ஆஹா, ஓஹோ அற்புதம்... பிசினஸ் ஜெட் விமானத்தை தோற்கடிக்கும் கார்!

By Saravana

கார்களில் கஸ்டமைஸ் செய்வதை புதிய உச்சத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது நீங்கள் இப்போது பார்த்து ரசிக்கப் போகும் கார். சில லட்சங்கள் என்பதை தாண்டி, கோடிகளை கொட்டி கஸ்டமைஸ் செய்யப்பட்டிருக்கும் இந்த காரின் வசதிகள் தனி நபர் ஜெட் விமானத்தை தோற்கடிக்கும் விதத்தில் இருக்கிறது.

மிகவும் விசேஷமான கட்டமைப்பு கொண்ட இந்த எஸ்யூவி வகை காரின் உட்புறம் கலியுக தேவலோகமாக இருக்கிறது. வாருங்கள், அந்த கஸ்டமைஸ் எஸ்யூவியின் அழகை உங்கள் கண்களும் பருகும் வாய்ப்பு ஸ்லைடரில் காத்திருக்கிறது.

உரிமையாளர்

உரிமையாளர்

உலகின் பெரும் பணக்கார இசையமைப்பாளரான டாக்டர் ட்ரீ என்பவருக்காக இந்த எஸ்யூவி கார் மிக விசேஷமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இவரிடம் 41.29 பில்லியன் ரூபாய் சொத்து மதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதால், உலகிலேயே பெரும் பணக்கார இசையமைப்பாளராக விளங்குகிறார்.

விருப்பம்

விருப்பம்

டாக்டர். ட்ரீ தனது விருப்பத்திற்கு ஏற்ப ஒரு எஸ்யூவியை கஸ்டமைஸ் செய்ய எண்ணியதோடு, அந்த பொறுப்பை கலிஃபோர்னியாவை சேர்ந்த பெக்கர் ஆட்டோமேட்டிவ் டிசைன் நிறுவனத்திடம் வழங்கினார்.

மாடல் விபரம்

மாடல் விபரம்

2016 கேடில்லாக் எஸ்கலேட் இஎஸ்வி என்ற எஸ்யூவி வகை கார்தான் ட்ரீயின் விருப்பத்திற்கு மாறுதல்கள் செய்ய எடுத்துக் கொள்ளப்பட்டது.

மாறுதல்கள்

மாறுதல்கள்

22 இன்ச் அலாய் வீல்கள், உட்புறத்தில் தலை இடிக்காதவாறு இருப்பதற்காக, உயர்த்தப்பட்ட கூரை அமைப்பு, மேட் ஃபினிஷ் செய்யப்பட்டது. மேலும், இந்த காரின் நீளமும் சற்று அதிகரிக்கப்பட்டது.

இன்டீரியர்

இன்டீரியர்

உட்புறத்தில் மிக விசாலமான அறை போன்று பல்வேறு வசதிகளுடன் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. பல்வேறு வசதிகள் கொண்டதாக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

இருக்கைகள்

இருக்கைகள்

தாராளமாக அமர்வதற்கு ஏற்ற, உயர்வகை லெதர் கொண்ட சாய்மான இருக்கைகள் போடப்பட்டிருக்கின்றன. முன்னோக்கி இரண்டு பெரிய இருக்கைகளும், இதரவர்களுடன் உரையாட வசதியாக, பின்னோக்கிய மூன்று இருக்கைகளும் போடப்பட்டு இருக்கின்றன. டிரைவர் கேபின் தடுப்பு கொடுக்கப்பட்டு பிரிக்கப்பட்டிருக்கிறது.

MOST READ: அதிர்ச்சி... தமிழக காருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த தெலங்கானா போலீஸ்: எதற்கு தெரியுமா!

படுக்கை வசதி...

படுக்கை வசதி...

இருக்கையை சாய்த்துக் கொண்டு படுக்கையாக மாற்றிக் கொண்டு சயனத்தில் ஆழ முடியும்.

பொழுதுபோக்கு வசதிகள்

பொழுதுபோக்கு வசதிகள்

பெரிய டிவி திரை, இன்டர்நெட் வசதி, மியூசிக் சிஸ்டம் என பயணத்தின் அலுப்பு தெரியாத அளவுக்கு சிறப்பான இன்டீரியர் அம்சங்களை பெற்றிருக்கிறது.

MOST READ: ஹேப்பி பர்த் டே தலைவி! சன்னி லியோன் பற்றிய இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்தால் பிரம்மித்து போவீர்கள்...

இதர வசதிகள்

இதர வசதிகள்

இருக்கைகளுக்கு முன்னால் பொருட்களை வைத்துக் கொள்வதற்கு வசதியாக மடக்கி விரிக்கும் டேபிள்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

விளக்குகள்

விளக்குகள்

கூரையின் உட்புறத்தில் வெளிச்சத்தை தரும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. மர வேலைப்பாடுகள், அதில் தொடு உணர் பட்டன்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

MOST READ: இன்ஸ்பெக்டரின் தவறை நடுரோட்டில் தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

அலுவலகம்

அலுவலகம்

பயணத்தின்போதே அலுவலகம் மற்றும் அவரது இசையமைப்புப் பணிகளை செய்து கொள்ளும் விதத்தில் கூடுதல் வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. உலகிலேயே மிகவும் சிறப்பான கஸ்டமைஸ் எஸ்யூவி மாடல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

மதிப்பு

மதிப்பு

ரூ.1.33 கோடி மதிப்பீட்டில் இந்த எஸ்யூவியில் மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Dr. Dre. is the world's richest musician with a net worth of around $620 million (Rs. 41.29 Billion). With a bank balance that swollen, it is no wonder that he likes to flash the money to get the best possible cars for himself.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more