பரம்பரை பணக்காரர்கள் மட்டும்தான் ரோல்ஸ் ராய்ஸ் வாங்க முடியுமா? சில உண்மைகளும், சில கட்டுக்கதைகளும்

செப்பல் அணிந்து கொண்டு வருபவர்கள் எவ்வளவு கோடி கொட்டி கொடுத்தாலும் மோட்டார் சைக்கிளை விற்பனை செய்ய மாட்டோம் என டிரையம்ப் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

By Arun

செப்பல் அணிந்து கொண்டு வருபவர்கள் எவ்வளவு கோடி கொட்டி கொடுத்தாலும் மோட்டார் சைக்கிளை விற்பனை செய்ய மாட்டோம் என டிரையம்ப் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சமயத்தில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன கார்களை வாங்குவது குறித்தும் சில கட்டுக்கதைகள் உலா வருகின்றன. அவை உண்மையா? பொய்யா? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

பரம்பரை பணக்காரர்கள் மட்டும்தான் ரோல்ஸ் ராய்ஸ் வாங்க முடியுமா? சில உண்மைகளும், சில கட்டுக்கதைகளும்

கார், பைக் வாங்கணும்னா அதிகபட்சமாக என்ன வேணும்? இதெல்லாம் ஒரு கேள்வியா பாஸ்? காசு இருந்தா போதுமே...!!! புடுச்ச கார், பைக்க வீட்டுக்கு ஓட்டீட்டு வந்தரலாமே...!!! அப்படினு நீங்க எல்லாம் கோரஸா சொல்றது நல்லா கேட்குது... ஆனா, கார், பைக் வாங்க கண்டிப்பா காசு மட்டும் போதாது பாஸ்...!!!

பரம்பரை பணக்காரர்கள் மட்டும்தான் ரோல்ஸ் ராய்ஸ் வாங்க முடியுமா? சில உண்மைகளும், சில கட்டுக்கதைகளும்

ட்ரையம்ப்னு ஒரு கம்பெனி... அந்த கம்பெனியோட மோட்டார் சைக்கிள் வாங்கணும்னு ஆசைப்பட்டா, ஒழுங்கா நீட்டா டிரெஸ் பண்ணீட்டு போகணும்... முக்கியமாக ஷார்ட்ஸ், செருப்பு போட்டுகிட்டு போனால், கண்டிப்பா அவங்க மோட்டார் சைக்கிள் விற்பனை பண்ண மாட்டாங்கா...!!!

பரம்பரை பணக்காரர்கள் மட்டும்தான் ரோல்ஸ் ராய்ஸ் வாங்க முடியுமா? சில உண்மைகளும், சில கட்டுக்கதைகளும்

ஷார்ட்ஸ், செருப்பு போட்டுகிட்டு போய், கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும், டிரையம்ப் கம்பெனியோட மோட்டார் சைக்கிள வாங்க முடியாது...!!! என்னங்க சொல்றீங்க... இப்படி எல்லாமா கண்டிஷன் போடுவாங்கனு நினைக்கறீங்களா? இது உண்மைதான்.

பரம்பரை பணக்காரர்கள் மட்டும்தான் ரோல்ஸ் ராய்ஸ் வாங்க முடியுமா? சில உண்மைகளும், சில கட்டுக்கதைகளும்

இந்த நேரத்தில் இன்னும் விசித்திரமான கண்டிஷன் எல்லாம் இருக்கறதா பல தகவல்கள் உலா வருது... அதாவது ஸ்டேட்டஸ் பாத்துதான் கார் விற்பனை பண்ணுவாங்களாம்... ஸ்டேட்ஸ் நல்லா இல்லைன்னா யாராக இருந்தாலும் நோஸ் கட்தானாம்... அப்படி வாடிக்கையாளர்களுக்கு, கார், பைக் கம்பெனிகள் விதித்திருக்கின்றன கட்டுப்பாடுகளில் எது உண்மை? எது பொய்? என்பது குறித்து தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

பரம்பரை பணக்காரர்கள் மட்டும்தான் ரோல்ஸ் ராய்ஸ் வாங்க முடியுமா? சில உண்மைகளும், சில கட்டுக்கதைகளும்

பிரிட்டீஷ் கம்பெனியின் வினோத உத்தரவு...!!!

ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள் லிமிடெட் நிறுவனம், நம்மை எல்லாம் ஆண்ட இங்கிலாந்து நாட்டை சேர்ந்தது. 1983ம் ஆண்டு தொடங்கப்பட்ட ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள் லிமிடெட் நிறுவனம், இங்கிலாந்து நாட்டின் லீசெஸ்டெர்ஷயர் கவுண்டியில் உள்ள ஹின்க்லே எனும் நகரை தலைமையிடமாக கொண்டு, இயங்கி வருகிறது.

