பழைய கார்கள் உடன் காட்சியளிக்கும் இந்த பிரபலமான நபர் யாரென்று தெரிகிறதா? வாழ்க்கை இப்போ மொத்தமா மாறிடுச்சு!
டொனால்ட் டிரம்ப் (Donald Trump), இந்த ஒரு பெயர் தான் தற்சமயம் அமெரிக்கா (America) முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்பது உங்களுக்கே தெரியும் என நினைக்கிறேன். கடந்த 2024 நவம்பர் மாத நடைபெற்ற தேர்தலில் வெற்றிப் பெற்று, புதிய அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று (ஜனவரி 20) இந்திய நேரப்படி இரவு 10:30 மணியளவில் பதவியேற்றார். அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றிருக்கும் டிரம்ப் இந்த அரியாசனத்தை அலங்கரிப்பது இது 2வது முறை ஆகும்.
அமெரிக்காவில் என்று மட்டுமின்றி, உலகளவிலேயே மிக முக்கியமான மற்றும் சவாலான அரசியல் பதவியாக விளங்குவதால், அமெரிக்க அதிபருக்கு எப்போதுமே பலத்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அதிபர் பயன்படுத்தும் கார் கூட அவ்வளவு எளிதாக சேதமடையாத வகையில், பீரங்கி குண்டுகளை கூட தாங்கக்கூடியதாக உருவாக்கப்படுகின்றன.

இதனாலேயே அமெரிக்க அதிபர்கள் பெரும்பாலும் தங்களது ஆட்சி காலம் முடியும் வரையில் ஒரே காரை பயன்படுத்துவதை பார்க்க முடியும். டொனால்ட் டிரம்ப் முதல்முறையாக அதிபராக பதவியேற்கும் முன் அதிபராக இருந்த பாரக் ஒபாமா (Barack Obama) அவர்கள் 'கேடில்லாக் ஒன்' (Cadillac One) என்கிற காரை பயன்படுத்தினார். டிரம்ப் அதிபரான பின்பு புதியதொரு கேடில்லாக் கார் அதிபரின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டு காராக கொண்டுவரப்பட்டது.
'தி பீஸ்ட்' (The Beast) என அழைக்கப்பட்ட இந்த காரை தான், அதன்பின் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடன் (Joe Biden)-னும் பயன்படுத்தினார். ஆனால், புதிய அதிபராக மீண்டும் 2வது முறையாக இந்த பதவியை பிடித்துள்ள டிரம்ப்பின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டு கார் புதியதொரு கேடில்லாக் காராக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, தி பீஸ்ட் கார் ஆனது ஏற்கனவே புல்லட்-ப்ரூஃப் தரத்தில் ஜன்னல் கண்ணாடிகளை கொண்டதாகவும், கையெறி துப்பாக்கிகளின் குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகள் உள்ளிட்டவற்றை சமாளிக்கக்கூடியதாகவும் உள்ளது. தி பீஸ்ட் காரின் இந்த திறன்கள் மேலும் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி... அப்படியே டொனால்ட் டிரம்ப்பிடம் உள்ள கார்களை பார்த்தால், இளம் வயதில் இவரிடம் ஏகப்பட்ட விலையுயர்ந்த கார்கள் இருந்தன.
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், 1990ஆம் காலக்கட்டத்தில் லம்போர்கினி டியாப்லோ விடி ரோட்ஸ்டர் கார் ஒன்றை டிரம்ப் பயன்படுத்தினார். 'ப்ளூ லே மேன்ஸ்' என்கிற அடர் நீல நிறத்திலான இந்த லம்போர்கினி காரில் மனைவி மெலனியா டிரம்ப் உடன் நிறைய முறை வெளியில் டொனால்ட் டிரம்ப் காட்சி தந்துள்ளார். சமீபத்தில் ஏலத்திற்கு வந்த டிரம்ப்பின் இந்த லம்போர்கினி கார் 11 லட்ச அமெரிக்க டாலர்களுக்கும் ஏலம் போனது.

டொனால்ட் டிரம்ப்பிடம் 1956இல் உருவாக்கப்பட்ட பழைய ரோல்ஸ்-ராய்ஸ் சில்வர் கிளவுட் லக்சரி செடான் கார் ஒன்றும் உள்ளது. இந்த அல்ட்ரா-லக்சரி காரை 25- 35 வயதின்போது டிரம்ப் பயன்படுத்தினார். இதைவிட குறைந்த வயதிலான டிரம்ப்பின் படம் ஒன்றும் நமக்கு கிடைக்க பெற்றுள்ளது. டீன் ஏஜ் இளைஞராக அந்த படத்தில் காட்சியளிக்கும் டொனால்ட் டிரம்ப், கேடில்லாக் ஃப்ளீட்வுட் செடான் கார் உடன் காட்சியளிக்கிறார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இளம் வயதில் நன்றாக ஆடி முடித்து, தற்போது சமூக பணிகளில் ஈடுப்பட்டுவரும் நபர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவார். இளம் வயதின்போது இவர் பயன்படுத்தி கார் மாடல்களின் வகைகள் தான் இதற்கு சாட்சியாகும். பழமைவாதியான டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது போக்குவரத்துக்கு எந்த மாதிரியான கார் பயன்படுத்தப்பட உள்ளது என்பதை காண ஆவலாக உள்ளோம்.


Click it and Unblock the Notifications









