பதவியேற்றதும் இந்தியாவை பழி வாங்க காத்திருக்கும் டிரம்ப்! 2019லயே இதை சூசகமா சொல்லிட்டாரா?
அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் நடைபெற்று அதில் மீண்டும் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வாகியுள்ள நிலையில் இந்தியாவிற்கு இது புதிய சிக்கலை ஏற்படுத்தும் என்ற பேச்சு எழுந்துள்ளது. ஏற்கனவே டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் வாகனங்களுக்கான இறக்குமதி வரி குறித்து தனது அதிருத்தியையும் கண்டனத்தையும் தெரிவித்து இருந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் அதிபராகி இருப்பது இந்தியாவிற்கு புதிய தலைவலி ஏற்படுத்தும் என பேசப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் வெளிநாட்டு வாகனங்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய அதிகபட்சமான இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இது உள்நாட்டில் இருக்கும் உற்பத்தியாளர்களுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் இந்த விதி விதிக்கப்படுகிறது. அப்போதுதான் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் சிறப்பான விற்பனையை பெற முடியும் என்ற நோக்கத்தில் இந்திய அரசு இந்த கொள்கை முடிவை எடுத்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் முடிந்து மீண்டும் ரொனால் டிரம்ப் அதிபராக தேர்வாகியுள்ளார். இவர் ஏற்கனவே இந்தியாவில் வெளிநாட்டு வாகனங்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி குறித்து விமர்சனம் செய்திருக்கிறார். இது தற்போது மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அமெரிக்க டூவீலர் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் இருந்து இந்த இறக்குமதி வரி காரணமாகவே வெளியேறியது.
அப்பொழுது டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் இறக்குமதி வரி கொள்கை குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்தியாவில் அதிகமான இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக அவர் பேசியிருந்தார். இது குறித்து இந்தியா மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கடுமையான விமர்சனங்களை வைத்திருந்த நிலையில் அவர் தற்போது மீண்டும் அதிபராக தேர்வாகியுள்ளது. இந்தியாவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் என்ற பேச்சு நிலவி வருகிறது.

இந்தியாவில் தற்போது முழுமையாக கட்டமைக்கப்பட்ட வாகனத்தை இறக்குமதி செய்து விற்பனை செய்ய வேண்டும் என்றால் கார்களுக்கு 100%, டூவீலர்களுக்கு 50%, வாகனங்களுக்கு 40% இறக்குமதி வரியாக விதிக்கப்படுகிறது. இதுவே தனித்தனி உதிரி பாகங்களாக பிரித்து இந்தியாவில் வைத்து அதை அசெம்பிள் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்றால் விரிவாக உங்களுக்கு 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது.
இந்த வரியுடன் சேர்த்து இந்த வாகனத்தை விற்பனைக்கு கொண்டு போகும் போது பொதுமக்கள் அதிகமாக பணம் கொடுத்து இந்த வாகனத்தை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக இந்த வாகனத்தின் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு அதிகமாக இருப்பதில்லை இதற்கு பதிலாக இந்தியாவில் உள்ள போட்டி நிறுவனங்கள் குறைவான விலையில் இதே அம்சங்கள் கொண்ட வாகனத்தை விற்பனை செய்வதால் வெளிநாட்டு நிறுவனங்களால் அதிக வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்ய முடிவதில்லை.
இது குறித்து பேசிய டொனால்ட் டிரம்ப் அடுத்த 2019ம் ஆண்டு இந்தியாவை "வரிகளில் ராஜா" என விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேசியிருந்தார். இந்நிலையில் மீண்டும் இவர் அதிபராக பதவி ஏற்கும் நிலையில் இந்தியாவிற்கு இது சிக்கலை ஏற்படுத்தும் என பேசப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருந்தாலும் அப்பொழுது ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறியது. ஆனால் தற்போது இந்நிறுவனம் இந்தியாவில் தனது தொழில்முறையை முற்றிலுமாக மாற்றி அமைத்து ஹீரோ நிறுவனத்துடன் கைகோர்த்து இந்தியாவில் ஹாரிலி டேவிட்சன் பைக்குகளை ஹீரோ நிறுவன ஆலையில் தயாரித்து குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வந்து விட்டது.
ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 440 பைக் இன்று ரூ 2.39 லட்சம் என்ற விலையில் இந்திய மார்க்கெட்டில் விற்பனை ஆகி விடுவதால் இதுதான் நிறுவனத்திற்கு பெரிய பிரச்சினையாக தற்போது இருக்காது. இதனால் டொனால்ட் டிரம்ப் இது குறித்து பெரிய அளவில் பேச மாட்டார் என ஒரு பக்கம் கூறப்படுகிறது. இதனால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாக்கும் பொருட்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பில்லை என கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு நாட்டிற்கு அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தான் மிக முக்கியம் என்பதால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையாக வரி விதிக்கப்படுவது. ஒரு சாதாரண விஷயம் தான் இந்தியா போன்ற பெரிய நாடுகளில் இந்த கொள்கை மிக அவசியமான தேவையாக இருக்கிறது. இல்லையென்றால் இந்திய மார்க்கெட்டை வெளிநாட்டு நிறுவனங்கள் வந்து ஆட்சி செய்ய வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








