டிரம்ப் சைகை.. ரெடியான ரகசிய ஏஜென்ட்.. கொலை பீதியால் காரில் ஏறாத கிம்.. அந்த காரில் என்னதான் இருக்கு

சிங்கப்பூரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, தனது புல்லட் புரூப் கவச காரை, வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் காட்டினார். ஆனால் கிம் ஜாங் உன் ஏற மறுத்து விட்டார்.

By Arun

சிங்கப்பூரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, தனது புல்லட் புரூப் கவச காரை, வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் காட்டினார். ஆனால் கொலை செய்யப்படலாம் என்ற பீதியில் இருந்த கிம் ஜாங் உன் காரில் ஏற மறுத்து விட்டார். அமெரிக்க அதிபரின் காரில் அப்படி என்னதான் இருக்கிறது? என்பது குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

டிரம்ப் சைகை.. ரெடியான ரகசிய ஏஜென்ட்.. கொலை பீதியால் காரில் ஏறாத கிம்.. அந்த காரில் என்னதான் இருக்கு

அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே கடந்த 60 ஆண்டு காலமாக பகை நிலவி வருகிறது. குறிப்பாக வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சமீபத்திய அணு ஆயுத சோதனைகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை, அமெரிக்க அதிபர் டிரம்ப் ரசிக்கவில்லை.

டிரம்ப் சைகை.. ரெடியான ரகசிய ஏஜென்ட்.. கொலை பீதியால் காரில் ஏறாத கிம்.. அந்த காரில் என்னதான் இருக்கு

இதனால் வட கொரியா மீது ஏகப்பட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் விதித்தன. இதன் காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடியில் வட கொரியா சிக்கினாலும் கூட, ராணுவ பலத்தை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தது.

டிரம்ப் சைகை.. ரெடியான ரகசிய ஏஜென்ட்.. கொலை பீதியால் காரில் ஏறாத கிம்.. அந்த காரில் என்னதான் இருக்கு

21ம் நூற்றாண்டின் ஹிட்லர் என வர்ணிக்கப்படும் கிம் ஜாங் உன்னின் நடவடிக்கைகளால், மூன்றாம் உலக போர் மூளும் அபாயமும் நிலவியது. இந்நிலையில் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்-அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

டிரம்ப் சைகை.. ரெடியான ரகசிய ஏஜென்ட்.. கொலை பீதியால் காரில் ஏறாத கிம்.. அந்த காரில் என்னதான் இருக்கு

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் கிம் ஜாங் உன்-டிரம்ப் சந்திப்பு சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் நடைபெற்றது. இதில், வரலாற்று சிறப்புமிக்க பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

டிரம்ப் சைகை.. ரெடியான ரகசிய ஏஜென்ட்.. கொலை பீதியால் காரில் ஏறாத கிம்.. அந்த காரில் என்னதான் இருக்கு

முன்னதாக பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கையில் சிறிய இடைவெளி விடப்பட்டது. அப்போது கிம் ஜோங் உன்னுடன் இணைந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியே நடந்து வந்தார். பின்னர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மிரட்டலான வசதிகளுடன் கூடிய தனது கேடிலாக் ஒன் காரை கிம் ஜோங் உன்னுக்கு காட்டினார்.

டிரம்ப் சைகை.. ரெடியான ரகசிய ஏஜென்ட்.. கொலை பீதியால் காரில் ஏறாத கிம்.. அந்த காரில் என்னதான் இருக்கு

டிரம்ப் லேசாக சைகை காட்டியதும், ரகசிய சர்வீஸ் ஏஜென்சியை சேர்ந்தவர், காரின் கதவை திறந்து விட்டார். பின்னர் காரின் உள்பகுதியை கிம் ஜோங் உன், ஓரிரு வினாடிகள் கூர்ந்து கவனித்தார். ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, காரின் உள்ளே ஏற மறுத்து விட்டார். பின்னர் கிம் ஜோங் உன்னும், டிரம்ப்பும் அங்கிருந்து சென்று விட்டனர். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சந்திப்பின்போது, அமெரிக்கர்களால் நான் கொலை செய்யப்படலாம் என கிம் ஜோங் உன், கடந்த சில நாட்களுக்கு முன் அச்சம் தெரிவித்திருந்தார். எனவே பாதுகாப்பு விஷயத்தில் முன்னெப்போதையும் விட கூடுதல் கவனத்துடன் கிம் ஜோங் உன் செயல்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது.

