பென்ட்லி காரின் மானத்தை வாங்கிய போலி அலாய் வீல்... !!

வெளிச்சந்தையில் கிடைக்கும் போலி அலாய் வீல்களை பயன்படுத்துவது எந்தளவு அபாயகரமானது என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

போலி உதிரிபாகங்கள் மலிந்து கிடக்கும், வெளி மார்க்கெட்டில் காருக்கான ஆக்சஸெரீகளை வாங்கும்போது மிகுந்த உஷாராக இருக்க வேண்டியது அவசியம். போலி உதிரிபாகங்களால் காருக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

ஏன், விபத்துக்கு இட்டு செல்லும் வாய்ப்பு கூட உண்டு. அதுபோன்று, வெளி மார்க்கெட்டில் வாங்கி பொருத்தப்பட்ட அலாய் வீல்களால் பென்ட்லி கார் சந்தித்த அவமானகரமான நிகழ்வு இதற்கு சான்றாக இருக்கிறது.

பென்ட்லி காரின் மானத்தை வாங்கிய போலி அலாய் வீல்... !!

அண்மையில் டெல்லியில் சாலையில் சென்று கொண்டிருந்த பென்ட்லி கார் ஒன்றில் பொருத்தப்பட்டு இருந்த அலாய் வீல் ஒன்றின் ரிம் தனியாக கழன்றுவிட்டது. கார் மெதுவாக வந்ததால் பெரும் விபத்து அபாயத்திலிருந்து தப்பி இருக்கிறது. வெளி மார்க்கெட்டில் இருந்து வேறு கார் மாடல் ஒன்றின் இந்த அலாய் வீல்களை குறைவான விலையில் வாங்கி பொருத்தி இருக்கின்றனர்.

பென்ட்லி காரின் மானத்தை வாங்கிய போலி அலாய் வீல்... !!

காரின் கவர்ச்சிக்காக வாங்கி பொருத்தப்பட்ட அந்த தரம் குறைவான அலாய் வீல் பெரும் விபரீதத்தை ஏற்படுத்தி இருக்கும். அதிர்ஷ்டவசமாக கார் பெரும் விபத்திலிருந்து தப்பி இருக்கிறது. இதுபோன்று வெளிமார்க்கெட்டில் தரம் குறைவான அலாய் வீல்களை வாங்குவதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.

பென்ட்லி காரின் மானத்தை வாங்கிய போலி அலாய் வீல்... !!

கார் தயாரிப்பு நிறுவனங்கள் கொடுக்கும் அலாய் வீல்கள், ஒவ்வொரு காரின் எடைக்கு தக்கவாறு தரமுடைய அலாய் வீல்களை பொருத்துகின்றன. வெளி மார்க்கெட்டில் கிடைக்கும் தரம் குறைவான அலாய் வீல்கள் எந்தளவு எடையை தாங்கும் வல்லமை கொண்டது என்பது தெரிவிக்கப்படுவதில்லை.

பென்ட்லி காரின் மானத்தை வாங்கிய போலி அலாய் வீல்... !!

இதுபோன்ற அலாய் வீல்களை பொருத்திக் கொண்டு அதிவேகத்தில் செல்லும்போது நிச்சயம் விபத்து அபாயம் இருப்பதை தவிர்க்க முடியாது. அலாய் வீல் ரிம்மில் தெறிப்பு ஏற்படுவதற்கும், அதனால் டயர் வெடிப்புக்கு வழிகோலுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

பென்ட்லி காரின் மானத்தை வாங்கிய போலி அலாய் வீல்... !!

அலாய் வீல் ரிம்கள் அளவு மிகத் துல்லியமாக இருத்தல் அவசியம். ட்யூப்லெஸ் டயர்களை பொருத்தும்போது காற்றழுத்தம் குறைவதற்கும், குறைவான காற்றழுத்தத்துடன் வாகனத்தை அதிவேகத்தில் இயக்கும்போது டயர் வெடிப்பதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

பென்ட்லி காரின் மானத்தை வாங்கிய போலி அலாய் வீல்... !!

வெளிச்சந்தையில் இருந்து அலாய் வீல் உள்ளிட்ட ஆக்சஸெரீகளை வாங்கி பொருத்தும்போது, கார் தயாரிப்பாளர் கொடுக்கும் வாரண்டியும் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. ஏனெனில், கார் சஸ்பென்ஷன் அமைப்பை இதுபோன்ற வெளிச்சந்தை அலாய் வீல்கள் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

பென்ட்லி காரின் மானத்தை வாங்கிய போலி அலாய் வீல்... !!

வாரண்டி மட்டுமின்றி, வெளிச்சந்தையில் வாங்கி அலாய் வீல் உள்ளிட்ட ஆக்சஸெரீகளை பொருத்தும்போது காப்பீடு கிடைப்பதிலும் சிக்கல் இருக்கிறது. எனவே, ஏதேனும் ரிப்பேர் அல்லது உதிரிபாகத்தை மாற்ற வேண்டுமெனில், கையிலிருந்துதான் பணத்தை கொடுத்து சரி செய்ய வேண்டி இருக்கும்.

பென்ட்லி காரின் மானத்தை வாங்கிய போலி அலாய் வீல்... !!

இதுபோன்ற பிரச்னைகளை தவிர்ப்பதற்கு, அங்கீகரிக்கப்பட்ட கார் டீலர்களிடமிருந்து கிடைக்கும் அலாய் வீல்களை வாங்கி பொருத்தவும். வெளிச்சந்தையில் கிடைக்கும் தரம் குறைவான அலாய் வீல்களை தவிர்க்கவும். விலை குறைவான சீன தயாரிப்பு ஆக்சஸெரீகளையும் வாங்கி பொருத்தாதீர்கள்.

பென்ட்லி காரின் மானத்தை வாங்கிய போலி அலாய் வீல்... !!

அப்படி வெளி மார்க்கெட்டில் வாங்கும்போது சிறந்த பிராண்டுகளின் ஆக்சஸெரீகளை தேர்வு செய்து வாங்கவும். குறிப்பாக, அலாய் வீல்களை வாங்கும்போது அதன் PCD அளவு சரியாக இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும். அதாவது, அலாய் வீல்களில் இருக்கும் போல்ட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கும் வட்ட வடிவ அளவுதான் அது.

பென்ட்லி காரின் மானத்தை வாங்கிய போலி அலாய் வீல்... !!

அந்த அளவு சரியாக இல்லாதபட்சத்தில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அலாய் வீல் என்றில்லை, வாகனங்களை பொருத்தவரை தரமான ஆக்சஸெரீகள் மற்றும் உதிரிபாகங்களை பொருத்துவது அவசியம். மலிவு விலையில் கிடைக்கும் தரமற்ற பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்தல் அவசியம்.

Article Published On: Tuesday, April 4, 2017, 13:19 [IST]
English summary
Don't Use Fake Alloy Wheels. Read in Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+