ரெண்டு மாடி ரயில் வரப்போகுது! இப்படி ஒரு ஐடியா யாருக்கே ஈஸியா வராது!
இந்தியா பயணிகள் ரயில், சரக்கு ரயில் என இரண்டு தனித்தனி ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்த இரண்டு ரயில்களையும் ஒன்றாக சேர்த்து ஒரே ரயிலில் பயணிகளையும் சரக்குகளையும் ஏற்றி செல்லும் வகையில் புதிய டபுள் டெக்கர் ரயில் பெட்டிகளை உருவாக்க ரயில்வே நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. விரைவில் இந்த ரயில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் மக்களுக்கு நீண்ட தூர பயணம் செய்ய எப்படி ரயில் உதவியாக இருக்கிறதோ அதேபோல சரக்குகளை குறைந்த விலையில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லவும் ரயில் பயணம் தான் உதவியாக இருக்கிறது. குறிப்பாக அதிக எடை கொண்ட பொருட்களை எடுத்துச் செல்வதில் சரக்கு ரயில்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. கடந்த 2024 ஆம் தேதியில் மட்டும் மொத்தம் 1591 மில்லியன் டன் சரக்குகள் சரக்கு ரயில்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த சரக்கு போக்குவரத்தில் 28 சதவீதமான சரக்கு போக்குவரத்து ரயில்வே மூலம் தான் நடந்து வருவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்நிலையில் சரக்கு ரயில் அதிகரித்து வரும் நிலையில் அதில் உள்ள பிரச்சினைகளை கலைவதற்காக ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சரக்கு ரயில்கள் என்றால் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சரக்குகள் இருந்தால் மட்டுமே சரக்கு ரயில் எடுத்துச் செல்வது லாபமாக இருக்கும். குறைந்த அளவு கொண்ட சரக்குகளை தற்போது உள்ள தொழிற்நுட்பத்தில் சரக்கு ரயிலில் எடுத்துச் செல்வது பெரிய லாபம் இல்லை.

இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வை ஏற்படுத்துவதற்காக இந்திய ரயில்வே நிர்வாகம் பயணிகள் செல்லும் அதே ரயிலில் சரக்குகளையும் எடுத்து செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பயணிகள் பயணம் செய்யும் அதே ரயிலில் சரக்குகளும் கொண்டு செல்லும்போது சரக்குக்காக தனியாக ரயில்வே நிர்வாகம் எந்த செலவையும் செய்ய வேண்டிய தேவை இல்லை.
சரக்கு ரயில் இயக்கம் அதே செலவிலேயே பயணிகள் ரயிலையும் இயக்க முடியும். இதனால் பயணிகளுக்கும் டிக்கெட் விலை குறைவாக கிடைக்கும். சரக்குகளும் குறைந்த விலையில், குறைந்த அளவிலான சரக்குகளும் ரயில் மூலம் எடுத்துச் செல்ல முடியும். இதற்காக ரயில்வே நிர்வாகம் பயணிகள் மற்றும் சரக்குகளை எடுத்துச் செல்லும் வகையில் புதிய டபுள் டெக்கர் ரயில் பெட்டிகளை தயாரிக்க முடிவு செய்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள கபூர்தலா என்ற இடத்தில் ரயில் பெட்டிகளை தயாரிக்கும் ஆலை நடந்து வருகிறது. இந்த ஆலையில் தான் தற்போது இந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இறுதி நிலையை எட்டியுள்ள நிலையில் விரைவில் இதற்கான சோதனை ஓட்டம் நடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சோதனை ஓட்டம் வெற்றியடையும் பட்சத்தில் இந்த சரக்கு மற்றும் பயணிகள் ஆகியோரை ஒரே பெட்டியில் எடுத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்ட பெட்டி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த டபுள் டெக்கர் பெட்டியில் கீழ் தளத்தில் சரக்குகளையும் மேல் தளத்தில் பயணிகளையும் ஏற்றி பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த டபுள் டெக்கர் சரக்கு மற்றும் பயணிகள் பெட்டிகளை தயாரிப்பதற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு ரூபாய் 2.7 கோடி முதல் ரூபாய் மூன்று கோடி வரை செலவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு செலவாகும் இதை பயன்பாட்டிற்கு கொண்டு வரும்போது அதிக அளவிலான பயனை தரும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இப்படியான ரயில் பெட்டிகளை அதிகம் தயாரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்கும்போது மற்றொரு பக்கம் வந்தே பாரத் பயணிகள் ரயில் போல வந்தே கார்கோ என்ற சரக்கு ரயில் பெட்டிகளையும் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ள பெட்டிகள் போல அல்லாமல் பல நவீன வசதிகள் கொண்ட பெட்டிகளாக இது உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் பல்வேறு விதமான சரக்குகளையும் இதில் எடுத்து செல்வதற்கு வாய்ப்புகள் இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரயில்வே நிர்வாகம் என்பது மிக முக்கியமான துறையாக இருக்கிறது. உலகில் மிகப்பெரிய ஊழியர்களைக் கொண்ட நிறுவனமாக இருக்கிறது. ரயில்வே நிர்வாகம் இப்படியான புதுமையான கண்டுபிடிப்புகளுடன் பயன்பாட்டிற்கு வரும்போது இது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதே நேரம் பொருளாதார வளர்ச்சியும் பெரிய அளவில் மேம்படும். நிச்சயம் இந்த முயற்சிக்கு நம் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