பரம்பரை பணக்காரர்கள் மட்டும்தான் ரோல்ஸ் ராய்ஸ் வாங்க முடியுமா? சில உண்மைகளும், சில கட்டுக்கதைகளும்

ட்ரையம்ப் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு ஸ்போர்ட்ஸ் மாடல் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவன மோட்டார் சைக்கிளின் ஆரம்ப விலையே 7 லட்ச (போனிவில்லே மாடல்) ரூபாய்...!!! அதிகபட்ச விலை 22 லட்ச (ராக்கெட் 3) ரூபாய். எனவே சாமானியர்களால், டிரையம்ப் மோட்டார் சைக்கிள்களை வாங்க முடியாது.

பரம்பரை பணக்காரர்கள் மட்டும்தான் ரோல்ஸ் ராய்ஸ் வாங்க முடியுமா? சில உண்மைகளும், சில கட்டுக்கதைகளும்

அதற்காக பணம் இருந்தால் மட்டும் போதாது. நவ நாகரீகமாக உடையணிந்து சென்றால் மட்டுமே, டிரையம்ப் நிறுவனத்தின் மோட்டார் சைக்கிளை டெலிவரி எடுக்க முடியும். சமீபத்தில் மோசமாக உடையணிந்து கொண்டு டெலிவரி எடுக்க சென்ற 12 பேருக்கு மோட்டார் சைக்கிளை விற்பனை செய்ய முடியாது என டிரையம் இந்தியா நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

பரம்பரை பணக்காரர்கள் மட்டும்தான் ரோல்ஸ் ராய்ஸ் வாங்க முடியுமா? சில உண்மைகளும், சில கட்டுக்கதைகளும்

பர்ஃபெக்ஷன்தான் முக்கியமாம்...!!!

வாடிக்கையாளர்களிடம் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். அவர் ஹெல்மெட் அல்லது ரைடிங் பூட்ஸ் அணிய மறுத்தாலோ அல்லது லைசென்ஸ் இல்லாமல் இருந்தாலோ கூட அவருக்கு மோட்டார் சைக்கிளை விற்பனை செய்ய மாட்டோம் என டிரையம்ப் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.

பரம்பரை பணக்காரர்கள் மட்டும்தான் ரோல்ஸ் ராய்ஸ் வாங்க முடியுமா? சில உண்மைகளும், சில கட்டுக்கதைகளும்

ஒரு சில திடீர் பணக்காரர்கள், அகந்தையுடன் வருகின்றனர். அத்தகைய வாடிக்கையாளர்களை நாங்கள் நிராகரிக்கிறோம். 'இது எங்கள் பணம். நீ யார் முடிவு எடுக்க?' என அவர்கள் ஆக்ரோஷமாக எங்களிடம் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை எனவும் அந்நிறுவனம் வெளிப்படையாக கூறியுள்ளது.

பரம்பரை பணக்காரர்கள் மட்டும்தான் ரோல்ஸ் ராய்ஸ் வாங்க முடியுமா? சில உண்மைகளும், சில கட்டுக்கதைகளும்

டிரையம்ப் இந்தியா நிறுவனம் சொல்வது சரியா? தவறா? என்பதை இனி நீங்களே யூகித்து கொள்ளுங்கள். டிரையம்ப் நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்கள் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஒரு சில மோட்டார் சைக்கிள்கள் மட்டும் அரியானா மாநிலம் மனேசரில் அசெம்பிள் செய்யப்படுகின்றன.

பரம்பரை பணக்காரர்கள் மட்டும்தான் ரோல்ஸ் ராய்ஸ் வாங்க முடியுமா? சில உண்மைகளும், சில கட்டுக்கதைகளும்

மிரட்சியடைய வைக்கும் ரோல்ஸ் ராய்ஸ்...!!!

டிரையம்ப் இந்தியா நிறுவனத்தின் நிலைப்பாடு என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் காலம் காலமாக ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனம் பற்றி உலா வரும் பல தகவல்கள் நம்மை மிரட்சியடைய வைக்கும்.

பரம்பரை பணக்காரர்கள் மட்டும்தான் ரோல்ஸ் ராய்ஸ் வாங்க முடியுமா? சில உண்மைகளும், சில கட்டுக்கதைகளும்

இந்தியாவில் திரையுலகினரான அமிதாப்பச்சன், அமிர்கான், அக்ஷய்குமார், சஞ்சய் தத்தின் மனைவி மன்யட்டா தத், பிரியங்கா சோப்ரா, சிரஞ்சீவி, இளையதளபதி விஜய், டைரக்டர் சங்கர் உள்ளிட்ட திரையுலகினரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உள்ளன.

