ஆயிரத்து 999 அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய ரூபாயில் தற்சமயம் இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.13 லட்சம் ஆகும். ஏற்கனவே கூறியதுபோல், இந்த பேருந்தினுள் இருக்கைகள் இல்லை. ஆனால், ஹைட்ராலிக் கதவுகள் தற்போதும் சிறப்பாக செயல்படுவதாகவும், பேருந்தின் வெளிப்பக்கத்தை மட்டும் கொஞ்சம் பட்டி, டிங்கரிங் பார்த்தால் போதும் எனவும் தெரிவித்துள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு தீவிரமான ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர் என்பது தெரியும். ஆனால், இந்த அளவிற்கு தீவிரமான ரசிகர்கள் இருப்பார்கள் என நினைக்கவில்லை. ரூ.13 லட்சம் என்பது நம் இந்தியாவை பொறுத்தவரையில் வேண்டுமாயின் அதிகமாக இருந்தாலும், அமெரிக்காவை பொறுத்தவரையில் 15 ஆயிரம் டாலர்கள் என்பது குறைவு என்பதால், இந்த டிரம்ப் படம் ஒட்டப்பட்ட மினி பேருந்து விரைவாகவே விற்பனையாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image Source

FAQs
'லெட்ஸ் கோ பிரண்டன்' கடை இதன்பின் என்ன ஆக போகிறது?

ஆஃப்-லைன் வணிகத்தை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, இனி ஆன்-லைன் வணிகத்தை மட்டுமே மேற்கொள்ள உள்ளது.

'லெட்ஸ் கோ பிரண்டன்' கடை எப்போது திறக்கப்பட்டது?

2022ஆம் ஆண்டில்.

டொனால்ட் டிரம்ப் ரசிகராக இருப்பினும், எதற்காக இந்த மினி பேருந்தை விற்கிறார்?

ஏனெனில், இந்த பேருந்தின் உரிமையாளரிடம் ஏற்கனவே டிரம்ப் வேன் (Van) ஒன்று உள்ளது.

DriveSpark Automotive

More from DriveSpark

Article Published On: Tuesday, March 18, 2025, 23:59 [IST]
English summary
Donald trump image engraved ford mini bus comes for sale
மேலும்... #buses
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+