டிரம்ப் சைகை.. ரெடியான ரகசிய ஏஜென்ட்.. கொலை பீதியால் காரில் ஏறாத கிம்.. அந்த காரில் என்னதான் இருக்கு

உலகின் பவர்ஃபுல் மனிதர்களில் ஒருவரான டிரம்ப் பயன்படுத்தும் கேடிலாக் ஒன் காருக்கு, பீஸ்ட், லிமோசைன் ஒன், ஃபர்ஸ்ட் கார் என பல்வேறு பெயர்கள் உண்டு. இது சாதாரணமான கார் கிடையாது. பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பின், மிகவும் முரட்டுத்தனமாக உருவாக்கப்பட்டுள்ள ஓர் கவச கார் ஆகும்.

டிரம்ப் சைகை.. ரெடியான ரகசிய ஏஜென்ட்.. கொலை பீதியால் காரில் ஏறாத கிம்.. அந்த காரில் என்னதான் இருக்கு

எத்தகைய தாக்குதலையும் தாங்கும் சக்தி கேடிலாக் ஒன் காருக்கு உள்ளது. நேரடியான துப்பாக்கிச்சூடு, சக்தி வாய்ந்த குண்டு வெடிப்புகளால் கூட அமெரிக்க அதிபரின் காரை ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் புல்லட் மற்றும் பாம் ப்ரூப் தன்மையுடன் கேடிலாக் ஒன் கார் உருவாக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் சைகை.. ரெடியான ரகசிய ஏஜென்ட்.. கொலை பீதியால் காரில் ஏறாத கிம்.. அந்த காரில் என்னதான் இருக்கு

கேடிலாக் ஒன் காரின் டோர்கள் 8 இன்ச் தடிமனுடனும், கண்ணாடிகள் 5 இன்ச் தடிமனுடனும் இருக்கும். இவையும் புல்லட் புரூப்தான். இந்த காரின் டயர்களும் கூட புல்லட் புரூப்தான். துப்பாக்கியால் சுட்டாலும் கூட, டோர், கண்ணாடி, டயர்களுக்கு ஒன்றும் ஆகாது.

டிரம்ப் சைகை.. ரெடியான ரகசிய ஏஜென்ட்.. கொலை பீதியால் காரில் ஏறாத கிம்.. அந்த காரில் என்னதான் இருக்கு

துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளை தவிர்த்து, நவீனமான முறையில் ரசாயன தாக்குதல் நடத்தினாலோ, அல்லது கிருமிகளை கொண்டு பயாலாஜிக்கல் தாக்குதல் நடத்தினாலோ கூட, அமெரிக்க அதிபரின் காரை எதுவுமே செய்ய முடியாது. அதற்கேற்ற பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் அந்த காரில் உள்ளன.

டிரம்ப் சைகை.. ரெடியான ரகசிய ஏஜென்ட்.. கொலை பீதியால் காரில் ஏறாத கிம்.. அந்த காரில் என்னதான் இருக்கு

இதுதவிர கேடிலாக் ஒன் காரில், ஜேம்ஸ்பாண்ட் பட பாணியில், கண்ணீர் புகை குண்டுகளை வீசும் பீரங்கிகள், துப்பாக்கிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் வைக்கப்பட்டிருக்கும். ஏதேனும் பிரச்னை என்றால், உடனடியாக பயன்படுத்துவதற்கு வசதியாக, டிரம்ப்பின் ரத்த மாதிரி உள்பட அனைத்து மருத்துவ உபகரணங்களும் காரில் இருக்கும்.