பரம்பரை பணக்காரர்கள் மட்டும்தான் ரோல்ஸ் ராய்ஸ் வாங்க முடியுமா? சில உண்மைகளும், சில கட்டுக்கதைகளும்

இந்திய தொழிலதிபர்களை எடுத்து கொண்டால், கோத்ரேஜ் குழுமங்களின் தலைவர் அதி கோத்ரேஜ், ஹெச்சிஎல் நிறுவன நிறுவனர்களில் ஒருவரான ஷிவ் நாடார், விஜய் மல்லையா உள்பட பலரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உள்ளன.

பரம்பரை பணக்காரர்கள் மட்டும்தான் ரோல்ஸ் ராய்ஸ் வாங்க முடியுமா? சில உண்மைகளும், சில கட்டுக்கதைகளும்

பணம் மட்டும் போதாதா?

ஆனால் ரோல்ஸ் ராய்ஸ் காரை, பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு வாங்கி விட முடியாது என்று பலர் பேசி கேள்விபட்டிருப்பீர்கள். ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது இமேஜை தக்க வைத்து கொள்வதற்காக, ஸ்டேட்ஸ் பார்த்துதான் காரை விற்பனை செய்யும் என்று பலர் கூறி வருகிறார்கள்.

பரம்பரை பணக்காரர்கள் மட்டும்தான் ரோல்ஸ் ராய்ஸ் வாங்க முடியுமா? சில உண்மைகளும், சில கட்டுக்கதைகளும்

அதாவது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, பேச்சு, மொழி பரிசோதனை, இசை பரிசோதனை, நவ நாகரீக உடை அணிவது தொடர்பான பரிசோதனை என பலகட்ட பரிசோதனைகள் நடத்தப்படுமாம். இதில், எல்லாம் தேறினால் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு உரிமையாளர் ஆக முடியும் என பலர் தெரிவிக்கின்றனர்.

பரம்பரை பணக்காரர்கள் மட்டும்தான் ரோல்ஸ் ராய்ஸ் வாங்க முடியுமா? சில உண்மைகளும், சில கட்டுக்கதைகளும்

அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட நபரின் சமூக அந்தஸ்து, பின்புலம் குறித்தும் கூட ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் முழுமையாக விசாரிக்கும். அதன்பின்பே சம்பந்தப்பட்ட நபருக்கு காரை விற்பனை செய்யலாமா? வேண்டாமா? என்பது குறித்து ரோல்ஸ் நிறுவனம் முடிவெடுக்கும் என கூறுகின்றனர்.

பரம்பரை பணக்காரர்கள் மட்டும்தான் ரோல்ஸ் ராய்ஸ் வாங்க முடியுமா? சில உண்மைகளும், சில கட்டுக்கதைகளும்

மல்லிகா ஷெராவத்துக்கு வழங்காதது ஏன்?

இதுபோன்ற க்ரிட்டிரியா-வில் தேர்ச்சி பெறாததால்தான், பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு, ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனை செய்யப்படவில்லை என்ற ஒரு பேச்சு அடிபட்ட காலமும் உண்டு.

பரம்பரை பணக்காரர்கள் மட்டும்தான் ரோல்ஸ் ராய்ஸ் வாங்க முடியுமா? சில உண்மைகளும், சில கட்டுக்கதைகளும்

அரசியல்வாதிகளிடம் ஏன் இல்லை?

இதை முழுமையாக நம்பும் பலர், இந்திய அரசியல்வாதிகளிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இல்லாமல் இருப்பதற்கு இவைதான் காரணம் என வேடிக்கையாக கிண்டல் செய்வதுண்டு. ஆனால் ஒரு சில அரசியல்வாதிகளிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருக்கவே செய்கின்றன.

பரம்பரை பணக்காரர்கள் மட்டும்தான் ரோல்ஸ் ராய்ஸ் வாங்க முடியுமா? சில உண்மைகளும், சில கட்டுக்கதைகளும்

கட்டுக்கதைகள்

மல்லிகா ஷெராவத்தும் கூட, ரோல்ஸ் ராய்ஸ் கார் தனக்கு கிடைக்காததை பற்றி வெளியான தகவல் தவறு என்று பின்னாளில் மறுத்தார். ஆக ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்குவது தொடர்பாக வெளியாகும் தகவல்கள் அனைத்தையும் கட்டுக்கதைகள் என்றே எடுத்து கொள்ளலாம்.

பரம்பரை பணக்காரர்கள் மட்டும்தான் ரோல்ஸ் ராய்ஸ் வாங்க முடியுமா? சில உண்மைகளும், சில கட்டுக்கதைகளும்

ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்குவதற்கு உரிய பணம் மட்டும் இருந்தாலே, அந்நிறுவனம் சம்பந்தப்பட்ட நபருக்கு மகிழ்ச்சியாக காரை விற்பனை செய்யும். பரம்பரை பணக்காரர்கள் மட்டும்தான் வாங்க முடியும் என்பதெல்லாம் கிடையாது. இதில், எவ்வித சந்தேகமும் வேண்டாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Don’t go to buy a Triumph wearing slippers. read in tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X