இது டொனால்ட் டிரம்ப்னு சொன்னா நிறைய பேர் ஆச்சிரியப்படுவீங்க!! யூஸ் பண்ணாத காரே கிடையாது!
டொனால்ட் டிரம்ப் (Donald Trump), அமெரிக்காவின் புதிய அதிபர். உலகின் பெரும் வல்லரசு நாடாக விளங்கும் அமெரிக்காவின் முக்கியமான பதவியாளரை தீர்மானிக்கக்கூடிய தேர்தல் என்பதால், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு கடந்த சில மாதங்களாகவே உலகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியது. மக்களின் பெரும்பான்மையான ஆதரவுடன் 2வது முறையாக டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபர் பதவியை வகிக்க உள்ளார். டொனால்ட் டிரம்ப்பின் கார் கலெக்ஷன்ஸை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
உலகின் பெரும்பான்மையான நாட்டு அரசியலையும், வணிகங்களையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அமெரிக்க தேர்தல் முடிவு தீர்மானிக்கிறது. இதன் காரணமாகவே இந்த தேர்தலை நம் இந்தியா உள்பட வெளிநாட்டு அரசாங்கங்கள் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தன. அதன்படி, கடந்த நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்க தேர்தல் வெற்றிக்கரமாக நடத்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸுக்கும், ஏற்கனவே அமெரிக்க அதிபராக பதவி வகித்த அனுபவமிக்க டொனால்ட் டிரம்புக்கும் இடையே மக்களின் வாக்குகளை பெறுவதில் கடுமையான இழுப்பறி நீடித்த நிலையில், டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 78 வயதான டிரம்ப் பெரும்பாலும் பாதுகாப்பு கவசங்கள் பொருத்தப்பட்ட எஸ்யூவி கார்களில் செல்வதுதான் வழக்கம்.
ஆனால், இளம் வயதில் மற்ற அமெரிக்கர்களை போல தனித்துவமான சூப்பர்கார்களையும், செடான்களையும் ஓட்டவே டொனால்ட் டிரம்ப் விரும்பியுள்ளார். இவர் இளம் வயதில் வெவ்வேறு விதமான கார்களுடன் நிற்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் ஒரு படத்தில், நடுத்தர வயதுமிக்கவராக இருக்கும் டொனால்ட் டிரம்ப் பிங்க் போலோ டி-ஷர்ட் மற்றும் வெள்ளை நிற பேண்ட் உடன் லம்போர்கினி டியாப்லோ விடி ரோட்ஸ்டர் காருக்கு அருகில் நிற்கிறார்.

இந்த படம் 1997ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டு உள்ளது. இன்னொரு படத்தில், அதே லம்போர்கினி டியாப்லோ விடி ரோட்ஸ்டர் காரில் மெலனியா டிரம்ப் உடன் அமர்ந்திருக்கும் காட்சியை பார்க்க முடிகிறது. இந்த படம் சில வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டது ஆகும். இந்த படத்தில் "ப்ளூ லே மேன்ஸ்" என்கிற கஸ்டம் நிறத்தில் டிரம்ப்பின் இந்த லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார் காட்சியளிக்கிறது.
சமீபத்தில் ஏலத்திற்கு வந்த இந்த லம்போர்கினி கார் 11 இலட்ச அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போனது. இந்த லம்போர்கினி காரை பயன்படுத்துவதற்கு முன்பாகவே பல்வேறு பழமையான கார்களை டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தி வந்துள்ளார். இன்னும் சொல்லப்போனால், இவரிடம் 1956ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ் சில்வர் கிளவுட் லக்சரி செடான் காரும் உள்ளது.

தற்போது நமக்கு கிடைக்க பெற்றுள்ள படத்தில், கிளாசியான கருப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரை பயன்படுத்திய போது டிரம்புக்கு 25- 35 வயதுக்குள் இருக்கலாம். இதனை காட்டிலும் குறைந்த வயதிலான டிரம்பின் புகைப்படம் ஒன்றும் நமக்கு கிடைத்துள்ளது. அதில், கல்லூரி படிப்பை முடித்த இளைஞனாக டிரம்ப் காட்சியளிக்கிறார். பிளாக் & வொயிட் புகைப்படமான அதில் கேடிலாக் ஃப்ளீட்வுட் செடான் காருடன் நிற்கிறார்.
டொனால்ட் டிரம்ப் கடந்த காலங்களில் இருந்து பல்வேறு கேடிலாக் வாகனங்களை வாங்கியுள்ளார். அவற்றுள் கேடிலாக் ஃப்ளீட்வுட் காரில் டொனால்ட் ஜே.டிரம்ப் என்பதை குறிக்கும் வகையில் "DJT" என்கிற நம்பர் பிளேட் உள்ளது. இவற்றுடன், மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்.எல்.ஆர் மெக்லாரன் என்கிற உலகின் மிகவும் அரிதான காரையும் சில்வர் நிறத்தில் டொனால்ட் டிரம்ப் வைத்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாங்கள் குறிப்பிட்டுள்ளவை டொனால்ட் டிரம்ப் பயன்படுத்திய விலையுயர்ந்த கார்கள் ஆகும். இன்னும் விலை குறைவான கார்களை எல்லாம் சேர்த்தால் லிஸ்ட் எங்கேயோ செல்லும். 78 வயதில் அனைத்து விதமான கார்களையும் டிரம்ப் பயன்படுத்தி உள்ளார். இவரது கார் கலெக்ஷன்கள் இத்தோடு நிற்க போவதில்லை.


Click it and Unblock the Notifications









