கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
ஒரு காலத்தில் இந்தியா முழுக்க உள்ள பல்வேறு மாநிலங்களில் டபுள் டக்கர் பேருந்துகள் (Double Decker Bus) பரவலாக பயன்பாட்டில் இருந்தன. ஆனால், இப்போது எங்கோ மூலைக்கு ஒன்றுதான் அது பயன்பாட்டில் இருக்கின்றது. அதுவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பொருட்டே கேரளா போன்ற ஒரு சில மாநிலங்கள் இப்போது டபுள் டக்கர் பேருந்தை பயன்பாட்டிற்கு களமிறக்கிக் கொண்டிருக்கின்றன.
ஆகையால், இப்போது மீண்டும் டபுள் டக்கர் பேருந்துகளில் பயணிக்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்க ஆரம்பித்திருக்கின்றது. மேலும், டபுள் டக்கர் பேருந்தைத் தொடர்ந்து கேரள மாநில வாசிகள், டபுள் டக்கர் ரயிலில் (Double Decke Train) பயணிப்பதற்கான சூழலும் உருவாகிக் கொண்டு இருக்கின்றது.

Image Source கேரள ரயில் போக்குவரத்து வரலாற்றிலேயே முதல் முறையாக கேரளாவில் டபுள் டக்கர் ரயில் இயக்கப்பட்டு இருக்கின்றது. சோதனையோட்டமாக கோவை - கேஎஸ்ஆர் பெங்களூரு வழித்தடத்தில் இயக்கப்படும் டபுள் டக்கர் ரயிலான 'உதய் எக்ஸ்பிரஸ்' (Coimbatore-KSR Bengaluru Uday Express) சோதனையோட்டமாக கேரளா வரை இயக்கப்பட்டு இருக்கினறது.
பாலக்காடு சந்திப்பு வரை ரயில் இயக்கப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்து இருக்கின்றது. முழுக்க முழுக்க ஏசி பெட்டி (AC chair car)களைக் கொண்ட டபுள் டக்கர் ரயிலே உதய் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். இந்தியாவின் பிரபல ரயில்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ரயில் பொள்ளாச்சி - கோவை வழித்தடத்தையும் உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது.
புதிதாக மேம்படுத்தப்பட்ட பொள்ளாச்சி வழித்தடத்தில் நிலவும் ரயில் பற்றாக்குறையைப் போக்கும் பொருட்டும் இந்த நீட்டிப்பை விரிவாக்க தென்னக ரயில்வே திட்டமிட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த ரயில் புதன் காலையே அதன் முதல் சோதனையோட்டத்தைத் தொடங்கியது. 8 மணிக்கு கோயம்பத்தூரில் இருந்து புறப்பட்ட அந்த ரயில் பாலக்காடு டவுன் நிலையத்தை 10.45 மணிக்கும், பாலக்காடு சந்திப்பை 11.05 மணிக்கும் சென்று சேர்ந்தது.
இதற்கு பின்னர் அங்கிருந்து 11.35 மணிக்கு புறப்பட்டு மீண்டும் 2.40 மணிக்கு கோவையை அந்த ரயில் வந்தடைந்தது. இந்த ரயில் சோதனை ஓட்டமாக கேரளா வரை இயக்கப்பட்டது கேரள மக்கள் மத்தியில் குறிப்பாக, ரயில் பயணங்களை அதிகம் விரும்புவோர் மத்தியில் மிகப் பெரிய மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றிருக்கின்றது.
விரைவில் இந்த ரயில் போக்குவரத்து வழக்கமான போக்குவரத்தாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அது எப்போது என்கிற விபரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், பலரின் கவனத்தை இந்த ரயில் இப்போதே ஈர்க்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, எப்போது இந்த ரயில் சேவைத் தொடங்கப்படும் என்பதே பலரின் கேள்வியாக மாறி இருக்கின்றது.
எனவே சீக்கிரமே கேரளாவுக்கு டபுள் டக்கர் ரயில் சேவைத் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 80ஸிலும் மற்றும் 90ஸின் தொடக்க காலகட்டத்திலும் டபுள் பேருந்துகள் அதிகளவில் பயன்பாட்டில் இருந்தன. எனவே, 90ஸ் கிட்ஸ்கள் தங்களின் குழந்தைப் பருவத்தில் கட்டாயம் டபுள் டக்கர் பேருந்தில் பயணித்திருப்பார்கள் என நம்பப்படுகின்றது.
இந்த நிலையிலேயே குறிப்பிட்ட மாநில அரசுகள் மீண்டும் டபுள் டக்கர் பேருந்துகளை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் கேரள அரசு முனைப்புடன் இருக்கின்றது. இதன் விளைவாகவே சமீபத்தில் அது ஓர் டபுள் டக்கர் பேருந்தை சுற்றுலா சேவையில் இணைத்தது. இந்த நிலையிலேயே அந்த மாநிலத்தில் விரைவில் டபுள் டக்கர் ரயிலின் சேவையும் தொடங்கப்படுவதற்கான சூழல் உருவாகி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேரளாவுக்கு இந்த டபுள் டக்கர் ரயிலில் பயணிக்கும்போது தனித்துவமான பயண அனுபவம் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. இந்தியாவில் உள்ள அழகிய மாநிலங்களில் கேரளாவும் ஒன்றாகவும், இதன் பச்சைபசேல் நிலப்பரப்பு பார்த்து ரசிக்க இரண்டு கண்கள் போதாது. இந்த அழகையே டபுள் டக்கர் ரயிலின் வாயிலாக ரசிக்கும் சூழல் விரைவில் நமக்கு கிடைக்க இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