டிரம்ப் சைகை.. ரெடியான ரகசிய ஏஜென்ட்.. கொலை பீதியால் காரில் ஏறாத கிம்.. அந்த காரில் என்னதான் இருக்கு

அமெரிக்க அதிபரின் காரில், ஜிபிஎஸ் டிராக்கிங், சேட்டிலைட் கம்யூனிகேஷன் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. எனவே விமானத்தை போன்று, இந்த காரும் அதிகாரிகள் குழுவினருடன் எப்போதும் தொடர்பிலேயே இருக்கும்.

டிரம்ப் சைகை.. ரெடியான ரகசிய ஏஜென்ட்.. கொலை பீதியால் காரில் ஏறாத கிம்.. அந்த காரில் என்னதான் இருக்கு

கேடிலாக் ஒன் காரின் எடை 8 டன்கள். அதாவது ஒரு போயிங் 747 ஜெட்டுக்கு இணையான எடை கொண்டது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 6.6 லிட்டர் வி8 ட்யூராமேக்ஸ் இன்ஜின், 400 பிஎச்பி பவரையும், 1,000 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். ஆனால் அதிகபட்சமாக மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே கார் இயக்கப்படும்.

டிரம்ப் சைகை.. ரெடியான ரகசிய ஏஜென்ட்.. கொலை பீதியால் காரில் ஏறாத கிம்.. அந்த காரில் என்னதான் இருக்கு

அமெரிக்காவின் ரகசிய சர்வீஸ் ஏஜென்சிதான், அதிபர் டிரம்ப்பின் கார்களை பராமரிக்கிறது. டிரம்ப் பயன்படுத்துவதற்காக, ஒரே மாதிரியான 12 கேடிலாக் ஒன் கார்களை அவர்கள் வைத்துள்ளனர். அனைத்து கார்களும் எந்நேரமும் தயார் நிலையில் இருக்கும்.

டிரம்ப் சைகை.. ரெடியான ரகசிய ஏஜென்ட்.. கொலை பீதியால் காரில் ஏறாத கிம்.. அந்த காரில் என்னதான் இருக்கு

டிரம்ப் எங்கேயாவது வெளியில் செல்கிறார் என்றால், அவருடன் அதிகாரிகள் குழுவினரும் கான்வாயில் பயணிப்பார்கள். அந்த கான்வாயில் குறைந்தபட்சம் 2 கேடிலாக் ஒன் கார்களாவது இடம்பெற்றிருக்கும். ஒரு கேடிலாக் ஒன் காரின் விலை 15 கோடிக்கும் மேல்!

டிரம்ப் சைகை.. ரெடியான ரகசிய ஏஜென்ட்.. கொலை பீதியால் காரில் ஏறாத கிம்.. அந்த காரில் என்னதான் இருக்கு

டிரம்ப் வெளிநாடு செல்கிறார் என்றால், அவருடன் விமானத்தில் கேடிலாக் ஒன் காரும் பயணிக்கும். வெளிநாடு சென்றாலும் கூட, டிரம்ப் அந்த காரைதான் பயன்படுத்துவார். அந்த காரில் போர்ட்பிள் டாய்லெட் வசதியும் இடம்பெற்றிருக்கிறது.

டிரம்ப் சைகை.. ரெடியான ரகசிய ஏஜென்ட்.. கொலை பீதியால் காரில் ஏறாத கிம்.. அந்த காரில் என்னதான் இருக்கு

எனினும் அமெரிக்க அதிபருக்கான புதிய காரை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் டிரம்ப்பின் கான்வாயில் அந்த காரை பார்க்கலாம். ஏனெனில் அந்த காரை டெஸ்ட் செய்து பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Source: Ruptly

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Donald Trump shows his Cadillac One “Beast” to Kim Jong-Un. Read in tamil.
Story first published: Wednesday, June 13, 2018, 12:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X