ரயில்களில் இரவு 10 மணிக்கு மேல் செய்யக்கூடாத விஷயங்கள் எது? மீறி செஞ்சா அப்புறம் ஏடாகூடமா ஏதாவது நடந்துடும்!

இந்திய ரயில்வேயில் இரவு 10 மணிக்கு மேல் பின்பற்றவேண்டிய விஷயங்கள் எனத் தனியாக உள்ள சில விதிமுறைகள் குறித்துக் காணலாம்.

இந்திய ரயில்வேகளில் இரவு 10 மணிக்கு மேல் அமலுக்கு வரும் விஷயங்கள் எனத் தனியாக சில விதிமுறைகளே இருக்கிறது. இது குறித்து பலருக்கு இன்றும் விழிப்புணர்வு இல்லை. இந்த விதிமுறைகள் என்னென்ன என வரிசையாகக் காணலாம்.

10

இந்திய ரயில்வேயில் நீங்கள் இரவு நேரத்தில் பயணம் செய்திருந்தால் பெர்த்தில் படுப்பது, இரவு நேரம் லைட்டை ஆன் செய்து வைத்திருப்பது, மற்றவர்களுக்குத் தொந்தரவு தரும்படி சத்தமாகப் பேசுவது என இரவு நேரத்தில் உங்களைத் தூங்க விடாமல் சிலர் தொந்தரவு செய்திருக்கலாம். ஆனால் இது எல்லாம் ரயில்வே விதிமுறைகளின் படி தவறான விஷயமாகும். இதற்காக ரயில்வே நிர்வாகம் "இரவு 10 மணி விதிமுறைகள்" எனத் தனியாக சில விதிமுறைகளையே வைத்திருக்கின்றனர்.

1. டிக்கெட் பரிசோதனைக்குத் தடை

இரவு 10 மணிக்கு மேல் ஒரு டிக்கெட் பரிசோதகர் தேவையில்லாமல் ஏற்கனவே டிக்கெட்டை பரிசோதனை செய்த ஒரு பயணியின் டிக்கெட்டை அவரை தொந்தரவு செய்யும் வகையில் பரிசோதனை செய்யக் கூடாது. ஒரு பயணி இரவு 10 மணிக்கு மேல் ரயிலில் ஏறினால் மட்டும் அவர் டிக்கெட்டை ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ளலாம்.

2. லைட்களை ஒளிர விடத் தடை

ரயில்களில் இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் கட்டாயம் லைட்களை ஆஃப் செய்ய வேண்டும். அதற்கு மேல் லைட்கள் எரியக் கூடாது. மாறாக நைட் லேம்ப் இருந்தால் அதை மட்டும் போட்டுக்கொள்ளலாம். சக பயணிகளின் தூக்கத்தைக் கெடுக்கும்படி மற்ற பயணிகள் லைட்களை ஆன் செய்து வைத்து தொந்தரவு செய்வதைத் தடுக்க இந்த விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

3. சத்தமாகப் பேசத் தடை

குழுவாக டிக்கெட் எடுத்து இரவு நேரத்தில் பயணிகள் பயணம் செய்யும் போது இரவு 10 மணிக்கு மேல் அவர்கள் குழுவாக அமர்ந்து சத்தமாகப் பேசி மற்ற பயணிகளுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது. இதனால் மற்ற பயணிகளின் தூக்கக் கெட்டால் இது குறித்து அவர்கள் டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளிக்கலாம்.

4. மிடில் பெர்த் உரிமை

ரயில்களில் மிடில் பெர்த் ஒதுக்கப்பட்டவர்கள் இரவு 10 மணிக்கு மேல் அந்த மிடில் பெர்த்தில் படுக்க நினைத்தால் அதை அவர் தாராளமாகப் பயன்படுத்தலாம். கீழ் பெர்த்தில் இருப்பவர் மிடில் பெர்த்தை ஏற்றிப் போடுவதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாது. அதே போல கீழ் பெர்த்தில் உள்ளவர் இரவு 10 மணிக்கு மேல் தூங்க வேண்டும் என்றாலும் மிடில் பெர்த்தில் உள்ளவர் தான் அமர்ந்துதான் இருப்பேன் என அடம்பிடிக்காமல் அவருக்கு படுக்கஇடம் கொடுக்க வேண்டும்.

5.ஆன்லைன் உணவு டெலிவரிக்கு தடை

இன்று இ-கேட்டரிங் சர்வீஸ் மூலம் ரயில்களுக்கே உணவு டெலிவரி செய்யும் வசதி வந்துவிட்டது. இந்த உணவுகளை இரவு 10 மணிக்கு மேல் செய்யக்கூடாது. ஆனால் பயணிகள் மறுநாள் காலை அல்லது மதியம் பயணத்தின் போது உணவு கிடைப்பதற்கான ஆர்டர்களை இரவு 10 மணிக்கு மேல் செய்து கொள்ளலாம். உணவு டெலிவரிக்கு மட்டுமே தடை இருக்கிறது.

Article Published On: Thursday, November 10, 2022, 15:51 [IST]
English summary
Dont do these things trains after 10 pm
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+